10 தலைமுறைக்கு உக்காந்து சாப்பிட்டாலும் சொத்து அழியாது! ஆனாலும் சாதாரண காரில் வந்து போகும் தேவதை! அவங்களா இது!
திரையுலக நடிகைகள் என்றாலே, மிகவும் விலை உயர்ந்த கார்களில்தான் பயணம் செய்ய வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக உள்ளது. ஆனால் ஒரு சில நடிகைகள் மட்டும் விதிவிலக்காக மிகவும் எளிமையான கார்களில் பயணம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இதற்கு ஷ்ரத்தா கபூர் (Shraddha Kapoor) ஒரு உதாரணம். இவர் மிகவும் பிரபலமான பாலிவுட் நடிகைகளில் ஒருவராக உள்ளார். தற்போதைய நிலையில் இந்தியாவிலேயே அதிகமாக சம்பாதிக்கும் நடிகைகளில் ஒருவராக ஷ்ரத்தா கபூர் திகழ்கிறார். எனவே இவரது சொத்து மதிப்பு (Net Worth) மிகவும் அதிகம்.
நடப்பு 2025ம் ஆண்டு ஜனவரி மாத நிலவரப்படி, ஷ்ரத்தா கபூரின் சொத்து மதிப்பு சுமார் 150 கோடி ரூபாய் என்ற அளவில் இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வளவு சொத்து இருந்தாலும் கூட மிகவும் எளிமையான கார்களில் பயணம் செய்வதைதான் ஷ்ரத்தா கபூர் விரும்புகிறார்.

உண்மையில் ஷ்ரத்தா கபூரின் கார் கலெக்ஸன் (Car Collection) மிகப்பெரியது. லம்போர்கினி ஹூராகேன் டெக்னிகா (Lamborghini Huracan Tecnica), ஆடி க்யூ7 (Audi Q7), மெர்சிடிஸ் பென்ஸ் எம்எல் (Mercedes Benz ML) மற்றும் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் (BMW 7 Series) போன்ற விலை உயர்ந்த கார்களை எல்லாம் ஷ்ரத்தா கபூர் வைத்துள்ளார்.
ஆனால் அவர் அதிகமாக பயணிப்பது என்னவோ, மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift) மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) போன்ற எளிமையான கார்களில்தான்! ஆம், ஷ்ரத்தா கபூர் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனர் போன்ற கார்களில்தான் நிறைய இடங்களுக்கு வந்து செல்கிறார்.

இந்த வரிசையில் டொயோட்டா ஃபார்ச்சூனர் காரில் ஷ்ரத்தா கபூர் ஒரு இடத்தில் வந்து இறங்கியபோது எடுக்கப்பட்ட வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்த வைரல் வீடியோ எங்கு எடுக்கப்பட்டது? என்பது சரியாக தெரியவில்லை. இருப்பினும் ஷ்ரத்தா கபூரின் எளிமைக்கு மற்றொரு சாட்சியாக இந்த வைரல் வீடியோ அமைந்துள்ளது.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டொயோட்டா ஃபார்ச்சூனர் காரின் ஆரம்ப விலை 33.78 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 51.94 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
பொதுவாக பார்த்தால் டொயோட்டா ஃபார்ச்சூனர் சற்று விலை உயர்ந்த கார்தான். ஆனால் சுமார் 150 கோடி ரூபாய் சொத்து மதிப்பு கொண்டுள்ள ஷ்ரத்தா கபூர் போன்ற நடிகை ஒருவருக்கு இதை நிச்சயம் எளிமையான காராகவே கருத முடியும். டொயோட்டா ஃபார்ச்சூனர் ஒரு ஃபுல்-சைஸ் எஸ்யூவி ரக கார் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்த காரை, ஷ்ரத்தா கபூர் மட்டுமல்லாது, இன்னும் பல்வேறு திரையுலக நட்சத்திரங்களும் வைத்துள்ளனர். மிர்ணாள் தாக்கூர் (Mrunal Thakur) மற்றும் ரித்தேஷ் தேஷ்முக் (Ritiesh Deshmukh) போன்ற திரையுலக நட்சத்திரங்களை இதற்கு உதாரணமாக கூற முடியும். அத்துடன் அரசியல்வாதிகள் பலரும் கூட டொயோட்டா ஃபார்ச்சூனர் காரை பயன்படுத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications








