எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பேட்டரி தட்டுப்பாடு வரப்போகிறதா? உருவாகிறது புதிய தலைவலி

லித்தியம் அயான் பேட்டரி விலை அதிகரித்ததற்கு லித்தியம் தட்டுப்பாடு தான் காரணம் எனக் கூறப்படும் நிலையில் எதிர்காலத்தில் இது எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பை மந்தப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பேட்டரி தட்டுப்பாடு வரப்போகிறதா? உருவாகிறது புதிய தலைவலி

இன்று மக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மவுசு அதிகரித்துள்ளது. பலர் இன்று வாகனம் வாங்கும் போது எலெக்ட்ரிக் வாகனத்தையும் ஒரு ஆப்ஷனாக பார்க்க துவங்கிவிட்டனர். சமீபகாலமாக பெட்ரோல், டீசல் விலையும் அதிகரித்து வருவதால் மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் இந்தியாவில் படிப்படியாக எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை அதிகரிக்கத் துவங்கிவிட்டது.

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பேட்டரி தட்டுப்பாடு வரப்போகிறதா? உருவாகிறது புதிய தலைவலி

இந்நிலையில் எலெக்டரிக் வாகனங்களுக்கு முக்கியமான பாகம் பேட்டரி, லித்தியம் என்ற மூலப்பொருளைக் கொண்டு இந்த பேட்டரிகள் தயாராகிறது. இந்த பேட்டரிகளுக்கு லித்தியம் அயான் பேட்டரி என மார்கெட்டில் அழைக்கப்படுகிறது. இந்த வகை பேட்டரிகள் தான் வாகனம் ஓடுவதற்குத் தேவையான அளவு மின் சக்தியை அளிக்கும் திறன் கொண்டது.

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பேட்டரி தட்டுப்பாடு வரப்போகிறதா? உருவாகிறது புதிய தலைவலி

இன்று லித்தியம் அயான் பேட்டரி தயாரிப்பில் சீனாதான் முதலிடத்தில் உள்ளது. இன்று எலெக்ட்ரிக் வாகனங்களில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான பேட்டரிகள் சீனாவில் தயாராகி உலகநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. அதே நேரத்தில் இதன் மூலப்பொருளான லித்தியம் ஆஸ்திரேலியாவில் தான் அதிகம் மைன் செய்யப்படுகிறது.

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பேட்டரி தட்டுப்பாடு வரப்போகிறதா? உருவாகிறது புதிய தலைவலி

உலக அளவில் ஆஸ்திரேலியா, அர்ஜெண்டினா, சீலி மற்றும் சீனா ஆகிய 4 நாடுகளில் எடுக்கப்படும் லித்தியம் தான் தற்போது தயாரிக்கப்படும் லித்தியம் அயான் பேட்டரிகளில் 90 சதவீதம் வரை பயன்படுத்தப்படுகிறது. லித்தியம் என்பது ஒன்றும் அரிய வகையான தாதுகள் அல்ல. அது உலகம் முழுவதும் பல இடங்களில் பரவிக் கிடைக்கிறது.

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பேட்டரி தட்டுப்பாடு வரப்போகிறதா? உருவாகிறது புதிய தலைவலி

லித்தியம் என்பது உலகில் அதிகம் கிடைக்கும் தாதுக்களில் 33வது இடத்தில் லித்தியம் உள்ளது. இது மண், பாறைகள், கடல் தண்ணீர், சாதாரண நிலம் எனப் பல இடங்களில் கிடைக்கும். ஆனால் இதைப் பிரித்தெடுக்கும் முறைதான் சற்று கடினம். இதைப் பிரித்தெடுக்க அதிக நேரம் தேவைப்படும் என்பதால் மார்கெட்டின் தேவைக்கு ஏற்ப சப்ளே இல்லை

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பேட்டரி தட்டுப்பாடு வரப்போகிறதா? உருவாகிறது புதிய தலைவலி

தற்போது உலக அளவில் லித்தியம் அயான் பேட்டரிக்கான தேவை அதிகமாகியுள்ளது. அதன் விலையும் தற்போது தாறுமாறாக ஏறியுள்ளது. இதன் சமீபத்தில் விலை ஆரம்ப விலையைவிட 442 சதவீதம் அதிகம் இந்த விலையேற்றத்திற்கு முக்கியமான காரணம் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பார்களிடம் ஏற்பட்ட டிமாண்ட் தான்.

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பேட்டரி தட்டுப்பாடு வரப்போகிறதா? உருவாகிறது புதிய தலைவலி

குறிப்பாக இந்த பேட்டரியில் 40 சதவீதம் இந்த பேட்டரியை தயாரிக்கப்பயன்படுத்தப்படும் மற்ற பொருட்கள் விலை தான் அதிகம் லித்தியத்தின் விலை வெறும் 60 சதவீதம் தான். இந்நிலையில் கடந்தாண்டு லித்தியம் அயான் பேட்டரியின் தயாரிக்கப் பயன்படும் மற்ற பொருட்களின் விலை 80 சதவீதம் வரை அதிகரித்தது. இதனால் லித்தியம் அயான் பேட்டரின் விலையும் உயர்ந்துள்ளது.

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பேட்டரி தட்டுப்பாடு வரப்போகிறதா? உருவாகிறது புதிய தலைவலி

அதன் காரணமாகவே சமீபத்தில் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பார்கள் தங்கள் வாகனத்தின் விலையை சற்று உயர்த்தினர். இந்த பேட்டரியின் விலையேற்றம் தற்போது உலகின் முன்னணி கார் தயாரிப்பாளர்களான டெஸ்லா ரிவியான் ஆகிய நிறுவனங்கள் இதை உணரது வங்கியுள்ளதாகத் தெரிகிறது.

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பேட்டரி தட்டுப்பாடு வரப்போகிறதா? உருவாகிறது புதிய தலைவலி

இந்த பிரச்சனை குறித்து அனைத்து புதிய எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர்களின் கூட்டமைப்பின் தலைவர் ராபர்ட் கூறும் போது அடுத்த 10 ஆண்டுகளில் இந்த உலகிற்கு எவ்வளவு லித்தியம் தேவைப்படுகிறதோ அதில் 10 சதவீதத்தைத் தான் தயாரித்துக்கொண்டிருக்கிறோம் எனக் கூறினார். இது எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பேட்டரி தட்டுப்பாடு வரப்போகிறதா? உருவாகிறது புதிய தலைவலி

தற்போது அதிக டிமாண்ட் காரணமாக, சப்ளை குறைவாக இருப்பதால் மார்கெட்டில் எலெக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிக்கும் லித்தியம் பேட்டரிகளின் விலை அதிகமாகியுள்ளது. இது மத்திய அரசு குறைந்த விலையில் எலெக்ட்ரிக் வாகனங்களைக் கொண்டுவரும் முயற்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது.

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பேட்டரி தட்டுப்பாடு வரப்போகிறதா? உருவாகிறது புதிய தலைவலி

ஆஸ்திரேலியா அரசின் தொழில் துறை அறிவித்துள்ள தரவுகளின்படி நடப்பாண்டில் உலகளவில் லித்தியத்திற்கான தேவை 4.85 லட்சம் டன், இது 2022ல் 6.15 லட்சம் டன்னாகவும், 2023ம் ஆண்டு 8.21 லட்சம் டன்னாகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவிற்கு லித்தியம் எடுக்க முடியுமா என்பது தெரியவில்லை என ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பேட்டரி தட்டுப்பாடு வரப்போகிறதா? உருவாகிறது புதிய தலைவலி

லித்தியம் பேட்டரியின் விலை உயர்வால் தற்போது டெஸ்லா உள்ளிட்ட பல நிறுவனங்கள் தங்கள் கார்களின் விலையை அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் உலகில் பல முன்னணி நாடுகள் வாகன விற்பனையில் பாதியை எலெக்ட்ரிக் வாகனங்களாக இருக்க வேண்டும் எனப் பல முயற்சிகளைச் செய்து வருகின்றனர்.

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பேட்டரி தட்டுப்பாடு வரப்போகிறதா? உருவாகிறது புதிய தலைவலி

இதற்கிடையில் அமெரிக்காவில் வரும் 2035ம் ஆண்டிற்குப் பிறகு கம்பஷன் இன்ஜின் தயாரிப்புக்குத் தடை விதிக்க திட்டம் வகுத்து வருகிறது. அதற்கேற்றார் பால உலகின் கார் தயாரிப்பு கம்பெனிகளான ஃபோக்ஸ்வாகன், ஃபோர்டு, மற்றும் டொயோட்டா போன்ற நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியை அதிகரிக்கத் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றன. இதற்கிடையில் இந்த பேட்டரி தட்டுப்பாடு ஏற்படும் என்ற சூழல் கார் தயாரிப்பு நிறுவனங்களை அச்சப்பட வைத்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 4, 2022, 18:04 [IST]
English summary
Shortage of lithium might slow down EV Production price too hicked
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+