கோடி ரூபாய் மதிப்புள்ள காரை செகண்ட் ஹேண்டில் வாங்கிய பிரபல நடிகை இவரா?

சமீபத்தில் நடிகை ஷில்பா ஷெட்டி ரூபாய் கோடி கணக்கில் மதிப்பிலான கார் ஒன்றில் வந்திறங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இவர் வந்திறங்கிய காத்தர் போது மார்க்கெட்டில் விற்பனையிலேயே இல்லை இந்த காரில் இவர் எப்படி வந்து இறங்கினார் இந்த காரில் அப்படி என்ன என்ன அம்சங்கள் எல்லாம் இருக்கின்றன என்ற விரிவான விபரங்களை தான் இங்கே காணப் போகிறோம்.

சமீபகாலமாக சினிமா பிரபலங்கள் மற்றும் பெரும் பணக்காரர்கள் பல புதிய கார்களை வாங்கி குவித்து வருகிறார்கள். பலர் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் ரேஞ்ச் ரோவர் கார்களை வாங்கி வருகிறார்கள். இது குறித்து பல்வேறு விதமான அப்டேட்களை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். நமது இணையதளத்தில் இது போன்ற செய்திகள் தொடர்ந்து பதிவிட பட்டு வருகின்றன.

shilpa shetty in ferrari car

இந்நிலையில் தற்போது புதிதாக பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி தனது கார் கலெக்ஷனில் புதிய காரை சேர்த்துள்ளார். இவர் அவ்வப்போது தனது கார் கலெக்ஷனை அப்டேட் செய்வது வழக்கமாக இருக்கிறது. அப்படியாக சமீபத்தில் இவரது கார் கலெக்ஷன் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இவர் சமீபத்தில் தான் புதிதாக வாங்கிய கோடி கணக்கில் மதிப்பிலான ஃபெராரி காரில் மும்பை விமான நிலையத்தில் வந்து இறங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த வீடியோவில் நடிகை ஷில்பா ஷெட்டி அவரது கணவர் ராஜ் குந்த்ராவுடன் காரில் வந்து இறங்கினார். இந்த வீடியோ பலரை ஆச்சரியப்பட வைத்துள்ளது. ஏற்கனவே இந்த வீடியோ கார்ஸ் ஃபார் யூ என்ற யூடியூப் சேனலில் வெளியாகியுள்ளது. இவர் வந்த இறங்கியது சிவப்பு நிற ஃபெராரி சூப்பர் கார் ஆகும்0 இந்த கார் ஃபெராரி நிறுவனத்தின் போட்டோஃபினோ என்ற ரக காராக இருக்கிறது.

shilpa shetty in ferrari car

ஃபிராரி நிறுவனம் இந்த காரின் விற்பனையை நிறுத்திவிட்டது0 இந்நிலையில் நடிகை ஷில்பா ஷெட்டி இந்த காரை செகண்ட் ஹேண்டில் வாங்கி பயன்படுத்தி வரலாம் என தெரிய வருகிறது0 நடிகை ஷில்பா ஷெட்டி செகண்ட் ஹேண்டில் காரை வாங்குவது இது ஒன்று முதல் முறையில்லை. இதற்கு முன்னர் பல்வேறு விதமான சொகுசு கார்களை அவர் செகண்ட் ஹாண்டில் வாங்கி பயன்படுத்தி வந்துள்ளார்.

பெரும்பாலும் நடிகர் நடிகைகள் செகண்ட் கார் வாங்கும் போது அது சிறப்பாக பராமரிக்கப்பட்ட காராக இருந்தால் மட்டும் தான் வாங்குவார்கள். அப்படியாக நடிகை ஷில்பா ஷெட்டி வாங்கியுள்ள இந்த காரின் சிறப்பாக பராமரிக்கப்பட்ட காராகவே இருக்கிறது. இதன் தோற்றம் மற்றும் முழு புதிய கார் போன்ற லுக்கை நமக்கு கொடுக்கிறது.

shilpa shetty in ferrari car

தற்போது ஷில்பாஷெட்டி வந்திறங்கிய இந்த காரைப் பொறுத்தவரை நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதில் உள்ள எம் என்பதற்கு மோடிஃபிக்காட்டா என்று அர்த்தம். ஃபெர்பார்மென்ஸ் மேம்பாடு செய்யப்பட்ட வாகனங்களுக்கு இப்படியான பெயரை வழங்குவது வழக்கம். இதன்படி இந்த காருக்கும் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் பகுதியில் 5அனலாக் டயல்கள் உள்ளன. இது பொதுவாக ஃபெராரி நிறுவனத்தின் காஸ்ட்லியான கார்களில் காணப்படும் ஒரு கருவியாகும். இந்த கருவி இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த காரில் முக்கியமாக அடாஸ் தொழிற்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது. இதுபோக சீட்டுகள் எல்லாம் வெண்டிலேட் மற்றும் ஹீட்டட் சீட்டுகளாக வழங்கப்பட்டுள்ளன. இதனால் இந்த காரில் சொகுசான பயணம் செய்ய முடியும். இந்த ஃபெராரி போட்டோபினோ எம் காரின் இன்ஜினை பொருத்தவரை 3.9லிட்டர் டர்போ சார்ஜ்டு வி8 பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 620பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் டூயல் கிளட்ச் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த கார் 0 -100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.45 நொடியில் பிக்கப் செய்து விடும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் 200கிலோமீட்டர் வேகத்தை வெறும் 9.8நொடியில் பிக்கப் செய்து விடுகிறது. இந்த கார் தற்போது விற்பனையிலிருந்து நிறுத்தப்பட்டாலும் கடைசியாக இந்த கார் ரூ4.04 கோடி என்ற விலையில் விற்பனையாகி வந்தது. இது ஒன்றும் அதிகமான விலை கிடையாது. ஃபெராரி நிறுவனத்தின் குறைந்த விலை கார்களில் இதுவும் ஒன்று.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடிகை ஷில்பா ஷெட்டி மும்பை விமான நிலையத்தில் வந்த இறங்கிய நிறுவனத்தின் காராக இருந்ததால் பலர் அவரை திரும்பி பார்க்கும் வகையில் இந்த கார் இருந்தது. இந்த கார் தற்போது விற்பனையில் இல்லாவிட்டாலும் செகண்ட் இந்த காரை வாங்கி அவர் பயன்படுத்துகிறார் என்பது ஆச்சரியமான தகவலாக இருக்கிறது. பிரபலங்கள் இப்படியாக செகண்ட் ஹேண்டில் காரை வாங்கி பயன்படுத்துவது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 15, 2024, 12:42 [IST]
English summary
Shilpa shetty in ferrari car multi crore portofino video
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X