Electric Ferry படகு மூலம் ஊழியர்களை குஷிபடுத்திய ஷெல், இதுல அப்படி என்ன இருக்குது தெரியுமா?
உலகம் முழுவதும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகமாகி வருகிறது. கம்பஷன் இன்ஜின் வாகனங்களிலிருந்து வெளியேறும் மாசு சுற்றுச் சூழலுக்குத் தீங்கு விளைவிக்கும் என்பதால் மாற்று எரிசக்தியில் இயங்கும் வாகனங்களைப் பயன்படுத்த அரசு ஊக்குவித்து வருகிறது. இது உலகம் முழுவதும் எலெக்ரிக் வாகனங்கள் மீதான மோகத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.
அந்த வகையில் தற்போது ஷெல் நிறுவனம் சிங்கப்பூரில் நடுக்கடலில் எண்ணெய் கிணறு அமைத்து எடுத்து வரும் கச்சா எண்ணெய் ஆலையில் முதன் முறையாக எலெக்ட்ரிக் ஃபெர்ரி படகை அறிமுகம் செய்துள்ளது.

இந்நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கரையிலிருந்து நடுக் கடலில் உள்ள ஆலைக்கும், ஆலையிலிருந்து கரைக்கும், சென்று வர ஃபெர்ரி வகை படகைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த படகு ஆட்கள், சிறிய ரக கருவிகள், பொருட்கள், சரக்குகளை ஏற்றிச் செல்ல உகந்தது. தினமும் இந்த படகின் பயன்பாடு அதிகமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் இதுவரை இதற்கு டீசலில் இயங்கும் படகுதான் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் முடிந்தளவிற்கு பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறைத்து மாசுவை கட்டுப்படுத்தும் நோக்கில் ஷெல் நிறுவனமும் இணைந்தது. இதற்கான பல திட்டங்களை வகுத்துள்ளனர்.

இந்நிலையில் இந்த குறிப்பிட்ட ஆலையில் பயன்படுத்தப்படும் வாகனங்களிலிருந்து வரும் 2030ம் ஆண்டிற்கும் மாசு வெளியேறாது என்ற முடிவை எடுத்தது. இதற்கு முதற்கட்டமாக இந்த ஆலைக்குப் பயன்படுத்தப்படும் படகுகளில் தற்போது எலெக்ட்ரிக் ஃபெர்ரி படகை முதன் முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்காக ஷெல் ஈஸ்டர்ன் டிரேடிங் கம்பெனி கரையில் உள்ள சிங்கப்பூர் மெர்ரிடைம் மற்றும் போர்ட் அத்தாரிட்டியிடம் சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைக்க ஒப்பந்தம் செய்துள்ளது. இது மட்டுமல்ல அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்த எலெக்ட்ரிக் படகுகளைப் பயன்படுத்த ஆய்வு மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்காகவும் திட்டமிட்டுள்ளது. இந்த சார்ஜிங் ஸ்டேஷன்களை பயன்படுத்தவுள்ளது.
தற்போது முதல் கட்டமாக 200 சீட்டர் கொண்ட எலெக்ட்ரிக் ஃபெர்ரி படகை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது ஒரு படகு மட்டுமே எலெக்ட்ரிக் படகாக மாறியுள்ளது. வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் மீதம் உள்ள 2 டீசல் படகையும் எலெக்ட்ரிக் படகாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது போகத் தனியாக ஹைட்ரஜன் ப்யூயல் செல்லில் இயங்கும் ஷெல்-சார்ட்டட் கப்பல்களை இந்தாண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இது அறிமுகமானால் அது மிகப்பெரிய சாதனையாகக் கருதப்படும். இது காற்று மாசுவை வெளியேற்றாமல் பசுமை கப்பலாக இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டீசல்/பெட்ரோலுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் வாகனங்களைப் பயன்படுத்த வேண்டிய கட்டாய சூழ்நிலையில் இந்த உலகம் இருக்கிறது. முடிந்தளவிற்குக் காற்று மாசுவை குறைக்கும் நோக்கில் நாம் செயல்பட வேண்டும். இதற்கு அரசு மனசு வைத்தால் மட்டும் முடியாது கொள்கை ரீதியில் ஒவ்வொரு தனி நபரும் மனது வைக்க வேண்டும். நீங்களும் இதைப் பற்றிச் சிந்தியுங்கள்.


Click it and Unblock the Notifications








