ஷேர் ஆட்டோவை நிறுத்தியதும் போலீசாருக்கு காத்திருந்த பெரும் அதிர்ச்சி! இதுக்கு எல்லாம் பாவமே பார்க்க கூடாது!!
ஏழைகளின் போக்குவரத்து நண்பன் என 3-சக்கர ஷேர் ஆட்டோ ரிக்ஷா (Share Auto Rickshaw)-ஐ கூறலாம். முன், பின் தெரியாதவர்களுடன் நெருக்கமாக அமர்ந்துக் கொண்டு பயணம் செய்ய வைக்கும் ஷேர் ஆட்டோக்கள் பேருந்து, ரயில்களை போன்று சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்துவதாக அமைகின்றன. இருப்பினும், ஷேர் ஆட்டோ டிரைவர்கள் செய்வது அனைத்தையும் பொறுத்துக் கொள்ள முடியாது. குறிப்பாக, விதிமுறையை மீறி ஒரே நேரத்தில் அதிக பயணிகளை ஏற்றி செல்வதை பார்த்திருப்பீர்கள். இது பரவலாக அன்றாடம் நடக்கக்கூடியதுதான் என்றாலும், இங்கு ஒரு ஷேர் ஆட்டோ ரிக்ஷா டிரைவர் இந்த காரணத்துக்காக போலீசாரிடம் சிக்கியுள்ளார். அதன்பின் என்ன நடந்தது என்பதை இனி பார்க்கலாம்.
வழக்கமான 3-சக்கர ஆட்டோவை விட குறைவான பயண கட்டணத்தை கொண்டிருப்பதினாலேயே ஷேர் ஆட்டோவை நிறைய பேர் பயன்படுத்துகின்றனர். நார்மல் ஆட்டோவில் 1 பயணியிடம் இருந்து கிடைக்கும் கட்டணத்தை ஷேர் ஆட்டோவில் 4-5 பேரிடம் இருந்து பெற்றுக் கொள்கின்றனர். இதற்கேற்ப ஷேர் ஆட்டோக்கள் நன்கு அளவில் பெரியதாக உருவாக்கப்படுகின்றன.

வாகனத்தின் அளவு அதிகரிப்பதினால் அதற்கேற்ப சவுகரியமான பயணத்தையும் ஷேர் ஆட்டோக்களில் பெற முடியதில்லை. ஆனால், நார்மல் ஆட்டோவில், முடிந்தவரையில் பயணிகளுக்கு சிறப்பான பயணத்தை வழங்க வேண்டும் என்பதற்காக கூடுதல் குஷின் கொண்ட இருக்கைகள், தடுப்பு கம்பிகள், வண்ண விளக்குகள் போன்றவை இருப்பதை பார்க்க முடியும். ஷேர் ஆட்டோக்களை பெரும்பாலும் குறுகிய தூர பயணத்திற்காக மட்டுமே மக்கள் பயன்படுத்துவதால், அதில் கிடைக்கும் அசவுகரியமான பயணத்தை எல்லாம் பெரியதாக கண்டுக் கொள்வதில்லை.
ஆனாலும், பயணிகள் பொறுத்துக் கொண்டாலும் போலீசார் பொறுத்துக் கொள்வார்களா... ஒவ்வொரு பயணியிடம் இருந்தும் குறைவான கட்டணமே வசூலிக்கப்படுவதால், அதிக வருவாயை குறைந்த எரிபொருள் செலவில் பெற வேண்டும் என்பதற்காக முடிந்தவரையில் ஒரே பயணத்தில் நிறைய பயணிகளை அழைத்து செல்ல ஷேர் ஆட்டோ டிரைவர்கள் முயற்சிக்கின்றனர். இதுவே அவர்களது அன்றாட பிழைப்பை ஓட்டுகிறது என்றாலும், இது விதிமுறை மீறிய செயல் ஆகும்.

ஏனெனில் போலீசாரின் விதிமுறையின்படி, டிரைவரை கணக்கில் சேர்க்காமல் ஒரு ஷேர் ஆட்டோவில் அதிகப்பட்சமாக 4- 5 பயணிகளை மட்டுமே அழைத்து செல்ல வேண்டும். சிறுவர், சிறுமிகளாக இருந்தால் அதிகப்பட்சமாக 6 பேர் வரையில் அழைத்து செல்லலாம். ஆனால், இங்கு ஒரு ஷேர் டிரைவர், போலீசாரையே அதிர்ச்சியாக்கும் விதமாக ஒரே நேரத்தில் சுமார் 15 பயணிகளை தனது ஆட்டோ ரிக்ஷாவில் அழைத்து சென்றுள்ளார்.
ஆட்டோவில் இருந்து பிதுங்கியப்படியும், தொங்கியப்படியும் பயணிகள் பயணம் செய்துள்ளனர். இதனை கண்டதும், சோதனை பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் அந்த ஆட்டோவை நிறுத்தினர். ஆட்டோக்குள் இருந்து ஒவ்வொரு பயணிகளாக வரிசையாக வந்துக் கொண்டே இருப்பதை பார்த்ததும் போலீசார் ஷாக் ஆகிவிட்டனர். இதனையடுத்து, சம்பந்தப்பட்ட ஷேர் ஆட்டோ டிரைவருக்கு அதிரடியாக ரூ.6,500 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்த சம்பவம், உத்தர பிரதேச மாநிலம், கானூஜ் என்கிற பகுதியில் நடந்துள்ளது. போக்குவரத்து போலீசார் தங்களது வழக்கமான வாகன சோதனை பணிகளில் இந்த ஷேர் ஆட்டோ ஈடுப்பட்டு கொண்டிருந்த போது, போலீசாரிடம் இந்த ஷேர் ஆட்டோ சிக்கியுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அதிக பயணிகளை அழைத்து சென்றால்தான் அதிக வருவாயை பெற முடியும் என்பதை ஒப்புக் கொள்கிறோம். ஆனால், அதனை காட்டிலும் பயணிகளின் பாதுகாப்பு ஆனது மிக முக்கியமான ஒன்றாகும். அதிக பயணிகளை அழைத்து செல்ல கூடாது என போலீசார் எதற்காக கூறுகின்றனர், அதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன என்பதை ஷேர் ஆட்டோ டிரைவர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். அதிக பயணிகள் இருப்பதால், டிரைவரால் ஆட்டோவை கண்ட்ரோல் செய்வது கடினமாக இருக்கும். இதனால் விபத்து நடக்க நேரிட்டால் அது பெரிய விபத்தில் சென்று முடிய வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications









