சாதாரண ரயிலே காத்து வாங்குது; இதுல புல்லட் ரயில் என்னவாக போகுதோ? ... புது பீதி!

சாதாரண ரயிலே காத்து வாங்குது; இதுல புல்லட் ரயில்ல என்னவாக போகுதோ? ... புது பீதி!

By Saravana Rajan

நாட்டின் முதலாவது புல்லட் ரயில் திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் மும்பை- ஆமதாபாத் இடையிலான வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்கள் கடும் நஷ்டத்தை ஏற்படுத்தி வருவது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக தெரிய வந்துள்ளது.

புல்லட் ரயில் திட்டம் வெற்றி பெறுமா? அதிர்ச்சிகர தகவல்!

நாட்டின் முதல் புல்லட் ரயில் மும்பை- ஆமதாபாத் இடையே இயக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. மணிக்கு 320 கிமீ வேகத்தில் ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருப்பதால், ரயில் மற்றும் விமானப் பயணிகள் மத்தியில் புல்லட் ரயில் பெரும் ஆவலைத் தூண்டி இருக்கிறது.

புல்லட் ரயில் திட்டம் வெற்றி பெறுமா? அதிர்ச்சிகர தகவல்!

இந்த திட்டத்திற்கு கடந்த செப்டம்பர் மாதம் பிரதமர் மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே அடிக்கல் நாட்டினர்.

புல்லட் ரயில் திட்டம் வெற்றி பெறுமா? அதிர்ச்சிகர தகவல்!

இதையடுத்து, இந்த திட்டத்திற்கான பணிகள் முறைப்படி துவங்கப்பட்டுள்ளனபுல்லட் ரயில் திட்டம் எந்தளவு ஆவலையும், ஆதரவையும் பெற்றிருக்கிறதோ, அதைத் தாண்டி, அதுகுறித்து கடுமையான எதிர் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன.

Recommended Video

[Tamil] Datsun rediGO Gold 1.0-Litre Launched In India - DriveSpark
புல்லட் ரயில் திட்டம் வெற்றி பெறுமா? அதிர்ச்சிகர தகவல்!

பொருளாதார ரீதியில் இந்தியாவிற்கு புல்லட் ரயில் திட்டம் இப்போதைக்கு நம் நாட்டுக்கு ஒத்துவராது என்ற கருத்துக்களும் சொல்லப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், புல்லட் ரயில் திட்டத்தை தேர்வு செய்த தடம் பொருளாதார ரீதியில் வெற்றிகரமானதாக இருக்காது என்ற அதிர்ச்சிகரமான கணிப்பு குறித்து தகவல் வெளி வந்துள்ளது.

புல்லட் ரயில் திட்டம் வெற்றி பெறுமா? அதிர்ச்சிகர தகவல்!

கடந்த ஜூலை- செப்டம்பர் இடையிலான காலாண்டில் மும்பை- ஆமதாபாத் இடையே இயக்கப்படும் ரயில்களில் 40 சதவீத இடங்களுக்கு முன்பதிவு செய்யப்பட வில்லையாம். இதில், மற்றொரு அதிர்ச்சி, சாதாரண படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் ஓரளவு முன்பதிவு செய்யப்படுகிறதாம்.

Trending On DriveSpark Tamil:

புல்லட் ரயில் திட்டம் வெற்றி பெறுமா? அதிர்ச்சிகர தகவல்!

ஏசி பெட்டிகள் பெரும்பாலும் காலியாகவே செல்கிறதாம். அதிக முன்பதிவு இல்லாததால், கடந்த காலாண்டு காலத்தில் இந்த தடத்தில் ரூ.30 கோடி வரை ரயில்வே துறைக்கு நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறதாம். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

புல்லட் ரயில் திட்டம் வெற்றி பெறுமா? அதிர்ச்சிகர தகவல்!

உயர்வகுப்பு பெட்டிகளில் அதிக முன்பதிவு இல்லாததால், அதிக நஷ்டம் ஏற்படுவதாக கூறப்படும் நிலையில், இந்த தடத்தில் புல்லட் ரயில் இயக்கினால், அது பொருளாதார ரீதியில் வெற்றிபெறுமா என்ற கேள்விகளும், சந்தேகங்களும் எழுந்துள்ளன.

புல்லட் ரயில் திட்டம் வெற்றி பெறுமா? அதிர்ச்சிகர தகவல்!

எனினும், புல்லட் ரயில் மிக விரைவான, பாதுகாப்பான பயணத்தை அளிப்பதால், விமானத்தில் செல்லும் பயணிகளை ஈர்க்கலாம். விமான பயண கட்டணத்தை விட குறைவாக நிர்ணயித்தால் மட்டுமே, விமான பயணிகளை ஈர்க்க முடியும்.

புல்லட் ரயில் திட்டம் வெற்றி பெறுமா? அதிர்ச்சிகர தகவல்!

புல்லட் ரயில் திட்டத்திற்கான தடங்கள் மிக நீண்ட ஆய்வுகளுக்கு பின்னரே, தேர்வு செய்யப்படும். இந்த நிலையில், இந்த தடத்தில் சாதாரண ரயில்களே காத்து வாங்கும் நிலையில் அதிர்ச்சி தருகிறது. இல்லையனில், ரூ.1.10 லட்சம் கோடி முதலீட்டில் செயல்படுத்தப்படும் புல்லட் ரயில் தோல்வியில் முடிய வாய்ப்புகள் உள்ளன.

புல்லட் ரயில் திட்டம் வெற்றி பெறுமா? அதிர்ச்சிகர தகவல்!

அதேநேரத்தில், பொருளாதார ரீதியில் வர்த்தக வளம் வாய்ந்த தடங்களை தேர்வு செய்து புல்லட் ரயிலை இயக்கலாம் அல்லது அந்த தடங்களில் ரயில்களின் வேகத்தை அதிகப்படுத்துவதற்கான முயற்சிகளை ரயில்வே துறை மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்துக்களும் எழுந்துள்ளன.

Trending On DriveSpark Tamil:

More from DriveSpark

Article Published On: Thursday, November 2, 2017, 12:40 [IST]
English summary
Shocking Information Reveals About India's First Bullet Train Project?
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+