இன்னமும் இவ்ளோ அழகா இருக்காங்களே... 3 கோடி ரூபாய் காரில் வந்து இறங்கனது அவங்களா... யார்னு அடையாளம் தெரியுதா?

இந்திய பணக்காரர்கள் மத்தியில் ரேஞ்ச் ரோவர் (Range Rover) கார்களுக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. குறிப்பாக பாலிவுட் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் ரேஞ்ச் ரோவர் ரசிகர்களாக உள்ளனர். பாபி தியோல் (Bobby Deol) மற்றும் அனன்யா பாண்டே (Ananya Panday) போன்றவர்களை இதற்கு உதாரணமாக கூற முடியும். இவர்கள் இருவரும் ரேஞ்ச் ரோவர் கார்களை சமீபத்தில் வாங்கியுள்ளனர். இவர்கள் தவிர இன்னும் நிறைய பாலிவுட் பிரபலங்களிடமும் ரேஞ்ச் ரோவர் கார்கள் சொந்தமாக இருக்கின்றன.

இதில், சல்மான் கான் (Salman Khan), ஹிருத்திக் ரோஷன் (Hrithik Roshan), ரன்பீர் கபூர் (Ranbir Kapoor), அலியா பட் (Alia Bhatt) மற்றும் கார்த்திக் ஆர்யன் (Kartik Aaryan) போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். இந்த வரிசையில் பிரபல பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டி (Shilpa Shetty) தற்போது புத்தம் புதிய ரேஞ்ச் ரோவர் கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

Shilpa Shetty Buys Range Rover

49 வயதாகும் ஷில்பா ஷெட்டி, தனது புதிய ரேஞ்ச் ரோவர் காரில் வந்து இறங்கிய வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோ, மும்பை (Mumbai) நகரில் எடுக்கப்பட்டதாகும்.

ஷில்பா ஷெட்டி வந்து இறங்கியது, அவரது வீடு அல்லது அலுவலகமாக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஷில்பா ஷெட்டி வாங்கியிருப்பது ரேஞ்ச் ரோவர் காரின், எல்டபிள்யூபி ஹெச்எஸ்இ வேரியண்ட் (LWB HSE Variant) ஆகும். இந்த வேரியண்ட்டில், 3.0 லிட்டர் ட்வின் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

Range Rover

அதிகபட்சமாக 346 பிஹெச்பி பவர் மற்றும் 700 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது. இன்ஜின் உருவாக்கும் சக்தியானது, இதன் மூலமாக காரின் 4 சக்கரங்களுக்கும் செலுத்தப்படுகிறது.

வசதிகளை பொறுத்தவரையில், 13.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 13.7 இன்ச் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 4 ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் 35 ஸ்பீக்கர்கள் உடன் 1,600W மெரிடியன் சவுண்ட் சிஸ்டம் போன்றவை எல்லாம் இந்த காரின் மிகவும் முக்கியமான அம்சங்களாக கருதப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஷில்பா ஷெட்டி சொகுசு கார்களில் பயணம் செய்வதை விரும்ப கூடியவர். அதன் வெளிப்பாடுதான், இந்த ரேஞ்ச் ரோவர் கார். இதற்கு முன்னதாகவே அவரிடம் நிறைய சொகுசு கார்கள் இருக்கின்றன. இதில், பிஎம்டபிள்யூ ஐ8 (BMW i8), பிஎம்டபிள்யூ எக்ஸ்5 (BMW X5) மற்றும் பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் (BMW 7-Series) போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.

இவை எல்லாம் தவிர, பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி (Bentley Continental GT), மெர்சிடிஸ்-பென்ஸ் வி-க்ளாஸ் (Mercedes-Benz V-Class), மெர்சிடிஸ்-மேபெக் ஜிஎல்எஸ்600 (Mercedes-Maybach GLS600) மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி (Mercedes Benz G63 AMG) உள்ளிட்ட கார்களும், ஷில்பா ஷெட்டியிடம் உள்ளன.

இந்த வரிசையில்தான் தற்போது புதிய ரேஞ்ச் ரோவர் கார் ஒன்றை ஷில்பா ஷெட்டி வாங்கியுள்ளார். இதன் ஆன்-ரோடு விலை (On-Road Price) சுமார் 2.80 கோடி ரூபாய் வரும். மிகவும் விலை உயர்ந்த காராக இருந்தாலும் கூட, அதற்கு ஏற்ற வகையில் சொகுசான பயணத்தை இது பயணிகளுக்கு வழங்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

More from DriveSpark

Article Published On: Monday, July 29, 2024, 21:49 [IST]
English summary
Shilpa shetty buys range rover viral video full details
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+