ரூ2 கோடி காரில் சிவராத்திரி கொண்டாட நடிகர் வீட்டிற்கு வந்திறங்கிய அழகு தேவதை! இவர் வந்த காரை பற்றி தெரியுமா?
இந்துக்களின் மிக முக்கியமான பண்டிகை மகாசிவராத்திரி இந்தியா முழுவதும் இந்த பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சிவபெருமானை வழிபட்டு ஒருநாள் இரவு முழுவதும் தூங்காமல் இருந்து சிவபெருமானை நினைத்து வேண்டுவது தான் இந்த நாளில் மிக முக்கியமான அம்சமாக இருக்கிறது. இந்த நாளில் பல முன்னணி பிரபலங்கள் கூட தங்கள் கொண்டாட்டங்களை பிரார்த்தனைகளை நிகழ்த்துவார்கள். இப்படியாக பிரபலம் ஒருவர் காஸ்ட்லியான காரில் மற்றொரு பிரபலம் வீட்டிற்கு சென்று சிவராத்திரி கொண்டாடியுள்ளார். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
நாடு முழுவதும் நேற்று மகா சிவராத்திரி கொண்டாடப்பட்டது. இதில் பிரபல நடிகையான சில்பா ஷெட்டி நடிகர் அனில்கபூர் வீட்டிற்கு சென்று சிவராத்திரி விழாவை கொண்டாடியுள்ளார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவத்தை விட அவர் எந்த காரில் சென்றார் என்ற விஷயம் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

பொதுவாக பிரபலங்கள் ஒன்றாக இணைந்து கொண்டாட்டங்களில் ஈடுபடுவது வாடிக்கையான ஒரு விஷயம்தான். இப்படியாக நடிகை சில்பா ஷெட்டியும் நடிகர் அனில் கபூரும் சேர்ந்து சிவராத்திரி விழாவை கொண்டாடியுள்ளார்கள். இதற்காக நடிகை ஷில்பா ஷெட்டி தனது ரேஞ்ச் ரோவர் ஆட்டோ பயோகிராபி காரில் வந்துள்ளார். அப்பொழுது அங்கு கூடியிருந்த பத்திரிக்கையாளர்கள் பலர் அவர் வந்ததை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்கள்.
நாம் இவர் வந்த வாகனத்தின் பதிவெண்னை வைத்து பரிவாகன் தளத்தில் தேடும் போது இது ஷில்பா ஷெட்டிக்கு சொந்தமான கார் என்பது தெரிய வருகிறது. இவர் இந்த காரை கடந்து 2024 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் தேதி வாங்கி உள்ளார். இது ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் லாங் வீல் பேஸ் கொண்ட காராக இருக்கிறது. பொதுவாக இந்த கார் பிரபலங்களால் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அதற்கு முக்கியமான காரணம் அதிகமான விலை தான்.

இந்த கார் வெளிமார்க்கெட்டில் ரூபாய் 2.70 கோடி என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனையாகி வருகிறது. இது ஒரு மைல்டு ஹைபிரிட் ரக காராகும். அதாவது ஒரே நேரத்தில் எலெக்ட்ரிக் மற்றும் பெட்ரோல் ஆகிய இரண்டிலும் இயங்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் பெட்ரோலில் இயங்குகிறது. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் இதன் இன்ஜின் இணைக்கப்பட்டுள்ளது. மொத்தம் ஏழு விதமான கலர் ஆப்ஷன்களில் இந்த கார் விற்பனைக்கு வருகிறது. இதில் நடிகை ஷில்பா ஷெட்டி வந்தது சான்ட்ரோனி பிளாக் நிற காராகும்.
இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை 394 php பவரையும் 550 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் இன்ஜின் ட்வின் டர்போ தொழிற்நுட்பத்தில் இயங்கும் இன்ஜினாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் ஏகப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் இருப்பதால் பிரபலங்கள் பல இந்த காரை வாங்கி வருகிறார்கள். முக்கியமாக இது நீண்ட வீல் பேஸ் கொண்ட காராக இருப்பதால் அதிக இட வசதி கொண்ட காராக இருக்கும்.

நடிகை ஷில்பா ஷெட்டி இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் பிரபலமானவர். ஆங்கிலத்தில் நடந்து வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சர்ச்சையில் சிக்கிய இவர் அப்பொழுதே உலக அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். தற்போது பாலிவுட் மட்டுமல்லாமல் ஹாலிவுட் திரைப்படங்களில் கூட நடித்து வருகிறார். இவர் சிவராத்திரியை கொண்டாட நடிகர் அணில் கபூர் வீட்டிற்கு சென்ற செய்தி தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடிகை ஷில்பா ஷிட்டி அனில் கபூர் வீட்டிற்கு சென்ற செய்தி பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், அதை விட அவர் சென்ற கார் குறித்து பலர் பேசி வருகிறார்கள். இந்த அளவுக்கு காஸ்ட்லியான காரை வைத்திருக்கிறாரா என்ற தகவல் தற்போது வைரலாக பரவி வருகிறது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications









