ரொம்ப ரொம்ப பழைய யெஸ்டி பைக்கிற்கு புத்துயிர் வழங்கிய துணை முதலமைச்சர்.. இது என்ன மாடல்னு தெரியுதா?

இரண்டு சக்கர வாகனத்தை நேசிக்காதவர்களே இந்த உலகத்தில் இருக்க முடியாது என கூறலாம். அந்த அளவிற்கே பலரின் மனம் கவர்ந்த வாகனமாக டூ-வீலர்கள் இருக்கின்றன. இதற்கு சான்றாக அமையும் விதமான ஓர் நிகழ்வு தற்போது அரங்கேறியிருக்கின்றது. ஓர் மாநிலத்தின் துணை முதலமைச்சர், தன்னுடைய கல்லூரி நாட்களில் ஓட்டி வந்த பைக்கிற்கு புத்துயிரை வழங்கிய சம்பவமே அது ஆகும். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் மிகவும் பழைய மோட்டார்சைக்கிளை, ஷோரூமில் இருந்து ஃப்ரஷ்ஷாக இறக்கியதைபோல அவர் மாற்றியிருக்கின்றார்.

மேலும், இந்த பைக்கின் படங்களையும் அவர் சமூக வலைதள பக்கங்களிலும் பகிர்ந்திருக்கின்றார். கர்நாடக மாநிலத்தின் துணை முதல்வர் டிகே சிவகுமார், இவரே பழைய பைக்கிற்கு புத்துயிரை வழங்கியவர் ஆவார். அவர் தன்னுடைய கல்லூரி நாட்களில் யெஸ்டி ரோட்கிங் (Yezdi Roadking) மாடல் பைக்கை பயன்படுத்தி வந்திருக்கின்றார்.

Karnataka deputy cm dk shivakumar s yezdi roadking restored

இதுவே அவரின் முதல் பைக் மாடல் ஆகும். இத்தகைய பைக்கையே அவர் பல வருடங்களாக பயன்படுத்தாமல் அப்படியே விட்டிருக்கின்றார். ஆண்டுகள் பல பயன்பாடு இல்லாமல் அப்பைக் அப்படியே கைவிடப்பட்டு இருக்கின்றது. ஆகையால், தூசி படிந்து அது காணப்பட்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே டிகே சிவகுமார் பைக்கை ஓர் கை தேர்ந்த நபரிடத்தில் வழங்கி தற்போது புதிதுபோல் மீட்டெடுத்திருக்கின்றார்.

இந்த பைக்கின் முந்தைய நிலை மற்றும் இப்போதைய நிலையைக் காட்டக் கூடிய படங்களையே அவர் பகிர்ந்திருக்கின்றார். இந்தியாவில் இப்போதும் பலரின் பிரியமான பைக் மாடலாக யெஸ்டி ரோட்கிங் இருக்கின்றது. இப்போதும் இதற்கு டிமாண்ட் அதிகம். இதனால்தான் பல ஆண்டுகளாக சந்தையைவிட்டு வெளியேறி இருந்த இந்த நிறுவனம், கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மீண்டும் இந்தியாவில் கால்தடம் பதித்தது.

இப்போது முன்னணி பிராண்டுகளுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு கணிசமான வளர்ச்சி பாதையை நோக்கி அது பயணித்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே இந்த பழைய பைக் மாடலுக்கு உயிர்ப்பளித்து தானும் ஓர் யெஸ்டி பைக் காதலர் என்பதை கர்நாடகா மாநிலத்தின் துணை முதலமைச்சர் டிகே சிவகுமார் உறுதிப்படுத்தியிருக்கின்றார்.

யெஸ்டி ரோட் கிங் பற்றிய விபரம்: இந்தியாவின் மோட்டார் சைக்கிள் வாகன வரலாற்றில் யெஸ்டி ரோட் கிங் ஒரு சிறப்புமிக்க இடத்தைப் பிடித்துள்ளது. 1970 களில் பிரபலமான மோட்டார்சைக்கிளாக வலம் வந்த டூ-வீலர்களில் இதுவும் ஒன்றாகும். எளிய உருவம், அதேவேளையில் சிறந்த திறனை வெளிப்படுத்தும் வசதிக்காக இது அறியப்படுகின்றது.

Shivakumar s yezdi roadking restored

அதேவேளையில் மிகுந்த கவர்ச்சியான பைக் மாடாலகவும் இது காட்சியளிக்கின்றது. இந்த பைக்கை அலங்கரிக்கும் விதமாக கண்ணீர் துளி வடிவிலான ஃப்யூவல் டேங்க், முட்டிக்கான பேட் உடன் வழங்கப்பட்டு இருக்கும். தொடர்ந்து, தட்டையான இருக்கை, குரோம் பூச்சுக் கொண்ட அணிகலனால் அலங்கரிக்கப்பட்ட எக்சாஸ்ட் பைப் ஆகியவற்றையே இது தாங்கியிருந்தது.

எஞ்சினைப் பொருத்த வரை யெஸ்டி ரோட்கிங் மாடலில் 250 சிசி சிங்கிள் சிலிண்டர், 2 ஸ்ட்ரோக் எஞ்சினே பயன்படுத்தப்பட்டது. அது அதிகபட்சமாக 18 பிஎச்பி பவரையும், 24 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். இது ஓர் ஏர் கூல்டு எஞ்சின் ஆகும். பைக்கின் இரண்டு பக்கமும் எக்சாஸ்ட் குழாய் இருக்கும்.

இதுவே அப்பைக்கின் அதிக கவர்ச்சியான லுக்கிற்கு காரணமாக உள்ளது. இதுபோன்று இன்னும் பல தனித்துவமான வசதிகளைத் தாங்கிய பைக்காகவே யெஸ்டி ரோட்கிங் மோட்டார்சைக்கிள் காட்சியளிக்கின்றது. இத்தகைய ஓர் தரமான மோட்டார்சைக்கிளையே புத்தம் புதியது போல கர்நாடகா மாநிலத்தின் துணை முதலமைச்சர் மாற்றியிருக்கின்றார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தன்னுடைய முதல் காதலை போல இந்த பைக்கை டிகே சிவகுமார் பார்ப்பது, அவரின் இந்த புதுப்பித்தல் செயலின் வாயிலாக தெரிய வந்திருக்கின்றது. தொடர்ந்து, இந்த பைக்கை புதுப்பித்து மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்திருப்பதால் அவர் ஓர் விண்டேஜ் டூ-வீலர் நேசிப்பாளர் என்பதும் தெரிய வந்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, September 6, 2024, 5:00 [IST]
English summary
Shivakumar s yezdi roadking beautifully restored
மேலும்... #celebrity bike #celebrity bikes
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+