உலக அரங்கில் நாட்டையே பெருமை படுத்தியவருக்கு ஆனந்த் மஹிந்திராவின் காஸ்ட்லீ கிஃப்ட்!
சீத்தல் தேவி (Sheetal Devi), இந்தியாவின் முதல் கைகளில்லாமல் அம்பு எறியும் வில் வித்தை வீராங்கனை. கடந்த 2024ஆம் ஆண்டின் துவக்கத்தில் மத்திய அரசிடம் இருந்து அர்ஜூனா விருதை பெற்ற சந்தோஷத்துடன் பாரா ஒலிம்பிக் (Paralympics) போட்டியில் கலந்துக் கொண்ட சீத்தல் தேவி, வெண்கல பதக்கம் வென்று நாட்டை பெருமைப்படுத்தினார். இந்த நிலையில், சீத்தல் தேவியை மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா (Anand Mahindra) அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். பின்னர், சீத்தல் தேவியின் திறமையை பாராட்டும் பொருட்டும், அவருடனான சந்திப்பை நினைவுக்கூறும் விதமாகவும் அவருக்கு மஹிந்திரா ஸ்கார்பியோ-என் (Scorpio-N) காரை பரிசாக வழங்கி சிறப்பித்துள்ளார்.
இந்தியாவின் பெரும் தொழிலதிபர்களுள் ஒருவரான ஆனந்த் மஹிந்திரா அவர்கள் மற்றவர்களின் திறமையை பாராட்டுவதற்கும், ஊக்கப்படுத்துவதற்கும் எப்போதும் மறந்ததே கிடையாது. குறிப்பாக, கடந்த சில வருடங்களாகவே விளையாட்டு துறையில் சாதிப்பவர்களுக்கு விலையுயர்ந்த மஹிந்திரா வாகனங்களை வழங்கி சிறப்பித்து வருகிறார்.

கடந்த 2021ஆம் ஆண்டில் இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி நீண்ட வருடங்களுக்கு பிறகு ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியதற்காக இந்திய அணியில் 6 புதுமுக வீரர்களுக்கு மஹிந்திரா தார் வாகனத்தை பரிசாக வழங்கியதில் இருந்து ஆனந்த் மஹிந்திராவின் இந்த பாராட்டும் செயல் துவங்கியது. அந்த சமயத்தில் நமது தமிழ்நாட்டு வீரர் நடராஜன் கூட மஹிந்திரா தார் வாகனத்தை பரிசாக பெற்று இருந்தார்.
அதன்பின் கிரிக்கெட் மட்டுமில்லாமல், மற்ற விளையாட்டு போட்டிகளிலும், ஒலிம்பிக்கிலும் சாதனை புரியும் வீரர்/ வீராங்கனைகளுக்கு அந்தந்த சமயங்களில் பீக்கில் இருக்கும் மஹிந்திரா கார்களை பரிசாக வழங்கி சிறப்பித்தார். இருப்பினும், தற்போது சீத்தல் தேவிக்கு வழங்கப்பட்டிருக்கும் மஹிந்திரா ஸ்கார்பியோ-என் கார் பரிசு கொஞ்சம் ஸ்பெஷலானது என்றுதான் சொல்ல வேண்டும்.

ஏனெனில், ஆனந்த் மஹிந்திரா அவர்கள் சீத்தல் தேவி மற்றும் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்த கையோடு இந்த ஸ்கார்பியோ-என் கார் பரிசை வழங்கி உள்ளார். பிறவிலேயே இரண்டு கைகள் இல்லாமல் பிறந்த சீத்தல் தேவி, சிறுவயது முதலே தனது கால்களினால் வில் வித்தை பயிற்சியில் ஈடுப்பட ஆரம்பித்தார்.
அதன்பின் பல தடைகளை தாண்டி கடந்த 2024இல் பிரான்ஸ் நாட்டின் பாரீஸில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று தனது திறமையால் உலகம் மொத்தத்தையும் தன்னை திரும்பி பார்க்க வைத்தார். இத்தகைய திறமைமிக்கவரை சந்தித்ததையும், அவருக்கு ஸ்கார்பியோ-என் காரை பரிசாக வழங்கியதையும் ஆனந்த் மஹிந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் படங்களுடன் குறிப்பிட்டுள்ளார்.

ஆனந்த் மஹிந்திரா ஸ்கார்பியோ-என் காரை பரிசாக வழங்க, தனது பங்கிற்கு தான் பயன்படுத்திய வில் அம்பை சீத்தல் தேவி பரிசாக அவருக்கு வழங்கியுள்ளார். மஹிந்திரா ஸ்கார்பியோ-என் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.13.99 லட்சம்- ரூ.24.54 லட்சம் வரையில் உள்ளன. 2.2 லிட்டர் எம்ஹாவ்க் டீசல் மற்றும் 2.0 லிட்டர் எம்ஸ்டாலியன் டர்போ-பெட்ரோல் என 2 விதமான என்ஜின் ஆப்ஷன்களில் இந்த மஹிந்திரா கார் விற்பனை செய்யப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 20 வருடங்களுக்கும் மேலாக விற்பனையில் இருக்கும் மஹிந்திரா ஸ்கார்பியோ காரின் நெக்ஸ்ட்-ஜென்ரேஷன் மாடலாக அறிமுகம் செய்யப்பட்ட ஸ்கார்பியோ-என் ஆனது ஒருவருடைய திறமையை பெருமைப்படுத்துவதற்கு சரியான வாகனம் ஆகும். அதாவது அந்த அளவிற்கு, ஸ்கார்பியோ-என் காரும் பவர்ஃபுல்லானது மற்றும் செயல்திறன்மிக்கது ஆகும்.


Click it and Unblock the Notifications









