றெக்கை மட்டும் இருந்தா தேவதை! சாதாரண காரில் எளிமையான உடையில் வந்த அழகான பொண்ணு அவங்களா! கிறங்கி போன இளசுகள்!
நடிகர், நடிகைகள் எல்லாம் பெரும்பாலும் ஆடி (Audi), பிஎம்டபிள்யூ (BMW) மற்றும் மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) போன்ற நிறுவனங்களின் விலை உயர்ந்த கார்களில்தான் வலம் வருவார்கள். ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce) கார்களில் வலம் வரும் நடிகர், நடிகைகள் கூட இருக்கவே செய்கின்றனர்.
ஆனால் ஒரு சிலர் மட்டும் விதிவிலக்காக மிகவும் எளிமையான கார்களை (Humble Cars), பயன்படுத்தி கொண்டுள்ளனர். இதற்கு ஷ்ரத்தா கபூர் (Shraddha Kapoor) ஒரு உதாரணம். அதிகம் சம்பாதிக்கும் பாலிவுட் நடிகைகளில் (Bollywood Actress) ஒருவராக இருந்தாலும் கூட, மிகவும் சாதாரண கார்களில்தான் ஷ்ரத்தா கபூர் வலம் வருகிறார்.

மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) மற்றும் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift) போன்ற எளிமையான கார்களில் ஷ்ரத்தா கபூர் வலம் வந்ததை கடந்த காலங்களில் நாம் பார்த்துள்ளோம். இந்த வரிசையில் தற்போது மேலும் ஒரு எளிமையான காரில் ஷ்ரத்தா கபூர் வலம் வந்துள்ளார்.
அது டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) ஆகும். இது இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள எஸ்யூவி (SUV) ரக கார்களில் ஒன்று. அரசியல்வாதிகள் மற்றும் தொழில் அதிபர்கள் பலர், டொயோட்டா ஃபார்ச்சூனர் கார்களை பயன்படுத்தி வருகின்றனர். பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூரிடமும் ஒரு டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் இருக்கிறது.

அது கருப்பு நிற கார் ஆகும். மும்பையில் உள்ள திரைப்பட துறை சார்ந்த அலுவலகம் ஒன்றுக்கு, இந்த காரில் ஷ்ரத்தா கபூர் வந்து இறங்கிய வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. மிகவும் எளிமையான உடையில் ஷ்ரத்தா கபூர் வந்து இறங்குவதை இந்த வீடியோவில் நம்மால் பார்க்க முடிகிறது.
பின்னர் அங்கு இருந்தவர்கள் போட்டோ மற்றும் வீடியோ எடுக்க போஸ் கொடுத்து விட்டு, ஷ்ரத்தா கபூர் உள்ளே சென்று விட்டார். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் எம்ஜி க்ளோஸ்ட்டர் (MG Gloster), ஜீப் மெரிடியன் (Jeep Meridian), ஸ்கோடா கோடியாக் (Skoda Kodiaq) மற்றும் ஃபோக்ஸ்வேகன் டிகுவான் (Volkswagen Tiguan) ஆகிய கார்களுடன், டொயோட்டா ஃபார்ச்சூனர் போட்டியிட்டு வருகிறது.
ஆனால் இந்த கார்களுடன் ஒப்பிடும்போது, விற்பனையில் டொயோட்டா ஃபார்ச்சூனர் பல மடங்கு முன்னிலையில் இருக்கிறது. ஒரு சமயத்தில் ஃபோர்டு எண்டேவர் (Ford Endeavour) கார், டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு விற்பனையில் கடுமையான போட்டியை வழங்கி வந்தது. ஆனால் ஃபோர்டு எண்டேவர் கார் தற்போது விற்பனையில் இல்லை.
ஃபோர்டு நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேறிய காரணத்தால், எண்டேவர் காரின் விற்பனை நிறுத்தப்பட்டு விட்டது. எனவே தற்போது ஃபுல்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டில் டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி கொண்டுள்ளது. டொயோட்டா ஃபார்ச்சூனர் காரில் மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.
அவை 2.7 லிட்டர் பெட்ரோல் (Petrol) மற்றும் 2.8 லிட்டர் டீசல் (Diesel) இன்ஜின்கள் ஆகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டொயோட்டா ஃபார்ச்சூனர் காரின் ஆரம்ப விலை (Price) 32.99 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 50.74 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் பொதுவாக பார்த்தால் விலை உயர்ந்த ஒரு வாகனம்தான். ஆனால் பாலிவுட் நடிகை ஒருவரது இடத்தில் இருந்து பார்த்தால், அது மிகவும் சாதாரணமான ஒரு கார். அப்படிப்பட்ட சாதாரண ஒரு காரை ஷ்ரத்தா கபூர் பயன்படுத்தி கொண்டிருப்பது உண்மையிலேயே ஆச்சரியம் அளிக்கிறது.


Click it and Unblock the Notifications








