Just In
- 2 hrs ago
முக்கியமான சாலையை கிழித்து கொண்டு சென்ற விசித்திரமான வாகனம்!! பதற்றத்தில் வழிவிட்ட வாகன ஓட்டிகள்...
- 2 hrs ago
மாருதியின் அதிகம் மைலேஜ் தரும் காரை ரீபேட்ஜ் செய்து தெ.ஆப்பிரிக்காவில் களமிறக்கும் டொயோட்டா..
- 5 hrs ago
டாடாவோட கதையை முடிக்க பிளான்.. ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- 6 hrs ago
ரிஷப் பண்ட்டை காப்பாற்றியவர்களுக்கு இவ்ளோ பெரிய பரிசா! நாடே இன்னைக்கு அவங்களை பத்திதான் பேசிகிட்டு இருக்கு!
Don't Miss!
- Finance
கௌதம் அதானி தூக்கத்தைக் கெடுத்த Hindenburg.. இந்த நிறுவனம் யாருடையது தெரியுமா..?
- News
அபிராமி.. அபிராமி.. கடைசியில் தெரிந்த உண்மை.. காட்டிக்கொடுத்த வீடியோ.. இப்ப அந்த நாத்தனாரை காணோமாமே
- Movies
பிறந்தநாள் அன்று தற்கொலை செய்துகொண்ட துணிவு பட நடிகர்!
- Sports
19வது ஓவர் வரை கெத்து காட்டிய இந்தியா.. கடைசி 6 பந்தில் 27 ரன்கள்.. ஏமனாக மாறிய ஆர்ஸ்தீப் சிங்
- Lifestyle
உங்களுக்கு நரை முடி மற்றும் வறண்ட முடி இருக்கா? அப்ப இந்த டிப்ஸ்கள ஃபாலோ பண்ணுங்க...!
- Technology
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
கன்டெய்னர்ல வசவசனு நம்பர்கள பாத்திருக்கீங்களே அத ஏன் எழுதியிருக்காங்கனு இதுவர யோசிச்சிருக்கீங்களா?..
கன்டெய்னரில் வசவசனு கொடுக்கப்பட்டிருக்கும் எழுத்து மற்றும் எண்களுக்கு பின்னால் இருக்கும் அர்த்தங்களை விளக்கும் வகையில் இந்த பதிவை வெளியிட்டுள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

பிரமாண்டமான உருவம் கொண்ட பெட்டிகளையே நாம் ஆங்கில வார்த்தையில் கன்டெய்னர்கள் என அழைக்கின்றோம். கப்பல் துறையில் மிகப் பெரிய பங்கினை இந்த கொள்கலன்கள் ஆற்றி வருகின்றன. இவற்றின் வாயிலாகவே நாடு விட்டு நாடு சரக்குகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இத்தகைய பெட்டிகள் அதன் உருவத்தில் மட்டும் நம்மை ஆச்சரியப்படுத்தவில்லை, இன்னும் பல விஷயங்களில் நம்மை ஆச்சரியப்படுத்தும் வகையில் இருக்கின்றன.

அப்படி எந்தெந்த விஷயத்தில் அவை நம்மை ஆச்சரியப்படுத்தும் வகையில் இருக்கின்றன என்பது பற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். குறிப்பாக, அவை எவ்வாறு அடையாளம் காணப்படுகின்றன, கண்கானிக்கப்படுகின்றன மற்றும் கணக்கிடப்படுகின்றன என்பது பற்றிய விபரங்கள் நம்மை ஆச்சரியத்தின் உச்சத்திற்கே எடுத்துச் செல்கின்றன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

சரக்குகளை இடமாற்றம் செய்ய பயன்படுத்தப்படும் கன்டெய்னர்கள் ஒவ்வொன்றிற்கும் தனித்துவமான அடையாள எண்கள் வழங்கப்பட்டிருக்கும். இவற்றை வைத்தே அவை அடையாளம் காணப்படுகின்றன. குறிப்பாக, அந்த கன்டெய்னர் எந்த நாட்டுடையது, எந்த நிறுவனத்திற்கு சொந்தமானது, எங்கு செல்கின்றது. போன்ற அனைத்து முக்கிய தகவல்களும் இந்த அடையாள எண்கள் வாயிலாகவே கண்டறியப்படுகின்றன.

ஆனால், அந்த எண்களை விபரம் தெரியாதவர்களால் அடையாளம் முடியாது. ஆனால், அது அவ்வளவு கடினமான ஒன்று இல்லை. இதை விளக்கவே இப்பதிவை வெளியிட்டுள்ளோம். அதவாது, கன்டெய்னர்களில் வசவசவென இடம் பெற்றிருக்கும் எண்களுக்கு பின்னால் இருக்கும் மர்மங்களை ஒடைக்கும் தகவலையும் இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

கன்டெய்னர்களுக்கான தனித்துவமான எண்களை ஐஎஸ்ஓ (International Standards Organization) அமைப்பானது பிஐசி (Bureau International des Containers) இன் வாயிலாக வழங்கிக் கொண்டிருக்கின்றது. ஏற்கனவே கூறியதைப் போல் ஒவ்வொரு கன்டெய்னருக்கும் ஓர் தனித்துவமான எண் வழங்கப்படுகின்றது.

ஐஎஸ்ஓ 6346:1995 E-இன் கீழே கன்டெய்னர்களுக்கான சீரியல் எண்கள் ஒதுக்கப்படுகின்றன. அந்த எண்கள் 4 எழுத்துக்களையும், 7 எண்களையும் கொண்டிருக்கும். இவையே அந்த கன்டெய்னரை தனித்துவமானதாக மாற்றுகின்றது.
உதாரணமாக, MSCU5285725, HLXU2008419, TLLU5146210
இந்த மாதிரியான எண்களே கன்டெய்னர்களில் வழங்கப்படுகின்றன.

ஐஎஸ்ஓ மற்றும் பிஐசி:
கன்டெய்னர்களுக்கான அடையாள எண்ணை வழங்கும் ஐஎஸ்ஓ அரசு சாரா அமைப்பாகும். சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவை மையமாகக் கொண்டு இந்த அமைப்பு இயங்கிக் கொண்டிருக்கின்றது. இதுவே சர்வதேச அளவிலான தரத்தை நிர்ணயித்து வருகின்றது. இது ஒரு புறம் இருக்க மற்றொரு பக்கமே இந்த கன்டெய்னர்களுக்கான பதிவுகளை அது மேற்கொண்டு வருகின்றது. இந்த பணிக்காக தனியாக உருவாக்கப்பட்ட கிளை அமைப்பே பிஐசி ஆகும்.

இது லாபம் நோக்கமற்ற அமைப்பு என்பது குறிப்பிடத்தகுந்தது. கன்டெய்னர்கள் சார்ந்த அனைத்து பணிகளையும் இதுவே மேற்கொள்கின்றது. கன்டெய்னர்களுக்கான பாதுகாப்பை வழங்குதல் மற்றும் அவற்றிற்கான பாதுகாப்பு விதிகளை உருவாக்குதல் உள்ளிட்டவற்றையும் அதுவே மேற்கொள்கின்றது. ஏன் கன்டெய்னர்களை உருவாக்கும் நிறுவனங்களுக்கு அவற்றை உருவாக்குவதற்கான வழிகாட்டுதல்களையும் இதுவே வழங்குகின்றது.

கன்டெய்னரை அடையாளம் காண ஏதுவாக இருக்க வேண்டும் என்பதற்காக அதன் அடையா எண் மேல் வலது பக்கத்தில் இடம் பெற்றிருக்கும். எம்எச்இ ஆபரேட்டர்கள் எளிதில் அடையாளம் காண வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு அந்த எம்கள் மேல் வலது கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதுமட்டுமின்றி, கன்டெய்னரின் பிற பகுதிகளிலும் இது இடம் பெற்றிருக்க வாய்ப்புகள் உள்ளன.

சிஎஸ்சி பிளேட் மற்றும் ஒருங்கிணைந்த தரவு தட்டு
ஒவ்வொரு கன்டெய்னரிலும் சிஎஸ்சி (Convention for Safe Containers) பிளேட் இடம் பெற்றிருக்கும். இது இருக்க வேண்டும் என்பது கட்டாயம் ஆகும். மிக சிறிய அளவில் கன்டெய்னரின் கதவில் ஒட்டப்பட்டிருக்கும் உலோக தகடே சிஎஸ்சி பிளேட் என அழைக்கப்படுகின்றது. இந்த பிளேட் அவ்வளவு எளிதில் தேய்மானம் ஆகாது. அதேவேலையில் நெருப்பினால் சுட்டாலும் அது பாதிப்பைச் சந்திக்காது. கன்டெய்னரின் உருவாக்கம் பற்றிய அனைத்து விபரங்களும் இந்த தகட்டிலேயே இடம் பெற்றிருக்கும்.

குறிப்பாக, கன்டெய்னரின் கெபாசிட்டி மற்றும் அது எந்தளவு பயனுள்ளது என்பது பற்றிய விளக்கங்களே அந்த பிளேட்டில் இடம் பெற்றிருக்கும். இதுதவிர,
- அங்கீகாரம் பெற்ற நாடு
- ஒப்புதல் சான்றிதழ் எண்
- உற்பத்தியாளரின் பெயர் மற்றும் முகவரி
- கன்டெய்னர் மாடல்
- கன்டெய்னர் எண்
- உற்பத்தி செய்யப்பட்ட தேதி
- அதிகபட்ச மொத்த எடை
- ரேக்கிங் சோதனை விவரங்கள்
- கன்டெய்னருக்குள் இருக்கும் பூச்சிகளை விரட்ட மேற்கொள்ளப்பட்டிருக்கும் வேலை பற்றிய விபரங்கள்.
- அவ்வப்போது கன்டெய்னரில் மேற்கொள்ளப்படும் சோதனை திட்டம் பற்றிய எண், உள்ளிட்ட தகவல்களே அதில் இடம் பெற்றிருக்கும்.

ஒரு கன்டெய்னரை உருவாக்கும்போது பிஐசி பின்பற்றும் வழிமுறை என்ன?
ஏற்கனவே கூறியதைப் போல் ஓர் கன்டெய்னரில் 4 எழுத்துக்களும், 7 எண்களும் இடம் பெற்றிருக்கும். இதில், முதல் மூன்று எழுத்துக்கள் கன்டெய்னரின் உரிமையாளரை அடையாளம் காட்ட உதவும். நான்காவது எழுத்து உபகரணங்களை அடையாளம் காட்ட உதவியாக இருக்கும். இதற்கு அடுத்தபடியாக இருக்கும் எண்களில் முதல் ஆறு எண்கள் கன்டெய்னர் தயாரிப்பாளரால் வழங்கப்பட்ட சீரியல் எண் ஆகும். இது தனித்துவமானது. கன்டெய்னர்களை சரிபார்ப்பதற்கு இவை உதவும்.

எல்லாம் ஓகே உபகரண அடையாம் காட்டினு நான்காவது இலக்க எழுத்தை சொன்னீங்களே அத பற்றி கொஞ்சம் புரியுற மாதிரி சொல்றீங்களா:
நான்காவதாக எழுதப்படும் எழுத்துக்கள் யு (U) அல்லது ஜே (J) அல்லது இசட் (Z) இவற்றில் ஏதேனும் ஒன்றே இடம்பெறும்.
இதில், இதில் யு என்பது அனைத்து சரக்குகளுக்குமான கன்டெய்னர் என்பதை குறிக்கும் எழுத்தாகும். ஜே என்பது பிரித்து எடுக்கக் கூடிய ரக கன்டெய்னர் என்பதை குறிக்கின்றது. கடைசியாக இசட் என்பது டிரெய்லர்கள் அல்லது சேஸ் என்பது குறிக்கின்றது. இவற்றிற்கு முன் இடம் பெறும் உரிமையாளர் கோடை பிஐசி-யே அங்கீகரிக்கின்றது. இது அங்கீகரித்த பின்னரே கன்டெய்னர் கப்பல் துறையில் பயன்பாட்டிற்கு வரும்.

கதவின் அடியில் நான்கு எழுத்துக்கள் அல்லது எண்களைக் கொண்டிருக்கும் அதன் விபரங்கள் என்ன?
இந்த நான்கு எழுத்துக்களில் முதல் எழுத்து கன்டெய்னரின் நீளத்தைக் குறிக்கும், இரண்டாவது அதன் உயரத்தை குறிக்கும், கடைசி இரண்டு எழுத்துக்கள் கன்டெய்னரின் வகையை குறிக்கும். அதாவது, கடைசி இரண்டு இலக்கமாக ஜி1 இருக்கின்றது என்றால் அந்த கன்டெய்னர் பொது பயன்பாட்டிற்கு என அர்த்தம், இதுவே அந்த இடத்தில் ஆர்1 இடம் பெற்றிருந்தால் குளிர்சாதன வசதிக் கொண்ட கன்டெய்னர் என்பது பொருள் ஆகும். இதேபோல், யு1 என்பது மேற்கூரை இல்லாதது, பி1 என்பது பிளாட்பாரம் மற்றும் டி1 என்பது டேங்க் ரக கன்டெய்னர் என்பதை குறிக்கின்றன.

இவற்றிற்கு முன்னதாக இருக்கக் கூடிய எண்கள் அல்லது எழுத்துக்கள் அதன் நீளத்தையும், அகலத்தையும் குறிக்கின்றன என கூறியிருந்தோம். அந்தவகையில், முதல் எண் 2 என போடப்பட்டிருந்தால் அது 20 அடி நீளத்தைக் கொண்டது என பொருள் ஆகும். அதுவே, அது 4 என இருந்தால் 40 அடி நீளம் என்றும், எல் போன எழுத்தப்பட்டிருந்தால் 45 அடி நீளம் கொண்டது என்றும், எம் எழுதப்பட்டிருந்தால் 48 அடி நீளம் கொண்டது என்றும் அர்த்தம் ஆகும்.

இதற்கு அடுத்ததாக இரண்டாவது 2 அல்லது 5 என்ற எண்ணே இடம் பெறும். இதில் 2 என்பது 8 அடி நீளம் மற்றும் 6 அங்குலம் கொண்ட கன்டெய்னர் அது என்பதை தெரியப்படுத்துகின்றது. இதற்கு அடுத்தப்படியாக பயன்படுத்தப்படும் ஐந்து என்கிற எண் 9 அடி மற்றும் 6 அங்குலம் கொண்ட கன்டெய்னர் என்பதை குறிக்கின்றது.

இதேபோல், எம்ஜிடபிள்யூ, டிஏஆர்இ, என்இடி மற்றும் சியூ.சிஏபி என்கிற எழுத்துக்களும் கன்டெய்னர்களில் எழுதப்பட்டிருக்கும். இதில்,
எம்ஜிடபிள்யூ : கன்டெய்னரின் அதிகபட்ச எடையை குறிக்கும்.
டிஆர்இ : காலியான நிலையில் கன்டெய்னரின் எடை எவ்வளவு இருக்கும் என்பது விளக்கும்.
நெட் வெயிட் : பேலோடை குறிக்கின்றது.
கார்கோ வால்யூம்: கன்டெய்னரில் கொண்டு செல்லக்கூடிய அதிகபட்ச சரக்கின் அளவு, இவற்றையே அந்த எழுத்துக்கள் குறிக்கின்றன.
-
இந்த காருக்கான புக்கிங்கை கேன்சல் செய்தால் ரூ2லட்சம் பணம்! ஃபோர்டு நிறுவனம் அறிவித்துள்ள செம ஆஃபர்!
-
இவ்ளோ கார்களில் பாதுகாப்பு பிரச்சினையா! மாருதிக்கு அடி மேல் அடி! நம்பி வாங்கிய வாடிக்கையாளர்கள் கலக்கம்!
-
கத்துகிட்ட மொத்த வித்தையையும் இறக்கும் ஹோண்டா! மாருதி கார்களை தட்டி உட்கார வைக்க அதிரடி திட்டம்!