மகனுக்கு ஒரு கோடி ரூபா காரை பரிசளித்த சீரியல் நடிகர்.. இவரை யாருனு தெரியுதா?.. இது கார் டெலிவரி நிகழ்வுதானா!

முன்னணி நடிகர்கள் சொகுசு காரை வாங்குவது ஒன்றும் நமக்கு புதிய செய்தி அல்ல. நாள்தோறும் ஏதேனும் ஒரு நடிகர் ஆடம்பர காரை வாங்குவதாக நாம் செய்திகளில் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றோம். ஆனால், ஒரு சில நிகழ்வு மட்டுமே இணையத்தில் மிகவும் பேசப்படக் கூடியதாக மாறுகின்றன. அந்தவகையில், இப்போது நடைபெற்றிருக்கும் கார் டெலிவரி சம்பவமானது இதற்கு முன்னதாக அரங்கேறிய ஒட்டுமொத்த கார் டெலிவரி நிகழ்வையும் தூக்கி சாப்பிடும் வகையில் அமைந்திருக்கின்றது. ஓர் சீரியல் நடிகருக்கே அனைவரையும் வியக்க வைக்கும் வகையில், சொகுசு கார் விற்பனையாளர் ஒருவர் ஆம்டபர காரை டெலிவரி கொடுத்திருக்கின்றார்.

முற்றிலும் விநோதமான முறையிலேயே அவர்கள் காரை டெலிவரி கொடுத்திருக்கின்றனர். உச்ச நட்சத்திரங்களுக்கே மிகவும் எளிமையான முறையிலேயே காரை டெலிவரி கொடுத்திருப்பதை நாம் இங்கே பார்த்திருக்கின்றோம். ஆனால், சீரியல் நடிகருக்கு சினிமா பட ஷூட்டிங்கையே மிஞ்சும் அளவிற்கு கார் டெலிவரி கொடுக்கப்பட்டு உள்ளது.

Shekhar suman gifts audi e-car to son

இது மிகப் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. இவர்களின் இந்த செயல், ஓர் கார் டெலிவரிக்கு இத்தகைய ஆர்பாட்டம் தேவைதானா என கேள்வியெழுப்ப செய்திருக்கின்றது. அதேவேளையில், ஓர் டீலராக, ஓர் வாடிக்கையாளரைக் கவர இத்தகைய வேலையை செய்திருப்பது வரவேற்கதக்க செயல் என்பதை நாம் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.

சேகர் சுமன், எனும் முன்னணி சீரியல் ஆர்டிஸ்ட்டுக்கே மிகவும் ஆர்பாட்டமான முறையில் கார் டெலிவரி கொடுக்கப்பட்டு இருக்கின்றது. ஆடி க்யூ8 இ-ட்ரான் (Audi Q8 e-tron) சொகுசு வகை மின்சார காரையே சேகர் சுமன் வாங்கி இருக்கின்றார். இது எஸ்யூவி வகை எலெக்ட்ரிக் கார் மாடல் என்பது குறிப்பிடத்தகுந்தது.

கடந்த ஆண்டு தனது மனைவிக்கு பிஎம்டபிள்யூ ஐ7 (BVMW i7) காரை வாங்கி இருந்தார். இதுவும் மின்சாரத்தில் இயங்கும் சொகுசு கார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த காரை திருமண நாளை முன்னிட்டே அவர் பரிசாக வழங்கினார். குடும்பத்தினருடன் வந்தே இந்த காரை அவர் டெலிவரி பெற்றிருக்கின்றார்.

இந்த காரை அவர் தன்னுடைய மகனுக்கு பரிசாக வழங்கே வாங்கியிருக்கின்றார். அப்போது ஒரு பாரம்பரிய நடன நிகழ்ச்சியுடன் இந்த கார் அவர்களுக்கு டெலிவரி வழங்கப்பட்டு இருக்கின்றது. இதைத்தொடர்ந்து சேகர் சுமனின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் இந்த காரின் வருகையைக் கொண்டாடும் விதமாக ஷாம்பெயின் பாட்டிலை பொங்க விட்டு மகிழ்ந்தனர்.

Shekhar suman gifts audi e-car to son

மிக அதிக சொகுசு வசதிகள் மற்றும் அதிக திறனை வெளியேற்றக் கூடிய ஓர் எலெக்ட்ரிக் கார் மாடலே ஆடி க்யூ8 இ-ட்ரான் ஆகும். சுஸுகா கிரே மெட்டாலிக் (Suzuka Gray Metallic) மற்றும் கிளாசியர் ஒயிட் (Glacier White) ஆகிய நிற தேர்வுகளிலேயே இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

கவர்ச்சிகரமான அணிகலன்கள் பலவற்றை இந்த கார் கொண்டிருக்கின்றது. அந்தவகையில் அழகிய கிரில், பம்ப்பர்கள், ஹெட்லைட்கள் மற்றும் டெயில்லைட் ஆகியவற்றை இந்த கார் கொண்டிருக்கின்றது. இதுதவிர, பெரிய ஏர் இன்லெட்டுகள் மற்றும் புதிய 20 அங்குல ஏரோ அலாய் வீல்கள் ஆகியவை இந்த காரில் இடம் பெற்றிருக்கும்.

இத்தகைய கவர்ச்சியான அலங்காரங்களைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே இந்தியாவில் பணக்காரர்களின் பிரியமான எலெக்ட்ரிக் எஸ்யூவி காராக இ-ட்ரான் காட்சியளிக்கின்ரது. இது சந்தையில் இரண்டு பேட்டரி பேக் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கிறது. அந்தவகையில், 95 kWh மற்றும் 114 kWh ஆகிய பேட்டரி பேக்குகளே க்யூ8 இ-ட்ரானில் வழங்கப்படுகின்றன.

இதில் 95 kWh பேட்டரி பேக்கைக் கொண்ட தேர்வு 340 பிஎஸ் மற்றும் 664 என்எம் டார்க்கை உருவாக்கும் திறனைக் கொண்டிருக்கின்றது. இதுதவிர, ஓர் முழு சார்ஜில் இதில் 491 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். அதேவேளையில், 114 kWh பேட்டரி பேக்கைக் கொண்ட தேர்வில் ஓர் முழு சார்ஜில் 582 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

இதன் திறன் வெளிப்பாடும் சற்று அதிகமாகவே உள்ளது. 408 பிஎஸ் மற்றும் 664 என்எம் டார்க்கையே அது உருவாக்கும். இதுபோன்று பன்முக சிறப்புகளைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே இந்த காரின் விலையும் சற்று அதிகமாகவே உள்ளது. இதன் ஆரம்ப விலையே ரூ.1.15 கோடி ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆடி நிறுவனம் இந்த சொகுசு காரை கடந்த சில மாதங்களுக்கு முன்பே இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த காருக்கு இந்திய கோடீஸ்வரர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதை உறுதிப்படுத்தும் விதமாகவே சேகர் சுமனின் இந்த கார் கொள்முதல் சம்பவம் அமைந்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 13, 2024, 12:30 [IST]
English summary
Shekhar suman gifts son adhyayan an audi q8 e tron
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+