மாநிலத்தையே ஆண்டவரின் பேரனை வளைத்து போட்ட தமிழ் நடிகையின் மகள்! புதுசா வாங்கன காரோட விலையே 6 கோடி ரூபாயா!

இந்தியாவில் ரேஞ்ச் ரோவர் (Range Rover) கார் வைத்திருப்பதை பலரும் தங்கள் அந்தஸ்தின் அடையாளமாக கருதுகின்றனர். எனவே இந்திய சந்தையில் ரேஞ்ச் ரோவர் காருக்கு மிகப்பெரிய 'டிமாண்ட்' இருந்து வருகிறது. குறிப்பாக திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் தொழில் அதிபர்கள் பலரும் ரேஞ்ச் ரோவர் காரின் உரிமையாளர்களாக உள்ளனர். அவர்களின் பட்டியலை எடுக்கும்பட்சத்தில், அது அனுமார் வால் போல் நீண்டு கொண்டே செல்லும். எனவே ஒரு சில பிரபலமான ரேஞ்ச் ரோவர் காரின் உரிமையாளர்களை மட்டும் இங்கே குறிப்பிடுகிறோம்.

முகேஷ் அம்பானி (Mukesh Ambani), ஷாருக்கான் (Shah Rukh Khan), சல்மான் கான் (Salman Khan), கார்த்திக் ஆர்யன் (Kartik Aaryan), சஞ்சய் தத் (Sanjay Dutt), காத்ரீனா கைஃப் (Katrina Kaif), ஆலியா பட் (Alia Bhatt) மற்றும் அனன்யா பாண்டே (Ananya Pandey) போன்ற திரையுலக நட்சத்திரங்களிடம் எல்லாம் ரேஞ்ச் ரோவர் கார் உள்ளது.

Shikhar Pahariya Buys Range Rover SV Serenity

இந்த வரிசையில் பிரபல நடிகையும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளுமான ஜான்வி கபூரிடமும் (Janhvi Kapoor) ரேஞ்ச் ரோவர் கார் இருக்கிறது. இவரை தொடர்ந்து ஜான்வி கபூரின் காதலர் என கூறப்படும் ஷிகார் பகாரியா (Shikhar Pahariya) தற்போது புத்தம் புதிய ரேஞ்ச் ரோவர் கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

இவர் மிகவும் பிரபலமான தொழில் அதிபர்களில் ஒருவரான சஞ்சய் பகாரியாவின் (Sanjay Pahariya) மகன் ஆவார். அத்துடன் மஹாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல் அமைச்சரான சுஷில் குமார் ஷிண்டேவின் (Sushil Kumar Shinde) பேரன் என்ற அடையாளமும் ஷிகார் பகாரியாவிற்கு உள்ளது.

Range Rover SV Serenity

ஷிகார் பகாரியா தற்போது வாங்கியிருப்பது ரேஞ்ச் ரோவர் எஸ்வி செரினிட்டி (Range Rover SV Serenity) கார் ஆகும். ஷிகார் பகாரியா ரேஞ்ச் ரோவர் எஸ்வி செரினிட்டி காரை வாங்கியிருப்பது தொடர்பான வீடியோ (Video) ஒன்று யூடியூப் (YouTube) தளத்தில் தற்போது பதிவிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோவில், ஷிகார் பகாரியா வாங்கியுள்ள ரேஞ்ச் ரோவர் எஸ்வி செரினிட்டி காரின் விலை 5.76 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷிகார் பகாரியா மிகவும் விலை உயர்ந்த கார்களை அதிகமாக நேசிக்க கூடியவர் ஆவார். இதற்கு முன்பாக அவரிடம் லம்போர்கினி அவென்டெடார் (Lamborghini Aventador) கார் ஒன்று இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: தொழில் அதிபர்கள், திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்கள், பெரும்பாலும் மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களில் பயணம் செய்வதையே விரும்புகின்றனர். இதற்கு ஷிகார் பகாரியாவும் விதிவிலக்கு அல்ல என்பது அவர் வாங்கியுள்ள ரேஞ்ச் ரோவர் எஸ்வி செரினிட்டி கார் மூலமாகவே தெரிய வருகிறது.

கூடிய விரைவில், ஜான்வி கபூர் மற்றும் ஷிகார் பகாரியா ஆகிய இருவரையும், ரேஞ்ச் ரோவர் எஸ்வி செரினிட்டி காரில் ஒன்றாக பார்க்க முடியும் என நாம் எதிர்பார்க்கலாம். மறுபக்கம் நடிகை ஜான்வி கபூரும், ரேஞ்ச் ரோவர் மட்டுமின்றி, லெக்ஸஸ் எல்எம் 350ஹெச் (Lexus LM 350h) மற்றும் பிஎம்டபிள்யூ எக்ஸ்5 (BMW X5) ஆகிய விலை உயர்ந்த கார்களை எல்லாம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 19, 2025, 13:24 [IST]
English summary
Shikhar pahariya buys range rover sv serenity video
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+