ஹூண்டாய் சான்ட்ரோ காரில் ஷாருக்கானுக்கு லிஃப்ட் கொடுத்த முதல்வர் மம்தா பேனர்ஜி...!! (வீடியோ)
ஹூண்டாய் சான்ட்ரோ காரில் ஷாருக்கானுக்கு லிஃப்ட் கொடுத்த முதல்வர் மம்தா பேனர்ஜி...!! (வீடியோ)
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜியுடன் ஹூண்டாய் சான்ட்ரோ ஸிங் காரில் பயணித்து இணையதளங்களில் வைரலை கிளப்பியுள்ளார் நடிகர் ஷாருக்கான்.

ஹூண்டாய் தயாரித்து வரும் சான்ட்ரோ மற்றும் ஸிங்க் ஹேட்ச்பேக் கார்களுக்கான விளம்பர தூதுவராக இருப்பவர் நடிகர் ஷாருக்கான்.

ஆனால் நிஜ வாழ்க்கையில் சான்ட்ரோ மற்றும் சான்ட்ரோ ஸிங்க் கார்களை ஷாருக்கான் ஓட்டி ஒருமுறை கூட யாரும் பார்த்தது கிடையாது.

சமீபத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி தனது ஹூண்டாய் சான்ட்ரோ ஸிங்க் காரில் நடிகர் ஷாருக்கானை கொல்கத்தா விமான நிலையத்தில் இறக்கிவிட்டு சென்றது வீடியோவாக வெளியாகி வைரலாகி உள்ளது.

கோட்சூட்டில் டிப்டாப்பாக பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஷாருக்கை, முன் சீட்டில் இருந்த மம்தா விமான நிலையத்தில் இறக்கி விட்டு, அவரது பிரைவேட் ஜெட் விமானத்தை பிடிக்க உதவியுள்ளார்.

மேற்கு வங்க முதலமைச்சரான மம்தா மூன் சீட்டில் இருந்ததால், ஷாருக்கான் பின் இருக்கையில் அமர்ந்துள்ளார். இதற்கான வீடியோ வெளியாகி இணையதளங்களில் பரபரப்பை கூட்டியுள்ளது.
ஹூண்டாய் சான்ட்ரோ காரில் வந்திறங்கிய ஷாருக்கான்... வீடியோ:
ஷாருக்கான் பயன்படுத்தும் அனைத்து வாகன ரகங்களும் உலகறிந்த உண்மை. குறிப்பாக பிஎம்டபுள்யூ கார்களின் கதாநாயகன் ஷாருக்கான்.

பல பிரம்மாண்ட விலையுயர்ந்த கார்களை தனது கராஜில் நிறுத்தி வைத்திருக்கும் ஷாருக்கான், மற்றவர்களுக்கு அன்பளிப்பாக கூட ஆடம்பர கார் மாடல்களை தான் கொடுப்பார்.

இப்படி ஒரு டிரென்டை வைத்திருக்கும் ஷாருக்கான் ஹூண்டா சான்ட்ரோ காரில் என்ன எண்ணத்தில் அமர்ந்து மம்தா உடன் பயணித்திருப்பார் என்பதில் தான் சுவராஸ்யமே உள்ளது.

கொல்கத்தா விமான நிலையத்தில் நின்றிருந்த தனது பிரைவேட் ஜெட் விமானத்தில் மும்பைக்கு புறப்பட இருந்தார் ஷாருக்கான்.
அந்நகரத்தின் டிராஃபிக்கை தவிர்க்க மம்தா வழக்கமாக தான் பயன்படுத்தி வரும் சான்ட்ரோ காரில் ஷாருக்கானுக்கு லிஃப்ட் வழங்கியுள்ளார்.

விமானநிலையம் வரை உடன் வந்து தன்னை பத்திரமாக புறப்பாட்டில் இறக்கிவிட்ட மம்மதாவிற்கு ஷாருக்கான் காலில் விழுந்து நன்றி தெரிவித்து புறப்பட்டு சென்றார்.

ஷாருக்கான் மற்றும் மம்தாவிற்கான நட்பு, நீண்ட காலமாக இருந்து வருகிறது. அரசியல், சினிமாவை தாண்டி பல்வேறு தளங்களில் இருவரும் நல்ல நண்பர்கள்.

மேற்கு வங்கத்தின் விளம்பர தூதுவராகவும் நடிகர் ஷாருக்கான் உள்ளார். மேலும் கொல்கத்தா நைட் ரைடரஸ் என்ற ஐபிஎல் கிரிக்கெட் அணியையும் அவர் நிர்வாகித்து வருகிறார்.

ஷாருக்கானின் இந்த படா வாழ்க்கைக்கு முற்றிலும் மாறான ஒரு வாழ்க்கையை வாழ்பவர் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி. எளிமையின் அடையாளம் மம்தா.

ஹவாய் செருப்பு, பருத்தி ஆடை, துணிப்பை, ஒப்பனை இல்லாத முகம், எப்போதும் கலைந்திருக்கும் கேசம், அவசரமான நடை என மம்தா பேனர்ஜி ஒரு இந்தியரை பிரதிபலிப்பவர்.

ஹூண்டாய் சான்ட்ரோ ஸிங் காருக்கு முன்னதாக மாருதி ஜென் 1.0 காரை பயன்படுத்தி வந்தார் மம்தா.
இருப்பினும் அவசர மற்றும் அலுவல் தேவைகளுக்கு மம்தா பேனர்ஜி பிஎம்டபுள்யூ 7 சிரீஸ் காரை கூடுதலாக பயன்படுத்தி வருகிறார்.

ஹூண்டாய் நிறுவனத்திற்கு இந்தியளவில் பெரிய வெளிச்சத்தை ஏற்படுத்தி தந்த மாடல் சான்ட்ரோ மற்றும் சான்ட்ரோ ஸிங்க் கார்கள்.

மாருதி வேகன் ஆர், உட்பட உயரமானவர்களை குறிவைத்து உருவாக்கப்பட்ட கார் மாடல்களுக்கு ஹூண்டா சான்ட்ரோ மற்றும் ஸிங்க் கடும் போட்டியாக உள்ளது.

இந்தியாவில் கால்பதித்து 15 ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில் அதற்கு மாற்றாக ஹூண்டாய் சான்ட்ரோ சிங் மற்றும் ஐ10 கார்களை விற்பனைக்கு கொண்டு வந்தது.

விரைவில் புதிய தலைமுறைக்கான சான்ட்ரோ காரை ஹூண்டாய் அடுத்தாண்டில் வெளியிடுகிறது. இந்த புதிய சான்ட்ரோ காரை இயான் மற்றும் கிரான்டு ஐ10 மாடல்களில் கலைவையில் உருவாக்கி வருகிறது ஹூண்டாய்.

ஹூண்டாயின் புதிய சான்ட்ரோ கார் ரெனால்ட் நிறுவனத்தின் க்விட் மற்றும் டாடாவின் டியோகோ மாடல்களுக்கு இந்திய சந்தையில் போட்டியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications