7 தலைமுறைக்கு உட்காந்து சாப்பிட்ற அளவு சொத்து இருந்தும் மாருதி காரில் வந்த தேவதை! தாலி கட்றவருக்கு மச்சம்தான்!

திரையுலகில் நுழைந்து விட்டாலே சொகுசு கார்களில்தான் (Luxury Cars) பயணம் செய்ய வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக இருக்கிறது. ஒரு சில திரைப்படங்களில் அல்லது தொலைக்காட்சி தொடர்களில் நடித்த நடிகைகள் கூட மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களில்தான் வலம் வருகின்றனர். இன்னும் ஒரு சிலரோ யூஸ்டு கார் மார்க்கெட்டில் ஆடி (Audi), பிஎம்டபிள்யூ (BMW) மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz) நிறுவனங்களின் கார்களை வாங்கி விட்டு, பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு வருகின்றனர். இதன் மூலமாக தங்களை பற்றிய ஆடம்பரமான ஒரு பிம்பத்தை உருவாக்குகின்றனர்.

ஆனால் சுமார் 125 கோடி ரூபாயை சொத்து மதிப்பாக (Net Worth) கொண்டுள்ள நடிகை ஒருவர் மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டுள்ளார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? இது உண்மைதான். பிரபல நடிகையான ஷ்ரத்தா கபூர் (Shraddha Kapoor) பற்றிதான் நாங்கள் இங்கே பேசி கொண்டுள்ளோம்.

Shraddha Kapoor Spotted In Humble New-gen Maruti Suzuki Swift

இவர் மிகவும் பிரபலமான பாலிவுட் நடிகைகளில் ஒருவர் ஆவார். தற்போதைய நிலையில் ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கு 5-7 கோடி ரூபாயை ஷ்ரத்தா கபூர் சம்பளமாக பெறுவதாக கூறப்படுகிறது. இதுதவிர மாடலிங் மற்றும் விளம்பரங்கள் மூலமாகவும் ஷ்ரத்தா கபூர் வருமானம் ஈட்டி கொண்டுள்ளார்.

ஆனால் பல வழிகளில் பல கோடி ரூபாய் வருமானம் வந்தாலும் கூட, ஷ்ரத்தா கபூர் எளிமையான வாழ்க்கையே வாழ்ந்து கொண்டுள்ளார். மிகவும் சாதாரணமான டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) காரில் ஷ்ரத்தா கபூர் பல்வேறு இடங்களுக்கு வந்து சென்றதை கடந்த காலங்களில் நாம் பார்த்துள்ளோம்.

Shraddha Kapoor

அந்த வீடியோக்கள் எல்லாம் வெளியாகி, ரசிகர்களின் மனதை கவர்ந்தன. இந்த வரிசையில் தற்போது புதிதாக ஒரு வைரல் வீடியோ (Viral Video) வெளியாகியுள்ளது. இந்த வைரல் வீடியோவில் ஷ்ரத்தா கபூர் மிகவும் சாதாரணமான மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift) காரை பயன்படுத்துவதை நம்மால் பார்க்க முடிகிறது.

இது புதிய தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் ஆகும். ஸ்விஃப்ட் காரின் புதிய தலைமுறை மாடலை மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த மே மாதம்தான் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்திய சந்தையில் இந்த புதிய தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் ஆரம்ப விலை வெறும் 6.49 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது.

அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையோ வெறும் 9.45 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இவ்வளவு விலை குறைந்த ஒரு காரை இந்தியாவிலேயே அதிக சம்பளம் பெறும் நடிகைகளில் ஒருவரான ஷ்ரத்தா கபூர் பயன்படுத்தி கொண்டிருப்பதை ரசிகர்கள் பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மெர்சிடிஸ் பென்ஸ் எம்எல்250 (Mercedes Benz ML250) மற்றும் லம்போர்கினி ஹூராகேன் டெக்னிகா (Lamborghini Huracan Tecnica) போன்ற விலை உயர்ந்த கார்கள் எல்லாம் ஷ்ரத்தா கபூரிடம் இருக்கவே செய்கின்றன. இருப்பினும் சாதாரண கார்களை பயன்படுத்துவதைதான் அவர் பெரிதும் விரும்புகிறார்.

ஷ்ரத்தா கபூரை சொகுசு கார்களில் பார்ப்பதை விட சாதாரண கார்களில் பார்ப்பதுதான் மிகவும் அதிகமாக உள்ளது. ஃபார்ச்சூனர், ஸ்விஃப்ட் தவிர மிகவும் சாதாரணமான மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா (Maruti Suzuki Vitara Brezza) கார் ஒன்றும் கூட, ஷ்ரத்தா கபூரிடம் உள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

அவர் தற்போது பயன்படுத்திய ஸ்விஃப்ட் கார் விலை குறைவானது என்றாலும் கூட, ஏராளமான வசதிகளை கொண்டதாக உள்ளது. வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே சப்போர்ட் வசதியுடன் கூடிய 9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் செல்போன் சார்ஜர் மற்றும் கனெக்டட் கார் தொழில்நுட்பம் போன்றவை எல்லாம் இந்த காரின் முக்கியமான வசதிகள் ஆகும்.

இதற்கிடையே மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வரும் ஷ்ரத்தா கபூருக்கு நெட்டிசன்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். அழகான மற்றும் எளிமையான வாழ்க்கையை வாழும் ஷ்ரத்தா கபூர் போன்ற ஒரு பெண்ணை திருமணம் செய்பவர் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி எனவும் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து கொண்டுள்ளனர்.

More from DriveSpark

Article Published On: Thursday, December 5, 2024, 13:14 [IST]
English summary
Shraddha kapoor spotted in humble new gen maruti suzuki swift viral video netizens impressed
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+