விம்பிள்டன் பார்ட்டிக்கு போர்ஷே காரில் ஒன்றாக வந்த ஷரபோவா, மார்க் வெப்பர்!
லண்டனில், விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. இதற்கு முன்னதாக கடந்த வார இறுதியில் ஒரு ஸ்பெஷல் விருந்து நடந்தது. அதில், ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதில், அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த இரு பிரபலங்கள் டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவாவும், பிரபல கார் பந்தய வீரர் மார்க் வெப்பரும்தான்.
ஆம், போர்ஷே விளம்பர தூதராக இருந்து வரும் ஷரபோவாவும், லீ மான்ஸ் ரேஸில் போர்ஷே அணி வீரராக பங்கேற்ற மார்க் வெப்பரும் அந்த விருந்துக்கு போர்ஷே ஸ்பைடர் 918 காரில் கலக்கலாக வந்து இறங்கினர். கோரிங் ஓட்டலிலிருந்து கென்சிங்டனிலுள்ள ரூஃப் கார்டன் ஓட்டலுக்கு இருவரும் போர்ஷே ஹைபிரிட் காரில் இருவரும் ஒன்றாக வந்தனர்.

ஷரபோவா புகழாராம்
போர்ஷே 918 ஸ்பைடர் காரின் செயல்திறனும், மார்க் வெப்பரின் டிரைவிங்கும் சிறப்பாக இருந்ததாக மரியா ஷரபோவா புகழ்ந்தார்.

கார் சூப்பர்
இதேபோன்று மார்க் வெப்பரும் தனது பங்குக்கு போர்ஷே 918 காரின் செயல்திறனை புகழந்து கருத்து தெரிவித்தார். அத்துடன், மரியாவுடன் இணைந்து வந்ததும் மகிழ்ச்சி கொடுத்ததாக தெரிவித்தார்.

போர்ஷே ஸ்பைடர் 918
லீ மான்ஸ் ரேஸில் பயன்படுத்தப்பட்ட போர்ஷே ஸ்பைடர் 919 ஹைபிரிட் காரின் ரோடு வெர்ஷன் மாடல்தான் போர்ஷே 918 ஸ்பைடர். டிசைனை பார்த்தாலே சொக்க வைத்துவிடும் அழகு கொண்டது.

எஞ்சின்
இந்த காரில் 608 எச்பி சக்தியை தரவல்ல 4.6 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இதுதவிர, இரண்டு ஆக்சில்களிலும் இரு மின் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கிறது. இவை அனைத்தும் சேர்த்து 887 எச்பி ஆற்றலை அளிக்க வல்லது இந்த ஹைபிரிட் கார். போர்ஷே 7 ஸ்பீடு பிடிகே டிரான்ஸ்மிஷன் கொண்டது.

பெர்ஃபார்மென்ஸ்
0 - 97 கிமீ வேகத்தை வெறும் 2.5 வினாடிகளில் தொட்டுவிடும் வல்லமை கொண்ட இந்த கார் மணிக்கு 344 கிமீ வேகம் வரை செல்லும் வல்லமை கொண்டது.


Click it and Unblock the Notifications








