கூகுள் மேப்பை பின்தொடர்ந்து சென்ற நடிகைக்கு காத்திருந்த அதிர்ச்சி!! ஓபனாக அவரே சொன்ன விஷயம்!
ஷில்பா ஷெட்டி (Shilpa Shetty), பிரபலமான பாலிவுட் நடிகையான இவர் கூகுள் மேப்-ஆல் தான் அடைந்த துயரத்தை தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். நடிகை ஷில்பா ஷெட்டி அப்படி என்ன கூறினார்? வாருங்கள் அதனை பற்றி இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
உலகளவில் இன்று சிறந்த வழிக்காட்டியாக இருப்பது கூகுள் மேப் ஆகும். கார் நிறுவனங்களும் தங்களது கார்களில் கூகுள் மேப் வசதியை வழங்குகின்றன. இதனால், புதிய இடங்களுக்கு மற்றவர்களிடத்தில் வழி கேட்டு செல்வது மக்களிடையே வெகுவாக குறைந்துவிட்டது. இருப்பினும் அதேநேரம், சிலர் கூகுள் மேப்பை பயன்படுத்தியதால் அடைந்த கஷ்டங்களையும் புகார்களாக தெரிவித்துள்ளதை பார்த்திருக்கிறோம்.

சராசரி மனிதர்களுக்கு தான் இவ்வாறு நடக்கிறது என்று பார்த்தால், பெண்ட்லீ போன்ற விலையுயர்ந்த காரை வைத்திருக்கும் சினிமா நடிகையிடமும் கூகுள் மேப் தனது வேலையை காட்டியுள்ளது. இந்த வகையில், கூகுள் மேப்-ஆல் துயரமடைந்திருப்பவர் பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி ஆவார்.
இந்தி மொழியில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ள ஷில்பா ஷெட்டி தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் தனது ஓட்டை பதிவு செய்வதற்காக தனது புத்தம் புதிய ரேஞ்ச் ரோவர் காரில் வந்திறங்கியது இணையத்தில் வைரலாகி இருந்தது. அதனை தொடர்ந்து, சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றிற்கு தனது விலையுயர்ந்த பென்ட்லீ காரை ஷில்பா ஷெட்டி கொண்டு சென்றுள்ளார்.

தனியார் நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இந்த நிகழ்ச்சிக்கு நடிகை ஷில்பா ஷெட்டி சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு இருந்தார். இதனால், நிகழ்ச்சி வந்திருந்தவர்களும், பத்திரிக்கையாளர்களும் ஷில்பா ஷெட்டியின் வருகைக்காக ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், அவர் வருவதற்கு தொடர்ந்து தாமதமாகி கொண்டே இருந்தது. பின்னர் ஒருவழியாக, ஷில்பா ஷெட்டி நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை வந்தடைந்தார்.
பெண்ட்லீ ஃப்ளையிங் ஸ்பர் என்கிற லக்சரி செடான் காரில் நடிகை ஷில்பா ஷெட்டி வந்திறங்கியதும் அவரை கேமராக்கள் சூழ்ந்தன. பின்னர் நிகழ்ச்சி அரங்கிற்குள் நுழைந்த ஷில்பா ஷெட்டியிடம் கேட்கப்பட்ட முதல் கேள்வியே, நிகழ்ச்சிக்கு வர தாமதம் ஏன்? என்பதுதான். இதற்கு பதிலளித்த ஷில்பா ஷெட்டி, இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு கூகுள் மேப்பை பயன்படுத்தியதாகவும், அது காட்டிய வழியில் பின்தொடர்ந்து வந்ததாகவும் கூறினார்.

அவ்வாறு ஷில்பா ஷெட்டி வந்துக் கொண்டிருந்த போது, ஒரு இடத்தில் கூகுள் மேப் வலது பக்கம் செல்ல வேண்டும் என காட்டியுள்ளது. ஆனால், அது ஒருவழிச் சாலை ஆகும். உள்ளே நுழைய கூடாது என போர்டு வைக்கப்பட்டிருந்தால், சுற்றிக் கொண்டு வந்ததால் தாமதமாகி விட்டதாக ஷில்பா ஷெட்டி தெரிவித்தார். இதன் மூலமாக, கூகுள் மேப்-ஆல் வழி தவறி போனவர்களில் நடிகை ஷில்பா ஷெட்டியும் இணைந்துள்ளார்.
ஷில்பா ஷெட்டியின் பெண்ட்லீ ஃப்ளையிங் ஸ்பர் காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இதனை ஷில்பா ஷெட்டி சமீபத்தில் சில மாதங்களுக்கு முன்னர் தான் வாங்கினார். தெலுங்கானாவை சேர்ந்த ஒரு நிறுவனத்தின் மூலமாக இந்த பெண்ட்லீ காரை ஷில்பா ஷெட்டி வாங்கினார். ஆரம்பத்தில் இந்த காருக்கு கண்ணாடி போன்றதான பெயிண்ட்டை வழங்கியிருந்த ஷில்பா ஷெட்டி, பின்னர் அதனை நீக்கி காரை முழுவதுமாக வெள்ளை நிறத்திற்கு மாற்றினார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கூகுள் மேப் 100% சரியானது என கூற முடியாது. கூகுள் நிறுவனமே இதை ஒத்துக் கொள்ளாது. ஏனெனில், உலகம் அந்த அளவிற்கு பெரியது. சிறிய பாதைகள் இன்னமும் கூகுள் மேப்பில் சில இடங்களில் தவறாகவே காட்டப்படுகின்றன. ஆனால், இந்த தவறை திருத்திக் கொள்ள கூகுள் மேப்பை கூகுள் நிறுவனம் தொடர்ந்து அப்டேட் செய்து வருகிறது. ஆதலால், வரும் காலங்களில் இந்த சிறு, சிறு பிரச்சனைகள் கூட கூகுள் மேப்பினால் ஏற்படாது என நம்பலாம்.


Click it and Unblock the Notifications









