நாலரை கோடி ரூபாய் காரை வாங்கிய அழகு தேவதை! அவங்களா இது! கொஞ்சம் உத்து பாத்ததுக்கு அப்புறம்தான் யார்னு தெரியுது

பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஷ்ரத்தா கபூர் (Shraddha Kapoor). இந்தியா முழுக்க பிரபலமான ஒருவர் என்றாலும் கூட, எளிமையான கார்கள் பலவற்றை ஷ்ரத்தா கபூர் வைத்துள்ளார்.

இதில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift), மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும். இந்த எளிமைக்காகவே ஷ்ரத்தா கபூருக்கு பலர் ரசிகர்களாக இருந்து வருகின்றனர்.

Shraddha Kapoor Buys Lamborghini Huracan Tecnica

ஆனால் மிகவும் விலை (Price) உயர்ந்த கார் ஒன்றை ஷ்ரத்தா கபூர் தற்போது வாங்கியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஷ்ரத்தா கபூர் தற்போது வாங்கியிருப்பது, லம்போர்கினி ஹூராகேன் டெக்னிகா (Lamborghini Huracan Tecnica) ஆகும். இந்த காரின் விலை சுமார் 4.50 கோடி ரூபாய் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கண்ணை கவரும் சிகப்பு நிறத்தில் ஷ்ரத்தா கபூர், லம்போர்கினி ஹூராகேன் டெக்னிகா காரை வாங்கியுள்ளார். நவராத்திரி (Navaratri) கொண்டாட்டங்களை முன்னிட்டு, ஷ்ரத்தா கபூர் இந்த விலை உயர்ந்த காரை வாங்கியுள்ளாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஷ்ரத்தா கபூர் வாங்கியுள்ள லம்போர்கினி ஹூராகேன் டெக்னிகா காரில் சக்தி வாய்ந்த இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

Lamborghini Huracan Tecnica

அது 5.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் வி10 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 640 ஹெச்பி பவரை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 7 ஸ்பீடு ட்யூயல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 3.2 வினாடிகளில் எட்டி விடக்கூடிய திறன் லம்போர்கினி ஹூராகேன் டெக்னிகா காருக்கு உண்டு. அதே நேரத்தில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 200 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை இந்த கார் வெறும் 9.1 வினாடிகளில் எட்டி விடும்.

அதே நேரத்தில் இந்த காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 325 கிலோ மீட்டர்கள் ஆகும். எனவே லம்போர்கினி ஹூராகேன் டெக்னிகா சீறிப்பாய்ந்து செல்லும் என்பதில் துளியும் சந்தேகம் வேண்டாம். இந்தியாவை பொறுத்தவரையில் லம்போர்கினி உருஸ் (Lamborghini Urus) காருக்குதான் அதிக ரசிகர்கள் உள்ளனர்.

கிரிக்கெட் வீரர்கள், திரை உலக நட்சத்திரங்கள் மற்றும் தொழில் அதிபர்கள் பலர் லம்போர்கினி உருஸ் காரை சொந்தமாக வைத்துள்ளனர். ஆனால் லம்போர்கினி ஹூராகேன் டெக்னிகா கார் இந்திய சந்தையில் இன்னும் அந்த அளவிற்கு பிரபலமாகவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி மற்றும் டொயோட்டா என மிகவும் சாதாரணமான கார்களில் வலம் வந்து கொண்டிருந்த ஷ்ரத்தா கபூர், லம்போர்கினி ஹூராகேன் டெக்னிகா போன்ற மிகவும் விலை உயர்ந்த ஒரு சூப்பர் காரை (Super Car) வாங்கியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

Article Published On: Wednesday, October 25, 2023, 12:56 [IST]
English summary
Shraddha kapoor buys lamborghini huracan tecnica worth rs 4 50 crores all details here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+