ரெண்டரை கோடி ரூபா காரை வாங்கற அளவுக்கு பெரிய ஆள் ஆயிட்டாங்களா! ஊரையே மிரள வைத்த இன்ஸ்டா ஜோடி! அவங்களா இது!

இந்தியாவில் தற்போதெல்லாம் திரையுலக நட்சத்திரங்களுக்கு இணையான ரசிகர்கள் வட்டத்தை, சமூக வலை தளங்களில் பிரபலமாக உள்ளவர்களும் வைத்துள்ளனர். குறிப்பாக சமூக வலை தளங்களில் பிரபலமாக உள்ள ஒரு சில தம்பதிகளுக்கு, மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் இருக்கிறது. இதில், ஷில்பா கட்வானி - சஜீத் சாஹித் (Shilpa Khatwani - Sajid Shahid) தம்பதியினர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

கணவன், மனைவியான இவர்கள் இருவரும், சமூக வலை தளங்களில் நகைச்சுவையான கன்டென்ட்களை உருவாக்கி வருகின்றனர். இதன் காரணமாக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக திகழ்கின்றனர். இவர்கள் இருவரும் தற்போது மிகவும் விலை உயர்ந்த கார் ஒன்றை வாங்கியுள்ளனர். அது லேண்ட் ரோவர் டிஃபெண்டர் (Land Rover Defender) ஆகும்.

Shilpa Khatwani - Sajid Shahid Buys Land Rover Defender

ஷில்பா கட்வானி - சஜீத் சாஹித் ஆகிய இருவரும் ஷோரூமிற்கு சென்று, லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரை டெலிவரி எடுத்த வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. ஷில்பா கட்வானியின் யூடியூப் பக்கத்தில் இந்த வைரல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

செயல்திறனை பொறுத்தவரையில் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரில், 2.0 லிட்டர் பெட்ரோல், 3.0 லிட்டர் பெட்ரோல், 3.0 லிட்டர் டீசல், 4.4 லிட்டர் வி8 ட்வின் டர்போ பெட்ரோல் மற்றும் 5.0 லிட்டர் வி8 பெட்ரோல் என மொத்தம் 5 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்படுகின்றன. இந்த 5 இன்ஜின் ஆப்ஷன்கள் உடனும், ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன் ஸ்டாண்டர்டாக கொடுக்கப்படுகிறது.

Shilpa Khatwani - Sajid Shahid

இந்த காரின் ஆரம்ப விலை வேரியண்ட்டின் விலை 98 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 2.60 கோடி ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். அத்துடன் இது மிகவும் விலை உயர்ந்த கார் என்பதால், ஏராளமான வசதிகளும் (Features) வாரி வழங்கப்பட்டுள்ளன.

வசதிகளை பொறுத்தவரை, 10 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 12.3 இன்ச் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் சிஸ்டம், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, வயர்லெஸ் செல்போன் சார்ஜர், கனெக்டட் கார் தொழில்நுட்பம், மெரிடியன் பீரிமியம் ஸ்பீக்கர் சிஸ்டம் மற்றும் எலெக்ட்ரானிக் ஏர் சஸ்பென்ஸன் போன்ற அம்சங்கள் எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

அத்துடன் 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ், டிராக்ஸன் கண்ட்ரோல், 360 டிகிரி கேமரா, முன் மற்றும் பின் பகுதியில் பார்க்கிங் சென்சார்கள் போன்ற வசதிகளையும், லேண்ட் ரோவர் டிஃபெண்டர் கார் கொண்டுள்ளது. எனவே இது வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பு ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஷில்பா கட்வானி - சஜீத் சாஹித் ஆகியோர் வாங்கியிருப்பது லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரின் என்ன வேரியண்ட்? என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனால் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரை ஷில்பா கட்வானி தங்களுடைய கனவு கார் என குறிப்பிட்டுள்ளார். லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரானது, எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது ஆகும். இதை திரையுலக நட்சத்திரங்கள் பலரும் வைத்துள்ளனர்.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 8, 2025, 14:41 [IST]
English summary
Shilpa khatwani sajid shahid buys land rover defender viral video check all details here
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+