லேசா ஆக்சலரேட்டர அழுத்தினாலே சீறி பாயும்! கை தேர்ந்த ஓட்டுநர்களே தயங்கும் சூப்பர்காரை கெத்தாக ஓட்டி வந்த நடிகை

உலகின் மிக மிக விலை உயர்ந்த மற்றும் அதிக வேகத்தில் சீறி பாயும் திறன் கொண்ட கார் மாடல்களில் ஒன்றாக லம்போர்கினி ஹூராகேன் டெக்னிகா (Lamborghini Huracan Tecnica) இருக்கின்றது.

இந்த காரில் லம்போர்கினி நிறுவனம் 5.2 லிட்டர் வி10 எஞ்ஜினையே பயன்படுத்தி இருக்கின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 640 பிஎஸ் மற்றும் 565 என்எம் டார்க்கை வெளியேற்றும். மேலும், இந்த காரின் டாப் ஸ்பீடு 325 கிலோ மீட்டர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Lamborghini huracan tecnica

இதுமட்டுமில்லைங்க, லேசாக காலை அழுத்தினாலே இந்த சூப்பர் கார் சீறி பாய தொடங்கிவிடும். இன்னும் தெளிவாகக் கூற வேண்டும் என்றால் வெறும் 3.2 செகண்டுகளிலேயே இந்த கார் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டிவிடும். இந்த திறனை சமாளிப்பது என்பது அவ்வளவு சுலபமானது அல்ல.

கை தேர்ந்த அல்லது நன்கு பயிற்சி பெற்ற ஓட்டுநர்களால் மட்டுமே இந்த திறனை கையாள முடியும். இத்தகைய கூற்றைத் தாங்கி இருக்கும் லம்போர்கினி ஹூராகேன் டெக்னிகா சூப்பர் காரையே ஓர் நடிகை அசால்டாக ஓட்டி வரும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கின்றது.

Shradha with Lamborghini uracan tecnica

பாலிவுட் திரை உலகைச் சேர்ந்த முன்னணி நடிகைகளில் ஒருவரான ஸ்ரதா கபூர், சமீபத்திலேயே இந்த காரை வாங்கினார். இந்த காரையே அவர் தற்போது ஓட்ட தொடங்கி இருக்கின்றார். அவ்வாறு அதில் முதல் முறையாக பயணிக்கும் வீடியோவே தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கின்றது.

இந்த வீடியோவை 'கார்ஸ் ஃபார் யு' எனும் யுட்யூப் சேனலே வெளியிட்டு இருக்கின்றது. அது வெளியிட்டு இருக்கும் வீடியோவில் நடிகை ஸ்ரதா கபூர் கெத்தாக லம்போர்கினி ஹூராகேன் டெக்னிக காரை ஓட்டி வந்து, காரில் இருந்தபடியே போஸ் கொடுக்கும் காட்சிகளே இடம் பெற்றிருக்கின்றன.

Lamborghini uracan tecnica rear

மேலும், அந்த காரை அவர் மிகுந்த மகிழ்ச்சி உடன் ஓட்டி வருவதையும் அந்த வீடியோ வெளிக்காட்டுகின்றது. பலர் இந்த காரில் உற்சாகமான ரைடிங் அனுபவத்தை பெற முடியும் என்பதன் காரணத்தினாலேயே வாங்கிக் கொண்டிருக்கின்றனர். இத்தகைய சூப்பரான ரைடு அனுபவத்தையே நடிகை பெற்றிருப்பார் என தெரிகின்றது.

லம்போர்கினி நிறுவனம் இந்த காரை கடந்த 2022 ஆம் ஆண்டிலேயே முதல் முறையாக அறிமுகப்படுத்தியது. இந்த காரை நிறுவனம் அதன் சியான் ஹைபிரிட் ஹைபர் காரையே தழுவி உருவாக்கி இருக்கின்றது. வழக்கமான தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் திரைக்கு பதிலாக டிஆர்விஎம் இன்ஃபோடெயின்மென்ட் திரையே வழங்கப்பட்டு இருக்கின்றது.

Shraddha kapoor seen driving lamborghini huracan tecnica

இந்த காரின் கவர்ச்சியில் அதிகம் பங்களிக்கும் பாடி பேனல்கள் பெரும்பாலானவை அதிக உறுதியான கார்பன் ஃபைரால் உருவாக்கப்பட்டவை ஆகும். இவை எடையும் குறைவானவை என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த கார் மாடலை லம்போர்கினி நிறுவனம் முழுக்க முழுக்க திறன் வெளிப்பாட்டை மனதில் கொண்டு தயாரித்து இருப்பதனாலேயே இந்த மாதிரியான அம்சங்களை ஹூராகேன் டெக்னிகாவில் அது பயன்படுத்தி இருக்கின்றது.

அதேவேளையில், சொகுசு மற்றும் ஆடம்பர அம்சங்களும் இந்த காரில் இடம் பெற்றிருக்கும். பிரீமியம் உணர்வை வழங்க வேண்டும் என்பதற்காக அல்கான்ட்ரா லெதர் இருக்கைகள் இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இதுபோன்றும் பல சூப்பரான அம்சங்களை இந்த கார் தாங்கி இருக்கின்ற காரணத்தினாலேயே விலையிலும் மிக மிக உயரியக் காராக ஹூராகேன் டெக்னிகா காட்சியளிக்கின்றது.

இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலையே ரூ. 4.04 கோடி ஆகும். இது போர்ஷே ஜிடி3 ஆர்எஸ், மெக்லாரன் 720எஸ் மற்றும் ஃபெர்ராரி டிரிபியூட்டோ ஆகிய கார் மாடல்களுக்கு போட்டியாக விற்பனையில் உள்ளது. ஸ்ரதா கபூர் இடத்தில் இதுபோன்று இன்னும் பல அரிய வகை கார்கள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா (Maruti Suzuki Vitara Brezza), மெர்சிடிஸ் எம்எல் 250 சிடிஐ (Mercedes ML 250 CDI) மற்றும் பிஎம்டபிள்யூ 3-சீரிஸ் (BMW 3-Series) உள்ளிட்ட கார் மாடல்களையே அவர் பயன்படுத்தி வருகின்றார். இதுதவிர, இன்னும் பல அரிய வகை கார்கள் அவரிடத்தில் பயன்பாட்டில் இருக்கின்றன.

Article Published On: Friday, October 27, 2023, 13:52 [IST]
English summary
Shraddha kapoor drives lamborghini huracan tecnica supercar here is video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X