நடுகடலில் எரியும் கப்பலை அனாதையாக விட்டு வெளியேறிய ஊழியர்கள்! எலெக்ட்ரிக் கார்கள் தான் எல்லாத்துக்கும் காரணம்!

3000 கார்களுடன் நடுக்கடலில் பயணித்த கப்பல் திடீரென தீ பிடித்த நிலையில், கப்பலை அனாதையாக விட்டுவிட்டு கப்பலில் உள்ள ஊழியர்கள் உயிர் தப்பினர். தற்போது கப்பலில் ஏரியும் தீயை கப்பலுக்குள் எலெக்ட்ரிக் கார் இருப்பதால் அணைக்க முடியாதல் மீட்டு படையினர் தவித்து வருகின்றனர். இந்த கப்பல் தீ பிடித்தது எப்படி? எலெக்ட்ரிக் காருக்கும், தீயை அணைக்க முடியாமல் போனதற்கும் என்ன சம்மந்தம்? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

சீனாவில் தயாரிக்கப்படும் பல்வேறு கார்கள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இப்படியாக சீனாவில் தயாரிக்கப்பட்ட சுமார் 3000 கார்கள் கடந்த மே 26ம் தேதி மார்னிங் மிடாஸ் என்ற கப்பல் மூலம் மெக்ஸிக்கோவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இந்த கப்பல் வரும் 15ம் தேதி மெக்ஸிக்கோ 0 கார்களில் 800 கார்கள் எலெக்ட்ரிக் கார்களாக உள்ளன. இந்நிலையில் கப்பல் அலாஸ்கா கடல் பகுதியில் துறைமுகத்திலிருந்து சுமார் 300 மைல் தொலைவில் வந்து கொண்டிருந்த போது கப்பலின் ஒரு பகுதியில் திடீரென தீப்பிடித்துள்ளது.

Ship Fire With Electric Cars

இதை பார்த்த கப்பல் ஊழியர்கள் இதை அணைக்க போராடியுள்ளனர். ஆனால் தீ அதையும் மீறி வேகமாக பரவியுள்ளது. ஒர கட்டத்தில் தீயை கட்டுப்படுத்த முடியாது என்பதை அறிந்த கப்பல் ஊழியர்கள் கப்பலை தனியாகவிட்டுவிட்டு உயிரை காப்பற்றிக்கொள்ள கப்பலில் உள்ள லைஃப் படகை பயன்படுத்த முடிவு செய்தனர். கப்பலின் கேப்டன் அருகில் உள்ள கப்பலுக்கு நிலைமையை எடுத்துக்கூறி உதவிக்கு வரும் படி கேட்டுக்கொண்டார்.

கப்பல் ஊழியர்கள் திட்டமிட்டபடி கப்பலை விட்டு வெளியேறினர். அவர்களை அருகில் உள்ள சரக்கு கப்பல் ஒன்று வந்து மீட்டது. இந்த கப்பலில் உள்ள 22 ஊழியர்களும் உயிருக்கு ஆபத்தின்றி தப்பினர். இந்நிலையில் இந்த தகவலை அறிந்து மீட்டு படையினர் வந்து தீயை அணிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.ஆனால் அவர்களால் ஒரளவிற்கு மேல் கப்பலை நெருக்க முடியவில்லை.

Ship Fire With Electric Cars

கப்பலில் உள்ள 3000 கார்களில் 300 கார்கள் எலெக்ட்ரிக் கார்களாக உள்ளன. இதில் லித்தியம் அயான் பேட்டரிகள் உள்ளன. இவை ஒரளவிற்கு மேல் வெப்பம் ஏறினால் வெடிக்கும் அபாயம் கொண்டது. இது மட்டுமல்ல மிக மோசமான வாயுவையும் வெளிப்படுத்தும். இதனால் தீயணைக்கும் படையினருக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. கப்பலுக்குள்ளும் ஏறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் இப்பொழது மீட்பு குழுவினர் தூரத்திலிருந்து கப்பல் ஏறியும் தன்மையையும், அதில் நடக்கும் விஷயங்களையும் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரித்த போது எலெக்ட்ரிக் கார்கள் நிறுத்தப்பட்ட இடத்தில் தான் முதலில் புகை கண்டறியப்படதாகவும். இதனால் எலெக்ட்ரிக் காரின் பேட்டரி ஏதாவது தீபிடித்திருக்கலாம் எனவும் கூறுகின்றனர்.

தற்போது தீயில் ஏரியும் கப்பலை காப்பாற்ற 3 உதவி கப்பல்கள், மற்றும் விமானங்கள் எல்லாம் தயாராக இருப்பதாகவும், நிலைமை தெரியாமல் சரியாக களத்தில் இறக்குவது சரியில்லை என்பதை நடப்பதை கண்காணித்துக்கொண்டிருப்பதாகவுவும் கூறியுள்ளனர். எலெக்ட்ரிக் கார்கள் என்பதால் இ்நத கப்பலில் தீ எரிய எரிய நிலைமை மோசமாக தான் வாய்ப்புள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மெக்ஸிக்கோ நாட்டில் விற்பனையாகும் ஒட்டு மொத்த எலெக்ட்ரிக் வாகனங்களில் 60 சதவீதமான எலெக்ட்ரிக் வாகனங்கள் சீனாவில் தயாரிக்கப்படும் வாகனங்கள் தான்இதனால் ஏகப்பட்ட வாகனங்கள் சீனாவிலிருந்து மெக்ஸிக்கோவிற்கு ஏற்றுமதியாகிறது. இந்த கப்பலில் ஏறியும் தீ மிகப்பெரிய பிரச்சனையாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, June 9, 2025, 16:55 [IST]
English summary
Ship fire with electric cars evs burn near alaska coast
மேலும்... #auto news
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+