ஒடம்பெல்லாம் மச்சம்! இவ்ளோ சின்ன வயசுல இத்தன கோடி ரூபா காரை வாங்கீட்டாங்களா! செய்யற தொழில் அப்படி!
இந்தியாவின் திரையுலக நட்சத்திரங்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் (Mercedes Benz GLS). ஃபுல் சைஸ் லக்ஸரி க்ராஸ்ஓவர் எஸ்யூவி (Full Size Luxury Crossover SUV) ரகத்தை சேர்ந்த இந்த கார், பாலிவுட் நடிகைகளான ப்ரணிதி சோப்ரா (Parineeti Chopra) மற்றும் ஜாரா கான் (Zara Khan) உள்பட திரையுலக நட்சத்திரங்கள் பலரிடமும் இருக்கிறது. இது 3 வரிசை இருக்கை அமைப்பை கொண்ட ஒரு சொகுசு கார் ஆகும். எனவே 7 பேர் சௌகரியமாக பயணம் செய்ய முடியும்.
தற்போதைய நிலையில் மொத்தம் 2 வேரியண்ட்களில் (Variants) இந்த கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவை 450 4matic மற்றும் 450d 4matic ஆகியவை ஆகும். இதில், முதலாவது வேரியண்ட்டில் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 2வது வேரியண்ட்டில் டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

இதில், 450 4matic மாடல்தான் ஆரம்ப நிலை வேரியண்ட் ஆகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் இந்த வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) 1.34 கோடி ரூபாயாக உள்ளது. ஆன்-ரோடு விலை (On-road Price) தோராயமாக 1.67 கோடி ரூபாய் என்ற அளவில் வரும். இந்த வேரியண்ட்டில் பொருத்தப்பட்டிருப்பது 3.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆகும்.
மறுபக்கம் 450d 4matic மாடல்தான் இந்த காரின் டாப் வேரியண்ட் ஆகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் இந்த வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை 1.39 கோடி ரூபாயாக இருக்கிறது. இதன் ஆன்-ரோடு விலை தோராயமாக 1.74 கோடி ரூபாய் என்ற அளவில் வரும். இந்த வேரியண்ட்டில் வழங்கப்பட்டிருப்பதும் 3.0 லிட்டர் இன்ஜின்தான். ஆனால் இது பெட்ரோல் கிடையாது. நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல் டீசல் இன்ஜின் ஆகும்.

இவ்வளவு விலை உயர்ந்த பிரபல நடிகை ஒருவர் தற்போது வாங்கியுள்ளார். அவர் ஷெகான்ஸ் கில் (Shehnaaz Gill) ஆவார். தற்போது 31 வயதாகும் இவர் சண்டிகரில் பிறந்தவர். மாடல், நடிகை மற்றும் பாடகி என இவருக்கு பல்வேறு முகங்கள் உள்ளன. ஹிந்தி மற்றும் பஞ்சாபி மொழி திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இவர் நடித்து வருகிறார்.
இவர் புத்தம் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் காரை டெலிவரி எடுத்தபோது எடுக்கப்பட்ட வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரல் வீடியோவில் ஷெகான்ஸ் கில் கேக் வெட்டி உற்சாகமாக காரை டெலிவரி எடுப்பதை நம்மால் பார்க்க முடிகிறது.
ஆனால் ஷெகான்ஸ் கில் வாங்கிய முதல் சொகுசு கார் இது கிடையாது. ஆம், அவரிடம் ஏற்கனவே ஏராளமான விலை உயர்ந்த சொகுசு கார்கள் இருக்கின்றன. இதில், மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் (Mercedes Benz S-class) மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் சி-க்ளாஸ் (Mercedes Benz C-Class) போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
இவை எல்லாம் தவிர, ரேஞ்ச் ரோவர் எவோக் (Range Rover Evoque) மற்றும் ஜாகுவார் எக்ஸ்ஜே (Jaguar XJ) ஆகிய கார்களையும் கூட, ஷெகான்ஸ் கில் வைத்துள்ளார். ஷெகான்ஸ் கில்லின் கார் கலெக்ஸனை (Car Collection) பார்க்கும்போது, அவர் மிகவும் தீவிரமான சொகுசு கார் பிரியர் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஷெகான்ஸ் கில் வாங்கியுள்ள மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ், அதிகம் பேர் பயணம் செய்ய கூடிய வகையிலான ஒரு சொகுசு காரை எதிர்பார்க்க கூடிய செல்வந்தர்களுக்கு மிகவும் ஏற்றது. சொகுசு மற்றும் செயல்திறன் என இரண்டும் கலந்த கலவையாக இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








