8 கோடி ரூபாய் காரில் தேவதை மாதிரி வந்தது அவங்களா! நல்லா உத்து பாத்ததுக்கு அப்புறம்தான் யார்னே தெரியுது!

பாலிவுட் நடிகைகள் (Bollywood Actresses) பலரும் மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களை (Luxury Cars) பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்கு ஷில்பா ஷெட்டியும் (Shilpa Shetty) விதிவிலக்கு அல்ல. இவர் கிரிக்கெட் (Cricket) மற்றும் யோகா (Yoga) போன்ற பல்வேறு விஷயங்களுடன், சொகுசு கார்களையும் உயிருக்கு உயிராக நேசிக்கிறார்.

ஐபிஎல் (IPL) தொடரில், ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajasthan Royals) அணியின் போட்டிகளில் நடிகை ஷில்பா ஷெட்டியை நீங்கள் பார்த்திருக்கலாம். ஷில்பா ஷெட்டியின் கராஜில், லம்போர்கினி அவென்டெடார் (Lamborghini Aventador), லம்போர்கினி கல்லார்டோ (Lamborghini Gallardo) மற்றும் போர்ஷே கேயென்னே ஜிடிஎஸ் (Porsche Cayenne GTS) உள்ளிட்ட கார்கள் இருக்கின்றன.

Bentley Flying Spur

இதுதவிர பிஎம்டபிள்யூ ஐ8 (BMW i8), பிஎம்டபிள்யூ எக்ஸ்5 (BMW X5), பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் (BMW 7-Series), மெர்சிடிஸ்-மேபெக் ஜிஎல்எஸ்600 (Mercedes-Maybach GLS600), மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி (Mercedes-Benz G63 AMG) மற்றும் மெர்சிடிஸ்-பென்ஸ் வி-க்ளாஸ் (Mercedes-Benz V-Class) ஆகிய கார்களும், ஷில்பா ஷெட்டியிடம் இருக்கின்றன.

மேலும் ரேஞ்ச் ரோவர் வோக் (Range Rover Vogue), பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி (Bentley Continental GT) ஆகிய கார்களும், ஷில்பா ஷெட்டி வசம் உள்ளன. இந்த வரிசையில் பென்ட்லீ ஃப்ளையிங் ஸ்பர் (Bentley Flying Spur) கார் ஒன்றை ஷில்பா ஷெட்டி சமீபத்தில் வாங்கினார். நடப்பு 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம்தான் இந்த கார் டெலிவரி எடுக்கப்பட்டது.

Shilpa Shetty Spotted In Bentley Flying Spur

இது யூஸ்டு கார் (Used Car) ஆகும். ஷில்பா ஷெட்டியின் கராஜில் உள்ள பல்வேறு கார்கள், செகண்ட் ஹேண்ட் கார்கள்தான் (Second Hand Cars) என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். ஷில் ஷெட்டி வாங்கியுள்ள பென்ட்லீ ஃப்ளையிங் ஸ்பர் காரானது, சொகுசு செடான் (Luxury Sedan) ரகத்தை சேர்ந்தது.

வெள்ளை நிறத்தில் வாங்கப்பட்ட இந்த காரில், ஷில்பா ஷெட்டி க்ரோம் வ்ராப் (Chrome Wrap) செய்துள்ளார். இது இந்த காரை வித்தியாசமாக காட்டுகிறது. சமீப காலமாக இந்த காரில்தான் ஷில்பா ஷெட்டி பல்வேறு இடங்களுக்கு சென்று வருகிறார். இந்த வரிசையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சமீபத்தில் கூட இந்த காரில் ஷில்பா ஷெட்டி வந்துள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட வைரல் வீடியோ (Viral Video) ஒன்று யூடியூப் (YouTube) தளத்தில் தற்போது பதிவிடப்பட்டுள்ளது. ரசிகர்கள் பலரும் இந்த வீடியோவில், ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது காரை ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் பென்ட்லீ ஃப்ளையிங் ஸ்பர் காரின் ஆரம்ப விலையே (Price) 5.25 கோடி ரூபாயாக உள்ளது.

அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 7.60 கோடி ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். ஆன் ரோடு விலை இன்னும் கூடுதலாக வரும். ஆனால் ஷில்பா ஷெட்டி இதை யூஸ்டு கார் மார்க்கெட்டில் வாங்கியுள்ளதால், துல்லியமான விலை எவ்வளவு? என்பது சரியாக தெரியவில்லை.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஷில்பா ஷெட்டி வாங்கியுள்ள பென்ட்லீ ஃப்ளையிங் ஸ்பர் காரில், 4.0 லிட்டர் ட்வின் டர்போசார்ஜ்டு வி8 பெட்ரோல் இன்ஜின் (Petrol Engine) வழங்கப்பட்டுள்ளது. இதன் பவர் அவுட்புட் 500 பிஎஸ்/650 என்எம் டார்க் ஆகும். எனவே இது சொகுசு, செயல்திறன் ஆகிய 2 அம்சங்களையும் ஒருங்கே கொண்டதாக உள்ளது. இந்த காரில் ஷில்பா ஷெட்டி தனது பயணங்களை 'என்ஜாய்' செய்வார் என நாம் உறுதியாக நம்பலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 8, 2023, 17:45 [IST]
English summary
Shilpa shetty spotted in bentley flying spur viral video all details
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+