இந்திய ராணுவமே ஒரு நிமிஷம் ஸ்டென்னாகிடுச்சு! ஷேக் ஹசீனா தப்பி சென்ற விமானத்தில் இவ்வளவு விஷயம் இருக்குதா?

வங்கதேச நாட்டில் தற்போது கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பொறுப்பை ராஜினாமா செய்து விட்டு வெளிநாடு தப்பி சென்று விட்டதாக கூறி, அந்நாட்டில் உள்ள ராணுவ தளபதி தற்போது ராணுவ ஆட்சியை அமல்படுத்தியுள்ளார். இது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகம் முழுவதும் தற்போது வங்கதேச நாட்டில் நடக்கும் சம்பவங்களை உற்றுநோக்கி வரும் நிலையில், ஷேக் ஹசீனா தப்பிச் சென்ற விமானம் குறித்து பலர் பல்வேறு விதமான பேசி வருகிறார்கள். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம்.

வங்கதேச நாட்டின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா நேற்று தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்து விட்டு நாட்டிலிருந்து தப்பி சென்று விட்டார். இதனால் அந்த நாட்டில் ராணுவ ஆட்சி அமலுக்கு வந்தது. இது குறித்து அறிவிப்பு வெளியானவுடன் அவர் எப்படி தப்பி சென்றார் என்ற கேள்வி மக்கள் மத்தியில் மிகப்பெரிய கேள்வியாக இருந்தது. இதற்கு பதிலாக அவர் விமானத்தை பயன்படுத்தி தப்பிச்செல்லும் தகவல் வெளியானது.

sheikh hasina

தற்போது உலகம் முழுவதும் பறக்கும் விமானங்களை டிராக் செய்வதற்காக ஆன்லைன் மூலம் பல்வேறு வசதிகள் இருக்கிறது. இப்படியாக வங்கதேச விமானப்படைக்கு சொந்தமான சி130ஜே ஹெர்குலஸ் என்ற விமானத்தில் தான் அவர் தப்பி செல்கிறார் என்ற செய்தி வெளியானவுடன் ஆன்லைன் மூலம் இந்த விமானத்தை டிராக் செய்ய துவங்கினார்கள். இந்த விமானம் கொல்கத்தா வழியாக டெல்லியில் தரையிறங்கியுள்ளது.

டெல்லியில் திரையரங்கிய பின்பு மீண்டும் அந்த விமானம் வங்கதேசத்திற்கு சென்றதாக இந்திய அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஷேக் ஹசீனா வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது ஐரோப்பா நாட்டிற்குள் இவர் தஞ்சம் புகுந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இவ்வளவு பெரிய பிரச்சினையை ஏற்படுத்திவிட்டு இவர் தப்பிச்சென்ற விமானம் தற்போது விவாத பொருளாக மாறி உள்ளது.

sheikh hasina

இவர் தப்பி சென்ற சி-130 ஜே ஹெர்குலிஸ் சென்ற விமானம் மார்டனான அதே நேரம் மேம்படுத்தப்பட்ட தொழிற்நுட்பத்தை கொண்ட விமானமாக இருக்கிறது. இதில் டிஜிட்டல் ஏவியானிக்ஸ், அட்வான்ஸ் நேவிகேஷன் சிஸ்டம், கிளாஸ் காக்பிட் ஆகிய அம்சங்கள் இருக்கிறது இதனால் இந்த விமானம் பாதுகாப்பானதாகவும் அதே நேரம் சிறப்பாக செயல்படும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த விமானம் பல்வேறு விதமான மஷன்களுக்கு பயன்படுத்தப்படும் முக்கியமாக எதிரிகள் கண்ணில் படாதபடி விரைவாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பயணிக்க வேண்டும் என்றால் இந்த ரக விமானத்தை தான் பயன்படுத்துவார்கள். இது போக யாருக்காவது மருத்துவ உதவி தேவைப்பட்டாலும் இந்த விமானங்கள் பயன்படுத்தப்படும்.

நாட்டில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு மக்களுக்கு நிவாரண பொருட்களை விநியோகம் செய்வதற்கும் இந்த விமானம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுபோக சிறப்பான ஆப்ரேஷன்களுக்கும் இந்த விமானம் பயன்படுத்தப்பட்டது. இந்த விமானத்தின் வடிவமைப்பு இதற்கெல்லாம் ஏற்றார் போல் இருந்தது. முக்கியமாக குறுகிய பகுதிகளிலும், குறைவான ஏர் ஸ்டிரிப் இருக்கும் பகுதிகளிலும் இந்த விமானத்தை ஆப்ரேட் செய்ய முடியும்.

இந்த சி-130 ஜே விமானத்தில் அதிகமான பயணிகள் மற்றும் அதிகமான சரக்குகளை ஏற்றிச் செல்ல முடியும். இந்த விமானத்தில் 92 பயணிகள் அல்லது 64 ஏரோ ட்ரூப்க்களை எடுத்துச் செல்ல முடியும். இதுபோக 20 டன் எடை கொண்ட சரக்குகளை கொண்டு செல்லவும் இந்த விமானத்தில் இட வசதி இருக்கிறது.

இந்த விமானத்தின் சிறப்பு அம்சமே இந்த விமானத்தின் வேகம் தான். இந்த விமானம் 362 நாட்ஸ் அதாவது மணிக்கு 670 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது. ஒருமுறை இந்த விமானத்தை டேக் ஆப் செய்து விட்டால் சுமார் 1600 நாட்டிகல் மைல் அதாவது 2963 கிலோ மீட்டர் வரை தொடர்ந்து பயணிக்க முடியும்.

இந்த சி-130 ஜே விமானத்தில் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் இருக்கிறது. முக்கியமாக இன்ஃப்ரா ரெட் கவுண்டர் மெசர், ஆயுதம் தாங்கிய சிஸ்டம், மார்டனான சென்சார்கள் எல்லாம் பொருத்தப்பட்டுள்ளது. இது எதிரிகளிடம் இருந்து இந்த விமானத்தை பாதுகாக்க உதவும். மேலும் இந்த விமானம் குறைவான உயரத்தில் பறக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் எதிரிகளின் ரேடாரில் இந்த விமானம் சிக்காமல் எதிரிகளை தாக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலகம் முழுவதும் தற்போது வங்கதேசத்தில் நடக்கும் பிரச்சனையை பற்றி பேசி வரும் நிலையில் பிரதமர் தப்பிச்சென்ற விமானத்தின் மூலம் தற்போது உலகம் முழுவதும் இந்த விமான பிரபலமாக உள்ளது. பல நாடுகளிடம் இது போன்ற விமானங்கள் வேண்டும் என்ற பேச்சு தற்போது எழுந்துள்ளது. மற்ற நாடுகளும் விரைவில் இது போன்ற விமானத்தை சொந்தமாகி கொள்ளும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 6, 2024, 18:32 [IST]
English summary
Sheikh hasina flight c130j hercules dhaka india escape details
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+