இதுக்குதான் யாரையும் நெருங்க விட்றது இல்ல! 1 கோடி ரூபா காரில் வந்த நடிகையிடம் ரசிகர் செய்த காரியத்தால் ஷாக்!
நடிகர், நடிகைகள் தங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். எனவே திரையுலக நட்சத்திரங்களை உடற்பயிற்சி கூடங்களில் அடிக்கடி காண முடியும். அப்படி உடற்பயிற்சி கூடங்களுக்கு வரும் திரையுலக நட்சத்திரங்களை ரசிகர்கள் சூழ்ந்து கொள்வது வாடிக்கையாக இருந்து வருகிறது.
இது போன்ற சமயங்களில் திரையுலக நட்சத்திரங்களுக்கும், ரசிகர்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு விடுகிறது. திரையுலக நட்சத்திரங்களை, ரசிகர்கள் போட்டோ மற்றும் வீடியோ எடுக்க முயல்வதுதான் இதற்கு காரணம். பாலிவுட் திரையுலகின் பிரபல நடிகைகளில் ஒருவராக இருக்கும் ஷர்வாரி வாக் (Sharvari Wagh) உடற்பயிற்சி கூடத்தில் இருந்து வெளியே வந்தபோதும் இதேதான் நடைபெற்றது.

ஷர்வாரி வாக் உடற்பயிற்சி கூடத்தில் இருந்து வெளியே வந்த சமயத்தில், ஏராளமான ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டு செல்போனில் போட்டோ மற்றும் வீடியோக்களை எடுத்தனர். அப்போது ஒரு ரசிகர் எதிர்பாராதவிதமாக ஷர்வாரி வாக்கின் மீது மோதி விட்டார். பொதுவாக இது போன்ற சூழல்களில் ஒரு சில திரையுலக நட்சத்திரங்கள், ரசிகர்களிடம் கோபத்தை காட்டி விடுவார்கள்.
ஆனால் ஷர்வாரி வாக் அப்படி எதுவும் செய்யவில்லை. அந்த ரசிகரிடம் கோபத்தை வெளிப்படுத்தாமல், அந்த இடத்தை கடந்து சென்றார். அத்துடன் அங்கு இருந்த மற்ற ரசிகர்களுக்கும் அவர் போட்டோ மற்றும் வீடியோக்களுக்கு போஸ் கொடுத்தார். இதன் பின் மிகவும் விலை உயர்ந்த காரில், அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

இந்த வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. ரசிகரிடம் நிதானமாக நடந்து கொண்ட காரணத்தால், ஷர்வாரி வாக்கை சமூக வலை தளங்களில் நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். அத்துடன் அவர் பயணம் செய்தது என்ன கார்? என்ற கேள்வியையும் ஒரு சிலர் எழுப்பி வருகின்றனர்.
அது மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி (Mercedes Benz GLC) ஆகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் இந்த காரின் ஆரம்ப நிலை வேரியண்ட் 76.80 லட்ச ரூபாய் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. அதே நேரத்தில் டாப் வேரியண்ட்டின் விலை 77.80 லட்ச ரூபாயாக இருக்கிறது.
இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். ஆன்-ரோடு விலை (On-road Price) முறையே 96 லட்ச ரூபாய் மற்றும் 97 லட்ச ரூபாய் என்ற அளவில் வரும். கிட்டத்தட்ட 1 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட இந்த காரில், 2 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்படுகின்றன.
அவை 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் இன்ஜின்கள் ஆகும். இந்த 2 இன்ஜின்கள் உடனும், 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மற்றும் மெர்சிடிஸ் 4மேட்டிக் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்படுகின்றன. ஆனால் பவர் அவுட்புட் வெவ்வேறாக இருக்கும்.
அதாவது பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 258 பிஎஸ் பவர் மற்றும் 400 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. மறுபக்கம் டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 197 பிஎஸ் பவர் மற்றும் 440 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டிருக்கிறது.
இது மிகவும் விலை உயர்ந்த கார் என்பதால், அதிநவீன வசதிகளுக்கு (Features) சற்றும் பஞ்சமில்லை. இதில், 11.9 இன்ச் MBUX டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 64 கலர் ஆம்பியண்ட் லைட்டிங் மற்றும் பனரோமிக் சன்ரூஃப் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
பாதுகாப்பை (Safety) பொறுத்தவரையில், அடாஸ் தொகுப்பு (Advanced Driver Assistance Systems - ADAS), 9 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் 360 டிகிரி கேமரா போன்றவை எல்லாம் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி காரின் குறிப்பிடத்தக்க வசதிகளாக இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஷர்வாரி வாக் பயன்படுத்திய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி காரானது, ஆடி க்யூ5 (Audi Q5), பிஎம்டபிள்யூ எக்ஸ்3 (BMW X3) மற்றும் வால்வோ எக்ஸ்சி60 (Volvo XC60) போன்ற கார்களுக்கு எல்லாம் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக திகழ்கிறது.


Click it and Unblock the Notifications








