ஷிகார் தவான் வாங்கிய புது காரின் விலை இத்தனை கோடியா? பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்!

இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகார் தவான் மிகவும் விலை உயர்ந்த கார் ஒன்றை வாங்கியுள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஷிகார் தவான் வாங்கிய புது காரின் விலை இத்தனை கோடியா? பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் ஷிகார் தவான். இவர் தற்போது புத்தம் புதிய பிஎம்டபிள்யூ எம்8 கூபே (BMW M8 Coupe) காரை வாங்கியுள்ளார். பிஎம்டபிள்யூ எம்8 கூபே கார் இந்திய சந்தையில், கடந்த 2020ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. செயல்திறனை பெரிதும் விரும்ப கூடிய வாடிக்கையாளர்களுக்கு பிஎம்டபிள்யூ எம்8 கூபே ஏற்றது.

ஷிகார் தவான் வாங்கிய புது காரின் விலை இத்தனை கோடியா? பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்!

ஏனெனில் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மிகவும் சக்தி வாய்ந்த பிஎம்டபிள்யூ கூபே கார் என்றால், அது எம்8 மாடல்தான். ஆடி ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக் (Audi RS7 Sportback) மற்றும் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜிடி 63 (Mercedes-AMG GT 63) உள்ளிட்ட செயல்திறன் மிக்க கார்களுடன், பிஎம்டபிள்யூ எம்8 கூபே விற்பனையில் போட்டியிட்டு வருகிறது.

ஷிகார் தவான் வாங்கிய புது காரின் விலை இத்தனை கோடியா? பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்!

இது பிஎம்டபிள்யூ 8 சீரிஸ் க்ரான் கூபே (BMW 8 Series Gran Coupe) காரின் 'M' பெர்ஃபார்மென்ஸ் வெர்ஷன் ஆகும். பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் மற்ற கார்களை போல், எம்8 கூபே காரிலும் ஏராளமான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில், 10.25 இன்ச் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை முக்கியமானது.

ஷிகார் தவான் வாங்கிய புது காரின் விலை இத்தனை கோடியா? பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்!

இதுதவிர ஆம்பியண்ட் லைட்டிங், ஹார்மன் சவுண்ட் சிஸ்டம், M ஸ்போர்ட் இருக்கைகள், வயர்லெஸ் சார்ஜிங், ஆப்பிள் கார்பிளே, பிஎம்டபிள்யூ டிஸ்ப்ளே கீ மற்றும் பார்க் அஸிஸ்ட் பிளஸ் உள்ளிட்ட வசதிகளும், பிஎம்டபிள்யூ எம்8 கூபே காரில் வழங்கப்பட்டுள்ளன. பிஎம்டபிள்யூ எம்8 கூபே காரில் வசதிகளுக்கு சற்றும் பஞ்சமில்லை.

ஷிகார் தவான் வாங்கிய புது காரின் விலை இத்தனை கோடியா? பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்!

அதே சமயம் பிஎம்டபிள்யூ எம்8 கூபே காரில், 4.4 லிட்டர், வி8 ட்வின்-டர்போசார்ஜ்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் சக்தி வாய்ந்த இன்ஜின்களில் ஒன்றாகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 592 பிஎச்பி பவரையும், 750 என்எம் டார்க் திறனையும் வாரி வழங்கி, சாலைகளில் சீறிப்பாய்ந்து செல்லும்.

ஷிகார் தவான் வாங்கிய புது காரின் விலை இத்தனை கோடியா? பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்!

இந்த இன்ஜின் உடன் 8 ஸ்பீடு ஸ்டெப்டிரானிக் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன் M-spec xDrive ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்தையும் பிஎம்டபிள்யூ எம்8 கூபே கார் பெற்றுள்ளது. காரின் நான்கு சக்கரங்களுக்கும் இது இன்ஜின் சக்தியை அனுப்புகிறது. நாங்கள் ஏற்கனவே கூறியபடி பிஎம்டபிள்யூ எம்8 கூபே செயல்திறன் மிக்க கார் ஆகும்.

ஷிகார் தவான் வாங்கிய புது காரின் விலை இத்தனை கோடியா? பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்!

பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 3.3 வினாடிகளில் இந்த கார் எட்டி விடும். மூன்று இலக்க வேகத்தை இவ்வளவு விரைவாக எட்டுவது உண்மையிலேயே சிறப்பான பெர்ஃபார்மென்ஸை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களை குதூகலம் கொள்ள செய்யும் என்பதில் சந்தேகமில்லை.

ஷிகார் தவான் வாங்கிய புது காரின் விலை இத்தனை கோடியா? பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்!

இந்த கார் ஒரு லிட்டருக்கு 9.52 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும். இது அராய் அமைப்பு சான்று வழங்கிய மைலேஜ் ஆகும். நடைமுறை பயன்பாட்டில் மைலேஜ் இன்னும் குறையும். அதே சமயம் பிஎம்டபிள்யூ எம்8 கூபே காரின் நீளம் 4,867 மிமீ ஆகும். அகலம் 1,907 மிமீ ஆகும். அதே சமயம் இந்த காரின் உயரம் 1,362 மிமீ-ஆக உள்ளது.

ஷிகார் தவான் வாங்கிய புது காரின் விலை இத்தனை கோடியா? பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்!

பிஎம்டபிள்யூ எம்8 கூபே காரின் வீல்பேஸ் நீளம் 2827 மிமீ ஆகும். அதே நேரத்தில் இந்த காரின் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 130 மிமீ மட்டுமே. பிஎம்டபிள்யூ எம்8 கூபே காரின் எடை 1960 கிலோ ஆகும். சுமார் 2 ஆயிரம் கிலோ எடை கொண்ட காராக இருந்தாலும், செயல்திறனில் பிஎம்டபிள்யூ எம்8 கூபே அமர்க்களப்படுத்துவது குறிப்பிடத்தக்கது.

ஷிகார் தவான் வாங்கிய புது காரின் விலை இத்தனை கோடியா? பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்!

பிஎம்டபிள்யூ எம்8 கூபே கார், 2 டோர்களை மட்டுமே கொண்ட மாடல் ஆகும். இந்த காரில் அதிகபட்சமாக 4 பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும். அதே சமயம் இந்த காரின் பூட் ஸ்பேஸ் 420 லிட்டர்கள் ஆகும். அதே சமயம் இந்த காரில் 68 லிட்டர்கள் கொள்ளவு கொண்ட எரிபொருள் டேங்க் வழங்கப்பட்டுள்ளது. எனவே ஒரு முறை முழுமையாக எரிபொருள் டேங்க்கை நிரப்பினால் சுமார் 600 கிலோ மீட்டர்கள் வரை பயணிக்கலாம்.

ஷிகார் தவான் வாங்கிய புது காரின் விலை இத்தனை கோடியா? பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்!

அதே நேரத்தில் செயல்திறனை போல் பாதுகாப்பு அம்சங்களிலும் பிஎம்டபிள்யூ எம்8 கூபே கார் தலைசிறந்து விளங்குகிறது. இந்த காரில் பயணிகளின் பாதுகாப்பிற்காக மொத்தம் 6 ஏர்பேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், சீட் பெல்ட் அணியாவிட்டால் எச்சரிக்கும் வசதி உள்ளிட்ட வசதிகளையும் பிஎம்டபிள்யூ எம்8 கூபே கார் பெற்றுள்ளது.

ஷிகார் தவான் வாங்கிய புது காரின் விலை இத்தனை கோடியா? பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்!

பிஎம்டபிள்யூ எம்8 கூபே காரின் ஹெட்லைட், டெயில்லைட், பகல் நேரத்திலும் எரியும் விளக்குகள், பனி விளக்குகள் என அனைத்தும் எல்இடி லைட்கள்தான். இவ்வளவு சிறப்பம்சங்கள் நிரம்பிய பிஎம்டபிள்யூ எம்8 கூபே காரின் விலை சுமார் 2.41 கோடி ரூபாய் ஆகும். இது டெல்லி ஆன்-ரோடு விலை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

ஷிகார் தவான் வாங்கிய புது காரின் விலை இத்தனை கோடியா? பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்!

ஆனால் ஷிகார் தவான் இதற்கு முன்பே நிறைய விலை உயர்ந்த கார்களை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில், மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் 350 (Mercedes Benz GLS 350) முக்கியமானது. இதுதவிர ஆடி க்யூ7 (Audi Q7) காரும் ஷிகார் தவானிடம் உள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் மற்ற நட்சத்திர வீரர்களும் இதேபோல் பல்வேறு விலை உயர்ந்த கார்களை சொந்தமாக வைத்துள்ளனர்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Shikhar dhawan buys bmw m8 coupe worth rs 2 41 crore check details here
Story first published: Wednesday, September 1, 2021, 12:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X