மர்மமான முறையில் உயிரிழந்த நடிகை! ராயல் என்பீல்டு பைக்ல ரகசியமா வந்துட்டு போனது அவங்களா! ரசிகர்கள் அதிர்ச்சி
வாழ்க்கை கணிக்க முடியாதது. எப்போது எது வேண்டுமானாலும் நடக்கலாம். திடீரென நிகழும் ஒரு சில அதிர்ச்சிகரமான மரணங்கள் இதை நமக்கு தெளிவாக உணர்த்தி விடுகின்றன. இந்த வரிசையில் தற்போது நிகழ்ந்துள்ள ஒரு அதிர்ச்சிகரமான மரணம், வாழ்க்கை கணிக்க முடியாதது என்பதை, மீண்டும் ஒரு முறை மிகவும் நமக்கு தெளிவாக உணர்த்தியுள்ளது.
ஹிந்தி மியூசிக் வீடியோக்கள், ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் திரைப்படங்கள் உள்ளிட்டவற்றில் நடித்து வந்த நடிகை ஸிஃபாலி ஜரிவாலா (Shefali Jariwala). 42 வயது மட்டுமே நிரம்பிய இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இந்த சூழலில், மும்பையில் (Mumbai) நேற்று (ஜூன் 27ம் தேதி), ஸிஃபாலி ஜரிவாலா திடீரென உயிரிழந்தார்.

இதற்கு கார்டியாக் அரெஸ்ட்தான் (Cardiac Arrest) காரணம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் ஸிஃபாலி ஜரிவாலாவின் மரணத்திற்கு உண்மையான காரணம் என்ன? என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. மிகவும் பிரபலமான ஒரு நடிகை, இளம் வயதில் திடீரென உயிரிழந்துள்ள காரணத்தால், அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.
இந்த நேரத்தில், ஸிஃபாலி ஜரிவாலாவின் பல்வேறு வைரல் வீடியோக்கள் (Viral Videos), சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகின்றன. கடந்த காலங்களில் ஸிஃபாலி ஜரிவாலா கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் போன்றவை இதில் அடங்கும். அத்துடன் ஸிஃபாலி ஜரிவாலாவின் வீடு மற்றும் மருத்துவமனைக்கு பிரபலங்கள் பலர் வந்து செல்லும் வீடியோக்களும் வைரலாக பரவி கொண்டுள்ளன.

இந்த வரிசையில் ஸிஃபாலி ஜரிவாலாவின் வீட்டில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றும் சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதில் நாம் பார்க்கும் நபர்கள், தடய அறிவியல் துறையை (Forensic Team) சேர்ந்தவர்கள் என்று இந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸிஃபாலி ஜரிவாலாவின் வீட்டில் இருந்து அவர்கள் தடயங்களை சேகரித்து கொண்டு சென்றதாகவும் அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது.
3 கோடிக்கும் அதிகமானோர் பின்தொடரும் இன்ஸ்டன்ட் பாலிவுட் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோ, சமூக வலை தளங்களில், தற்போது வைரலாக பரவி வருகிறது. நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி ஸிஃபாலி ஜரிவாலாவின் மரணத்திற்கான காரணம் என்ன? என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதால், தடய அறிவியல் துறையை சேர்ந்த அதிகாரிகளும், தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தடயங்களை சேகரிக்க அவர்கள் ஸிஃபாலி ஜரிவாலாவின் வீட்டிற்கு வந்த சமயத்தில்தான், தற்போது வைரலாக பரவி வரும் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.
பொதுவாக தடய அறிவியல் துறையை சேர்ந்த அதிகாரிகள், கார் மற்றும் வேன் போன்ற வாகனங்களில்தான் வந்து செல்வார்கள். ஆனால் தற்போது தடய அறிவியல் துறை அதிகாரிகள், டூவீலரை பயன்படுத்தியுள்ளதால், அதுவும் கவனம் ஈர்த்துள்ளது. ஆனால் தடய அறிவியல் துறை நிபுணர்கள், டூவீலர்களை பயன்படுத்துவது என்பது வழக்கமான ஒரு விஷயம்தான்.
குற்ற செயல்கள் நடந்த இடங்களில் இருந்து, கை ரேகைகள், முடி மற்றும் ரத்த கறைகள் போன்ற தடயங்களை சேகரிக்கும் கருவிகள் அடங்கிய டூவீலர்களை இந்தியாவில் தடய அறிவியல் நிபுணர்கள் பயன்படுத்தி கொண்டுதான் உள்ளனர். குற்ற செயல்கள் நடந்த இடத்திற்கு விரைவாக செல்வதற்காக டூவீலர்கள் பயன்படுத்தப்படுகின்றன.
அத்துடன் கார்கள் மற்றும் வேன் போன்ற வாகனங்களுடன் ஒப்பிடும்போது, டூவீலர்களில் பயணம் செய்வதற்கான செலவும் குறைவு. இதன் காரணமாகவும் டூவீலர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. மேலும் கார்கள் மற்றும் வேன் போன்ற வாகனங்கள் செல்ல முடியாத இடங்களுக்கும் கூட, டூவீலர்கள் எளிதாக சென்று விடும்.
இந்தியாவில் தடய அறிவியல் துறையை சேர்ந்த நிபுணர்கள், டூவீலர்களை பயன்படுத்துவதற்கு இதுவும் ஒரு காரணமாக உள்ளது. தற்போது ஸிஃபாலி ஜரிவாலாவின் வீட்டில் எடுக்கப்பட்ட வீடியோவை பொறுத்தவரையில், தடய அறிவியல் நிபுணர்கள் பயன்படுத்தியது ராயல் என்பீல்டு ஹண்டர் 350 (Royal Enfield Hunter 350) பைக் ஆகும்.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கின் ஆரம்ப விலை வெறும் 1.50 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் மாடலின் விலையும் கூட வெறும் 1.82 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை (Chennai Ex-showroom Price) ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்த வைரல் வீடியோவில் நாம் காணும் ஹண்டர் 350, மிகவும் விலை குறைவான ராயல் என்பீல்டு பைக்குகளில் ஒன்றாக உள்ளது. இதன் காரணமாக இந்திய சந்தையில் அதிகமாக விற்பனை செய்யப்படும் ராயல் என்பீல்டு பைக்குகளில் ஒன்றாகவும் இது திகழ்கிறது.


Click it and Unblock the Notifications








