எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பிரியர்களுக்கு செம விருந்து... புதுசா 3 வந்துருக்கு... என்னனு பாருங்க...

Shema electric நிறுவனம் 2022 இவி இந்தியா எக்ஸ்போவில் 3 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது. இது குறித்த முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பிரியர்களுக்கு செம விருந்து . . . புதுசா 3 வந்துருக்கு . . . என்னனு பாருங்க . . .

ஒடிசாவைச் சேர்ந்த நிறுவனம் ஷீமா எலெக்ட்ரிக் இந்நிறுவனம் தற்போது இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் தனது 40 டீலர்கள் மூலம் குறைந்த வேகத்தில் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது.இந்நிறுவனம் இன்று பெருநகர நொய்டா பகுதியில் துவங்கிய 2022 இவிஇந்தியா எக்ஸ்போவில் தனது 3 புதிய வேகமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பிரியர்களுக்கு செம விருந்து . . . புதுசா 3 வந்துருக்கு . . . என்னனு பாருங்க . . .

இந்நிறுவனம் இன்று ஈகிள் பிளஸ், க்ரைப்தான், டஃப் ப்ளஸ் ஆகிய நிறுவனங்களின் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ஈகிள் பிளஸ் ஸ்கூட்டரை பொருத்தவரை அந்நிறுவனத்தின் அதிகவேக ஸ்கூட்டராக விற்பனைக்கு வந்துள்ளது. இந்த ஸ்கூட்டர் 50 கி.மீ வேகம் வரை பயணிக்கும் திறன் கொண்டது.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பிரியர்களுக்கு செம விருந்து . . . புதுசா 3 வந்துருக்கு . . . என்னனு பாருங்க . . .

இந்த ஸ்கூட்டர் நகர் புறங்களில் பயணிக்க ஏற்ற ஸ்கூட்டர், இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜில் 120 கி.மீ தூரம் வரை பயணிக்கும் திறன். கொண்டது. இந்த ஸ்கூட்டரின் பேட்டரியை பொருத்தவரை3.2 kwh லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது சார்ஜ் ஏற 3.5 முதல் 4 மணி நேரம் வரை எடுத்துக்கொள்ளும் மோட்டாரை பொருத்தவரை 1200வாட் BLDC மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பிரியர்களுக்கு செம விருந்து . . . புதுசா 3 வந்துருக்கு . . . என்னனு பாருங்க . . .

க்ரைப்பான் ஸ்கூட்டரை பொருத்தவரை இதுவும் அதிக வேக ஸ்கூட்டர் தான் 60 கி.மீ வேகம் வரை பயணிக்கும் திறன் கொண்டது. இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜில் 130 கி.மீ வரை பயணிக்கும். இந்த ஸ்கூட்டரில் 4.1 kwh லித்தியம் அயான் பேட்டரி கொண்டது. இந்த ஸ்கூட்டரில் 1500 வாட் BLDC மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரி சார்ஜ் ஏற 3.5 மணி முதல் 4 மணி நேரம் எடுத்துக்கொள்ளும்.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பிரியர்களுக்கு செம விருந்து . . . புதுசா 3 வந்துருக்கு . . . என்னனு பாருங்க . . .

டஃப் பிளஸ், ஷீமா நிறுவனம் அறிமுகப்படுத்தும் 3வது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இது. இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜில் 130 கி.மீ தூரம் வரை பயணிக்கும் திறன் கொண்டது. இந்த ஸ்கூட்டர் அதிகபட்ச வேகமாக 60 கி.மீ வேகம் வரை செல்லும், இந்த ஸ்கூட்டரில் 1500 வாட் BLDC மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் முழுமையாக சார்ஜ் ஏற 3.5 முதல் 4 மணி நேரம் வரை எடுத்துக்கொள்ளும்.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பிரியர்களுக்கு செம விருந்து . . . புதுசா 3 வந்துருக்கு . . . என்னனு பாருங்க . . .

இந்த ஸ்கூட்டர்கள் குறித்து ஷீமா நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான யோகேஷ் குமார் லாத் கூறும் போது "தற்போது நடக்கும் எலெக்ட்ரிக் வாகனப் புரட்சியில் சிறந்த தயாரிப்புகளை வழங்கப் பல நிறுவனங்கள் முயற்சி செய்து வருகின்றனர்.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பிரியர்களுக்கு செம விருந்து . . . புதுசா 3 வந்துருக்கு . . . என்னனு பாருங்க . . .

இதில் ஷீமா எலெக்ட்ரிக் நிறுவனமும் தனது தரத்தையும் செயல்திறனையும் குறைக்காமல் வாகனங்களை விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. எங்கள் நிறுவனத்திற்கு வாடிக்கையாளர் அனுபவமே முக்கியம் என்கிற ரீதியில் செயல்பட்டுவருகிறோம். இந்த இவி எக்போவில் எங்கள் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறோம்" எனக் கூறினார்.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பிரியர்களுக்கு செம விருந்து . . . புதுசா 3 வந்துருக்கு . . . என்னனு பாருங்க . . .

இந்நிறுவனம் இந்தாண்டு இறுதிக்குள் 10,000 வாடிக்கையாளர்களைச் சென்றடைய வேண்டும் என்பதை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது. இத்துடன் இந்நிறுவனம் விற்பனைக்கு பிறகான சர்வீஸிலும் ஆதிக்கம் செலுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பிரியர்களுக்கு செம விருந்து . . . புதுசா 3 வந்துருக்கு . . . என்னனு பாருங்க . . .

இந்நிறுவனம் ஏற்கனவே SES ஈகிள், SES டஃப், SES ஜூம், SES ஹாபி, SES போல்ட் ஆகிய பெயர்களில் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது. இவை எல்லாம் குறைந்த வேக ஸ்கூட்டர்கள், இதில் ஒவ்வொரு ஸ்கூட்டருக்கும் 4-5 வேரியன்ட்களும் உள்ளன.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பிரியர்களுக்கு செம விருந்து . . . புதுசா 3 வந்துருக்கு . . . என்னனு பாருங்க . . .

இந்நிறுவனத்திற்குக் கடந்த 2016ம் ஆண்டு ARAI அங்கீகாரம் வழங்கியது. இந்நிறுவனம் தனது முதல் தயாரிப்பு ஆலையை ஒடிசா மாநிலம் சாம்பல்பூரிலும், இரண்டாவது ஆலையை ஹரியானா மாநிலம் மனேசரில் இரண்டாவது ஆலையை நிறுவியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, September 8, 2022, 9:59 [IST]
English summary
Shema E vehicle introduced 3 electric two wheelers in 2022 EV India expo
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+