மீன்பிடி வலை மாதிரி டிரஸ் போட்டுட்டு நடுக்கடலில் காதலனுடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை இவங்களா
பாலிவுட் நடிகையான ஷ்ரதா கபூர் தனது காதலர் ராகுல் மோடியுடன் நடுக்கடலில் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இவர்கள் நடுக்கடலுக்கு சொகுசு படகு ஒன்றில் பயணம் செய்துள்ளார். இந்த படகு குறித்து பலர் பேசி வருகிறார்கள். தற்போது இவர்கள் இந்த படகில் இருந்து வெளியே வரும் வீடியோ வைரலாகி வரும் நிலையில், இவ்வளவு காஸ்ட்லியான படகில் இவர்கள் நடுக்கடலில் பிறந்த நாளை கொண்டாடினார்கள் என்ற ஆச்சரியம் பலருக்கு இருந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
தமிழில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ஓகே கண்மணி திரைப்படத்தின் ஹிந்தி வேர்ஷினான ஓகே ஜானு என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ஷ்ரதா கபூர் இவர் பாலிவுட் பிரபலமான கதாநாயகியாக இருந்து வருகிறார். இவர் பிரபல நடிகர் சக்தி கபூரின் மகளாக இருக்கிறார். இவர் இந்தி சினிமாவின் பிரபல நடிகையாக இருந்து வருகிறார். இவர் புகைப்பட கலைஞர் ஒருவரை காதலித்து வந்த நிலையில் கடந்த 2022ம் ஆண்டு இவர்கள் பிரிந்தார்கள்.

தற்போது ஷ்ரதா கபூர் ராகுல் மோடி என்ற நபரை காதலித்து வருகிறார். இந்நிலையில் மார்ச் மாதம் 3ம் தேதி ஷ்ரதா கபூருக்கு 38 பிறந்தநாள் வந்தது. இந்த பிறந்த நாளை கொண்டாட அவரது காதலர் ராகுல் மோடி நடுக்கடலுக்கு சென்று பிறந்தநாளை கொண்டாட முடிவு செய்தா்ர இதற்காக மும்பையில் உள்ள தனியார் படகு மூலம் இவர்கள் நடுக்கடலுக்கு சென்றார்கள். நடுக்கடலில் பிறந்த நாளை கொண்டாடிவிட்டு இவர்கள் மீண்டும் கடைக்கு திரும்பியபோது அங்கிருந்து ரசிகர்கள் எடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்நிலையில் இவர்கள் நடுக்கடலுக்கு சென்ற படகு குறித்து பலர் பேசி வருகிறார்கள். இந்த படகு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்தியாவில் உள்ள சொகுசான படகுகளில் இதுவும் ஒன்றாக இருக்கிறது. மும்பையில் உள்ள வெஸ்ட் கோஸ்ட் மெரைன் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான இந்த படகு ஒரு டூயல் மோட்டார் கொண்ட படகு ஆகும். இது சுமார் 12.22 மீட்டர் நீளம் கொண்டது.

இதில் பகல் நேரத்தில் அமர்ந்து செல்வதற்காக 15 பேர் வரை செல்ல முடியும். இரவு நேரத்தில் பயணிக்க வேண்டும் என்றால் 6 நபர்கள் படுத்து தூங்குவதற்கான இட வசதி இருக்கிறது. மேலும் இந்த படகை இயக்குவதற்கு மூன்று ஊழியர்கள் தேவை. இந்த படகு அதிகபட்சமாக 24 நாட் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படகில் இரண்டு கேபின் வசதிகள் இருக்கிறது. மேலும் இந்த படகில் உள்ள பயணிகள் வசதிக்காக இரண்டு பாத்ரூம்களும் வழங்கப்பட்டுள்ளன. இந்த படகு முழுவதும் ஏசி வசதி கொண்ட படகாக இருக்கிறது.
இந்த படகை ஷ்ரதா கபூரும் அவருக்கு அவரது காதலர் ராகுல் மோடியும் சேர்ந்து வாடகைக்கு எடுத்து நடுக்கடலுக்கு சென்று பிறந்த நாளை கொண்டாடிவிட்டு வந்துள்ளார்கள். இந்த படகின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இந்த படகுக்குள் இவ்வளவு காஸ்டிலியான விஷயங்கள் எல்லாம் இருக்கிறதா? இது படகா அல்லது பங்களாவா என கேட்கும் அளவுக்கு இந்த படகு இருக்கிறது.

இந்த படகு உள்ளே பயணிகள் சமைப்பதற்காக சிறிய கிச்சன் வசதி சோபா வசதி வாஷ்பேஷன் மற்றும் அவர்கள் பொழுதை கழிப்பதற்காக சிட் அவுட், ரீடிங் டேபிள், ரீடிங் லைட் உள்ளிட்ட வசதிகள் எல்லாம் இதில் வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்த படகு சொகுசு வசதி கொண்ட படகாக அறியப்படுகிறது. இதை நீங்களும் வாடகைக்கு எடுத்துச் செல்ல முடியும் ஆன்லைனில் இந்த படகை வாடகைக்கு புக் செய்யும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பொதுவாக பிரபலங்கள் காஸ்ட்லியான வாகனத்தில் பயணித்து பிறந்த நாளை கொண்டாடுவது வழக்கம். இவர் வித்தியாசமாக நடுக்கடலின் பிறந்த நாளை கொண்டாட வேண்டும் என ஒரு சொகுசு படகை வாடகைக்கு எடுத்து நடுக்கடலுக்கு சென்றுள்ளார்கள். இதில் ஷ்ரதா கபூரின் காதலர் ராகுல் மோடி தனது காதலிக்கு வித்தியாசமான பிறந்தநாள் அனுபவத்தை வழங்க வேண்டும் என்பதற்காக இப்படியான செயல்களில் ஈடுபட்டுள்ளார். நிச்சயம் இது பலரை ஈர்க்கும் விதமாக அமைந்துள்ளது. இந்த படகு குறித்து பலர் பேசி வருகிறார்கள். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்


Click it and Unblock the Notifications









