கார், பைக்குனு வாங்கி காச வீணாக்காதீங்க.. ஷூ மாதிரியான வண்டி விற்பனைக்கு தயார்.. கால்ல இருப்பதே தெரியாது!!

வண்டில போககூடாது, ஆனா வேகமாக போகணும்னு நினைப்பவர்களுக்கு ஏற்ற காலணியை ஓர் நிறுவனம் தயார் செய்திருக்கின்றது. அது என்ன காலணி? அதன் சிறப்புகள் என்ன? என்பது பற்றிய தகவலைக் காணலாம், வாங்க.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாகவே எலெக்ட்ரிக் வாகனங்கள் (Electric Vehicles) விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டன என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இந்த நிலையில், வாகனங்களுக்கு மாற்றாக ஓர் வாகனம், இல்லை.. இல்லை... ஓர் காலணியை முன்னணி நிறுவனம் ஒன்று தயார் செய்திருக்கின்றது.

Shift robotics moonwalkers ev

இந்த காலணி உங்களின் எனெர்ஜியை செலவழிக்காமல் உங்களை இடம்பெயர செய்ய உதவும். நம்மில் பலர் ஸ்கேட்டிங் காலணியை (Skating Shoes) பயன்படுத்தி இருப்பீர்கள் என நம்புகின்றோம். இதை கால்களால் உதைக்க உதைக்கவே நம்மால் முன்னேறி செல்ல முடியும். இதற்கு பெருமளவில் சக்தி தேவைப்படும்.

ஆனால், நாம் பார்க்க இருக்கும் இந்த காலணியை நகர செய்ய நாம் எதையும் செய்ய வேண்டியதில்லை. சார்ஜ் செய்தால் மட்டுமே போதும். அது இயங்க தயாராகிவிடும். ஆமாங்க, இந்த காலணியை மின்சாரத்தில் இயங்கும் வகையிலேயே அதனை தயாரித்த நிறுவனம் வடிவமைத்து இருக்கின்றது.

Moonwalkers ev

இதன் வருகை, வாகன பயன்பாடு மற்றும் விற்பனையில் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த வாகனத்தை (காலணியை)ப் பயன்படுத்த, சாலை நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே போதுமானது. இதைத் தாண்டி மற்ற வசதிகள் எதுவும் நமக்கு தேவைப்படாது.

குறிப்பாக, லைசென்ஸ் தேவைப்படாது. மேலும், ஆர்சி புத்தகமும் அவசியமற்றது. இத்தகைய சிறப்பான ஓர் காலணியையே அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் ஓர் ஸ்டார்ட்-அப் நிறுவனம் இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தி இருக்கின்றது. இந்த காலணி வகை வாகனத்திற்கு தயாரிப்பு நிறுவனம் மூன் வால்கர்ஸ் (Moonwalkers) எனும் பெயரைச் சூட்டி இருக்கின்றது.

Girl walking with moonwalkers

ஷிஃப்ட் ரோபோட்டிக்ஸ் (Shift Robotics ) எனும் நிறுவனமே இதனை தயார் செய்த நிறுவனம் ஆகும். இந்த எலெக்ட்ரிக் ஷூவில் குட்டி மின்சார மோட்டார் மற்றும் குட்டி பேட்டரி பேக் ஆகியவற்றை அந்த நிறுவனம் பொருத்தி இருக்கின்றது. இந்த பேட்டரி பேக்கைக் கொண்டு 11 கிமீ தூரம் வரை நம்மால் டிராவல் செய்ய முடியும்.

ஆமாங்க, ஃபுல்லா சார்ஜ் பண்ணினா இத்தனை கிமீ தூரத்தை மிக சுலபமாக நம்மால் கடக்க முடியும். இதன் மின்சார மோட்டார் ஏஐ (ஆட்டோ இன்டலிஜென்ஸ்) வசதிக் கொண்டது என கூறப்படுகின்றது. இதுவே நம்முடைய தேவையை பூர்த்தி செய்யும் வகையில் காலணி வகை வாகனத்தை திறம்பட இயங்க செய்ய உதவியாக இருக்கின்றது.

மேலும், இந்த அம்சம் அதன் பயன்பாட்டை மிகவும் எளிமையானதாகவும் மாற்றி இருக்கின்றது. உதாரணமாக, ஓர் காரை முதல் முறையாக இயக்க போகின்றோம் என்றால் அந்த வாகனத்தை பற்றி அறிந்துக் கொள்ள சிறிய பயிற்சி தேவைப்படும். இதுபோன்ற எந்த தேவையும் இந்த காலணி வாகனத்தைப் பயன்படுத்தத் தேவைப்படாது என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.

இதுபோன்ற பல விஷயங்களில் சிறப்பானதாகக் காட்சியளிக்கும் இந்த ஷூக்கள், சில பின்னடைவுகளையும் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு காலணியின் எடையும் சுமார் 2 கிலோ என கூறப்படுகின்றது. மேலும், இதன் விலை 1,399 அமெரிக்க டாலர்களுக்கும் அதிகம் என கூறப்படுகின்றது. இந்திய ரூபாய் மதிப்பில் அதன் விலை ரூ. 1.16 லட்சம் ஆகும்.

இத்தகைய மிக உயரிய விலையிலேயே காலணிகள் விற்பனைக்கு வர இருக்கின்றன. முதலில் அமெரிக்காவிலேயே மூன் வால்கர்ஸ் நகரும் காலணியை ஷிஃப்ட் ரோபோட்டிக்ஸ் விற்பனைக்கு வழங்க இருப்பதாகக் கூறப்படுகின்றது. இதைத்தொடர்ந்து, உலக நாடுகள் சிலவற்றிலும் அதை நிறுவனம் விற்பனைக்கு வழங்கும் என கூறப்படுகின்றது.

ஆனால், எந்தெந்த நாட்டில் அது விற்பனைக்கு வரும் என்கிற தெளிவான தகவல்கள் வெளியிடப்படவில்லை. தொடர்ந்து, இதன் இந்திய வருகைக்கு துளியளவும் சாத்தியம் இல்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இதை பன்படுத்துவதற்கு ஏற்ற நில பரப்பும் இந்தியாவில் இல்லை. இதேபோல், சாலை அமைப்பும் நாட்டில் மிகவும் குறைவாகவே உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: காலணில வாகனமா!.. இப்படியே பலரை ஆச்சரியமடையச் செய்திருக்கின்றது. இந்த மூன் வால்கர்ஸ் ஷூ வகை வாகனம். உலகம் எங்கேயோப் போய்க் கொண்டிருக்கின்றது என்பதற்கு சான்றாகவும் இதன் வருகை அமைந்திருக்கின்றது. அதிலும், எதிர்காலத்தில் வாகனத்தின் தேவையைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்பது மூன் வால்கர்ஸ் உருவாக்கத்தின் வாயிலாக நமக்கு தெரிய வந்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, October 27, 2023, 20:37 [IST]
English summary
Shoe type ev shift robotics moonwalkers details revealed
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X