ரூ.8 கோடியில் ரோல்ஸ் ராய்ஸை வாங்கிய அரசியல்வாதி மீது மின் திருட்டு புகார்!! ரூ.35 ஆயிரம் செலுத்தணுமாம்

ரூ.8 கோடி மதிப்பில் ரோல்ஸ் ராய்ஸ் காரை சமீபத்தில் வாங்கி இருந்த மஹாராஷ்டிரா அரசியல்வாதி ஒருவர் தற்போது மின் திருட்டின் காரணமாக தலைப்பு செய்தியாக மாறியுள்ளார். யார் இவர்? எதன் அடிப்படையில் இத்தகைய கோடீஸ்வரர் மீது இந்த குற்றம் சுமத்தப்பட்டுள்ளது? என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு பதில்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ரூ.8 கோடியில் ரோல்ஸ் ராய்ஸை வாங்கிய அரசியல்வாதி மீது மின் திருட்டு புகார்!! ரூ.35 ஆயிரம் செலுத்தணுமாம்

ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் சமீப காலமாக அடிக்கடி செய்திகளில் இடம்பெறுகின்றன என நினைக்கிறேன். ஏனெனில் கடந்த வாரத்தில் ‘பப்ஜி' மதனின் மனைவி ஆடி ஏ6 எல்லாம் சொகுசு கார் இல்லை என்பதுபோல் பேசியிருந்தார்.

ரூ.8 கோடியில் ரோல்ஸ் ராய்ஸை வாங்கிய அரசியல்வாதி மீது மின் திருட்டு புகார்!! ரூ.35 ஆயிரம் செலுத்தணுமாம்

இணையத்தில் வைரலான இந்த விஷயத்தில், ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் தான் இவர்களுக்கு சொகுசு கார்கள் போல என நெட்டிசன்கள் கலாய்க்க துவங்கினர். அதன் பிறகு சில தினங்களுக்கு முன்பு, தனது ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு சொகுசு கார் வரி விலக்கு கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

ரூ.8 கோடியில் ரோல்ஸ் ராய்ஸை வாங்கிய அரசியல்வாதி மீது மின் திருட்டு புகார்!! ரூ.35 ஆயிரம் செலுத்தணுமாம்

இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்போது இந்த மஹாராஷ்டிரா அரசியல்வாதி மீதான மின் திருட்டு புகார். மாநிலத்தை ஆளும் சிவசேனா கட்சியை சேர்ந்தவர் சஞ்சய் கெய்க்வாட். சமீபத்தில் உலகின் விலையுயரந்த ரோல்ஸ் ராய்ஸ் கார்களுள் ஒன்றை வாங்கி இருந்ததன் மூலம் மஹாராஷ்டிராவில் பிரபலமானார்.

ரூ.8 கோடியில் ரோல்ஸ் ராய்ஸை வாங்கிய அரசியல்வாதி மீது மின் திருட்டு புகார்!! ரூ.35 ஆயிரம் செலுத்தணுமாம்

இவர் மீது தற்போது மஹாராஷ்டிரா மாநில மின்சார விநியோக நிறுவனம் (MSEDCL) மின் திருட்டு தொடர்பான புகார் ஒன்றை போலீஸ் நிலையத்தில் பதிவு செய்துள்ளது. இதில் கெய்க்வாட் ரூ.34,640 மதிப்பிலான மின்சார கட்டண நிலுவை தொகையை செலுத்தவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.8 கோடியில் ரோல்ஸ் ராய்ஸை வாங்கிய அரசியல்வாதி மீது மின் திருட்டு புகார்!! ரூ.35 ஆயிரம் செலுத்தணுமாம்

அத்துடன் ரூ.15,000 அபராதத்தையும் அவர் மீது மின்சார விநியோக நிறுவனம் விதித்துள்ளது. இந்த நிறுவனத்தில் இருந்து குழு ஒன்று சஞ்சய் கெய்க்வாட்டிற்கு சொந்தமான இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த குழு ஆராய்ந்ததில், அங்கு அதிகாரப்பூர்வ மின்சார அளவீட்டு கருவிகள் இல்லாததையும், இதன் மூலம் அவர்கள் மின் திருட்டில் ஈடுப்பட்டு வந்ததையும் கண்டுப்பிடித்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

ரூ.8 கோடியில் ரோல்ஸ் ராய்ஸை வாங்கிய அரசியல்வாதி மீது மின் திருட்டு புகார்!! ரூ.35 ஆயிரம் செலுத்தணுமாம்

மற்றப்படி சஞ்சய் கெய்க்வாட்டின் ரோல்ஸ் ராய்ஸ் கார் குறித்த எந்த விபரமும் இல்லை. ஆனால் இந்த வருட துவக்கத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தலைமுறை ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் கார் இது கிடையாது என்று மட்டும் கூறப்படுகிறது.

சஞ்சய் கெய்க்வாட்டிடம் ரோல்ஸ் ராய்ஸ் கார் மட்டுமின்றி, டொயோட்டா ஃபார்ச்சூனர், டொயோட்டா இன்னோவா போன்ற மற்ற பிரபலமான கார்களும் உள்ளதாம். ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தை பொறுத்தவரையில், இந்த நிறுவனம் உலகிலேயே விலைமிக்க அதன் போட் டெயில் காரை (ரூ.202.8 கோடி) உலகளவில் விற்பனைக்கு கொண்டுவர தயாராகி வருகிறது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Shiv Sena politician owns Rolls Royce Fails to pay Rs. 35,000 electricity bill.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X