10 தலைமுறைக்கு உக்காந்து சாப்பிட்டாலும் சொத்து அழியாது! ஆனாலும் 7 லட்ச ரூபா கார்ல சாதாரணமா வந்த அழகு தேவதை!
இந்தியாவை சேர்ந்த மிடிஸ்-க்ளாஸ் மக்கள் விரும்பி வாங்கும் கார்களில் ஒன்றாக இருப்பது மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift). விற்பனைக்கு வந்து 20 ஆண்டுகள் கடந்த பின்னரும் கூட (2005ம் ஆண்டு லான்ச் செய்யப்பட்டது), இந்திய சாலைகளை ஆளும் அரசனாக மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் இன்றளவும் திகழ்கிறது. நீங்கள் ஏதேனும் ஒரு பரபரப்பான சாலையில் சிறிது நேரம் நின்று பாருங்கள். நீங்கள் அதிகம் பார்க்கும் கார்களில் ஒன்றாக மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் நிச்சயமாக இருக்கும் என்பதை நாங்கள் எழுதி தருகிறோம்.
மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரை இந்தியா விரும்புவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. சவாலான விலை நிர்ணயம்தான் முதல் காரணம். மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் தற்போதைய நிலையில், 6.49-9.50 லட்ச ரூபாய் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலைகளில் (Ex-Showroom Price) விற்பனை செய்யப்படுகிறது. உண்மையில் இந்த விலைக்கு மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக திகழ்கிறது.

விலை சவாலாக நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதால், மிடிஸ்-க்ளாஸ் மக்களால், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரை எளிமையாக வாங்க முடிகிறது. பொதுவாக கார்களை வாங்குவது என்பது கொஞ்சம் எளிமையான விஷயம்தான். ஆனால் அதை பராமரிப்பதுதான் கடினமானது. எரிபொருள், ரிப்பேர் என பெரிய தொகையை நீங்கள் செலவு செய்ய வேண்டியிருக்கும்.
ஆனால் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரை பராமரிப்பது எளிமையானது. இதற்கான பராமரிப்பு செலவு குறைவுதான். அத்துடன் நல்ல மைலேஜூம் (Mileage) கிடைக்கும் என்பதால், எரிபொருளுக்காக நீங்கள் அதிகம் செலவு செய்ய வேண்டியதில்லை (சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 32.85 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகின்றன).

அத்துடன் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் ரீசேல் வேல்யூவும் (Resale Value) அதிகம். எனவே விற்பனை செய்யும் சூழல் ஏற்பட்டால், உங்களுக்கு நல்ல தொகை கிடைக்கும். இவை எல்லாம் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரை இந்தியா விரும்புவதற்கு முதன்மையான காரணங்களாக உள்ளன. ஆனால் இதற்கான முழுமையான காரணங்களை பட்டியலிட்டால், ஏராளமான விஷயங்களை கூற முடியும்.
இதில், சௌகரியமான மற்றும் மகிழ்ச்சியான ஓட்டுதல் அனுபவம், சிறப்பான கையாளுமை, துள்ளலான டிசைன் ஆகியவை முக்கியமானவை. இவை எல்லாம் ஒன்று சேர்ந்து இந்திய நடுத்தர வர்க்கத்தின் முதன்மையான தேர்வாக மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்டை மாற்றியுள்ளன. அத்துடன் கார்களை மாடிஃபிகேஷன் செய்து பயன்படுத்துபவர்களும் ஸ்விஃப்ட் காரை பெரிதும் விரும்புகின்றனர்.
மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் இன்ஜின் நன்றாக 'ட்யூன்' செய்யப்பட கூடியது. எக்ஸாஸ்ட் மாற்றங்கள் மற்றும் இசியூ ரீமேப்பிங் (ECU Remapping) போன்ற விஷயங்களை எல்லாம் எளிதாக செய்யலாம். இதன் மூலம் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரை 'ஃபன் டூ டிரைவ்' குணநலன் கொண்டதாக மாற்ற முடியும்.
மேலும் சந்தையில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காருக்கு ஏராளமான பாடி கிட்களும் கிடைக்கின்றன. இதன் மூலம் அதன் டிசைனையும், நீங்கள் மேலும் மெருகேற்றலாம். பெங்களூரின் ஜேசி ரோடு பகுதிக்கு ஒரு முறை சென்று வாருங்கள். அங்குள்ள கார் மாடிஃபிகேஷன் கடை வாசல்களில், டிசைன் மெருகேற்றலுக்காக ஏராளமான மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார்கள் வரிசை கட்டி நிற்பதை நீங்கள் காணலாம்.
சரி, மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரை மிடில்-க்ளாஸ் மக்கள் ஏன் விரும்புகின்றனர்? என்பது உங்களுக்கு புரிந்திருக்கும். ஆனால் பல கோடி சம்பளம் பெறும் திரையுலக நட்சத்திரங்கள் எல்லாம் பொதுவாக மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரை வாங்க மாட்டார்கள். அதில் பயணிக்கவும் மாட்டார்கள். ஆனால் இதற்கு ஷ்ரத்தா கபூர் (Shraddha Kapoor) மட்டும் விதிவிலக்கு.
தற்போதைய நிலையில் பாலிவுட் திரையுலகில் அதிக சம்பளம் பெறும் நடிகைகளில் ஒருவராக ஷ்ரத்தா கபூர் உள்ளார். அவரது சொத்து மதிப்பு (Net Worth) சுமாராக 150 கோடி இருக்கலாம் என யூகிக்கப்படுகிறது. ஆனால் ஷ்ரத்தா கபூர், பகட்டை விரும்பாமல், மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.
பொதுவாக பாலிவுட் நட்சத்திரங்கள் எல்லாம், சலூன் அல்லது ஜிம்மிற்கு செல்வதாக இருந்தாலும் கூட, ஆடி, மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் பிஎம்டபிள்யூ கார்களில்தான் பயணம் செய்வார்கள். ஆனால் ஷ்ரத்தா கபூர் பெரும்பாலான இடங்களுக்கு மிகவும் எளிமையான மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரில் வந்து கொண்டுள்ளார்.
இந்த வரிசையில் மும்பையில் ஒரு இடத்திற்கு மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரில் ஷ்ரத்தா கபூர் வந்தபோது எடுக்கப்பட்ட வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் யூடியூப் (YouTube) தளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இது ஷ்ரத்தா கபூருக்கு சொந்தமான கார்தான். அவரது பெயரில்தான் இந்த கார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2024ம் ஆண்டு ஜூலை 19ம் தேதி இந்த கார் பதிவு செய்யப்பட்டுள்ளது. கார்தான் எளிமையானது என்றால், ஷ்ரத்தா கபூர் வாங்கியுள்ள வேரியண்ட்டும் கூட எளிமையானதுதான். ஆம், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் சற்று விலை உயர்ந்த டாப் வேரியண்ட்டை கூட ஷ்ரத்தா கபூர் வாங்கவில்லை. அவர் வாங்கியிருப்பது VXI (O) ஆகும்.
இதன் எக்ஸ்-ஷோரூம் விலை வெறும் 7.57 லட்ச ரூபாய் மட்டுமே. டாப் வேரியண்ட்டை விட இந்த வேரியண்ட் கிட்டத்தட்ட 2 லட்ச ரூபாய் விலை குறைவானது. ஷ்ரத்தா கபூரின் எளிமையை விவரிக்க இதை விட வேறு எடுத்துக்காட்டுகள் எதுவும் தேவையில்லை என நாங்கள் கருதுகிறோம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: உண்மையில் கோடிகளில் சம்பளம் பெறும் பிரபலமான மனிதர்களை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் போன்ற மிகவும் எளிமையான கார்களில் பார்ப்பது என்பது மிகவும் அரிதானது. அப்படிப்பட்ட அரிதான ஒரு வீடியோதான் ஷ்ரத்தா கபூர் மூலமாக தற்போது நமக்கு கிடைத்துள்ளது.


Click it and Unblock the Notifications








