3 கோடி ரூபா காரை வாங்கிட்டு சர்வ சாதாரணமா ஜூஸ் குடிச்சிட்டு போறார்! இதுவர ஒரு தமிழ் படத்துல கூட நடிச்சது இல்ல!

ஷ்ரத்தா கபூர் (Shraddha Kapoor), சமீப காலமாக பாலிவுட் (Bollywood)-இல் பல டாப் ஹீரோக்கள் உடன் ஜோடி சேர்ந்து நடித்து 38 வயதில் பிசியான முன்னணி நடிகையாக உள்ளார். என்ன தான் சினிமாவில் பிசியாக இருந்தாலும் அவ்வப்போது புது, புது விலையுயர்ந்த கார்களை வாங்குவதை நடிகை ஷ்ரத்தா கபூர் எப்போதும் மறப்பது இல்லை. அந்த வகையில் தற்போது இவர் பிரம்மாண்டமான லெக்ஸஸ் எல்.எம் 350எச் (Lexus LM 350h) காரை வாங்கி உள்ளார். பிரம்மாண்டம் என ஏன் கூறுகிறோம் என்றால், எம்பிவி (MPV) ரக காரான இது வேன் போன்று நன்கு பெரிய தோற்றத்தை கொண்டுள்ளது.

பொதுவாகவே, எம்பிவி கார்கள் என்றாலே பிரம்மாண்டமானவை ஆக இருக்கும். காரின் உயரம், நீளம் மற்றும் அகலம் என எல்லாமே பெரிய அளவிற்கு இருக்கும். லெக்ஸஸ் எல்.எம் 350எச் சுமார் ரூ.3 கோடி அளவில் மதிப்பிலானதாக உள்ளதால், விலையை ஈடுச்செய்ய மிக பிரம்மாண்டமாக இந்த காரை உருவாக்குகின்றனர்.

shraddha kapoor with luxus car

இத்தகைய காரை மிகவும் சமீபத்தில் வாங்கியுள்ள நடிகை ஷ்ரத்தா கபூர் அதில் ஜாலியாக ஜூஸ் குடித்தப்படி ஏறி செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. வீடியோவில், ஷ்ரத்தா கபூரின் முற்றிலும் கருப்பு நிறத்திலான பிராண்ட்-நியூ லெக்ஸஸ் எல்.எம் 350எச் காரை காணலாம். இந்த கருப்பு நிறத்தை 'பளபளப்பான கிராபைட் பிளாக் ஃப்ளேக்' (Graphite Black Glass Flake) என லெக்ஸஸ் நிறுவனம் அழைக்கிறது.

இது இல்லாமல், சோனிக் அகாடே, சோனிக் டைட்டானியம் மற்றும் சோனிக் குவார்ட்ஸ் என்கிற கலர் ஆப்ஷன்களிலும் இந்த லெக்ஸஸ் கார் கிடைக்கிறது. இந்த சோனிக் பெயரில் வரும் கலர் ஆப்ஷன்கள் எல்லாமே நடிகை ஷ்ரத்தா கபூர் வைத்துள்ள கருப்பு நிறத்தை காட்டிலும் சற்று பிரீமியத்திலானவை ஆகும். இதனாலேயே இந்த சோனிக் கலர் ஆப்ஷனில் வாங்குவதாக இருந்தால் காரின் விலையும் சற்று அதிகமாக இருக்கும்.

shraddha kapoor with luxus car

எல்.எம் 350எச் காரின் 2வது இருக்கை வரிசையில் அமர்ந்து நடிகை ஷ்ரத்தா கபூர் செல்வதையும், அவருக்கு முன்னால் கால்களை நீட்டிக்கொள்ள அதிக இடவசதி உள்ளதையும் வீடியோவில் காணலாம். இந்த காரில் மொத்தமாகவே வெறும் 4 இருக்கைகள் மட்டுமே உள்ளன. டிரைவர் சீட் உள்பட முன்னால் வழங்கப்படும் 2 இருக்கைகளுக்கு நன்கு இடைவெளி உடன் பின்னால் 2 இருக்கைகள் வழங்கப்படுகின்றன.

அங்கு தான் காரின் கேப்டன் இருக்கைகள் உள்ளன. டிரைவர் இருக்கையை காட்டிலும் அதிக வசதி கொண்ட இருக்கைகளை 2வது வரிசையில் லெக்ஸஸ் நிறுவனம் வழங்குகிறது. காற்றோட்ட வசதிகள் உடன் அதிக குஷின்களை கொண்டதாக லெக்ஸஸ் எல்.எம் 350எச் காரின் 2வது வரிசை இருக்கைகள் வழங்கப்படுகின்றன. இது இல்லாமல், தலையணை, மசாஜ் வசதிகள், யுஎஸ்பி சார்ஜிங் வசதிகள் மற்றும் மடக்கக்கூடிய மேசைகளும் 2வது வரிசை இருக்கை செட்-அப்பில் வழங்கப்படுகின்றன.

shraddha kapoor with luxus car

நடிகை ஷ்ரத்தா கபூர் இந்த லெக்ஸஸ் காரின் 4-சீட்டர் வெர்சனை வாங்கி உள்ளார். இது இல்லாமல், லெக்ஸஸ் எல்.எம் 350எச் காரின் 7-சீட்டர் வெர்சனும் விற்பனை செய்யப்படுகிறது. 7-சீட்டர் வெர்சனிலும் 2வது வரிசையில் போதுமான வசதிகளை லெக்ஸஸ் நிறுவனம் வழங்குகிறது. இருப்பினும், நடிகை ஷ்ரத்தா கபூர் வைத்திருக்கும் 4-சீட்டர் வெர்சன் தான் ஹைலைட்டே.

எல்.எம் 350எச் ஆனது ஓர் பிளக்-இன் ஹைப்ரீட் (Plug-in Hybrid) கார் ஆகும். அதனால்தான், இதன் பெயரின் இறுதியில் 'எச்' என குறிக்கப்பட்டுள்ளது. இந்த லக்சரி எம்பிவி காரில் 2.5 லிட்டர் ஹைப்ரீட் என்ஜின் உடன் எலக்ட்ரிக் மோட்டார் இணைக்கப்படுகிறது. அளவில் பெரியதாக இருப்பினும், 0-இல் இருந்து 100kmph வேகத்தை வெறும் 8.7 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய இந்த காரின் டாப்-ஸ்பீடு 190kmph ஆகும்.

shraddha kapoor with luxus car

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடிகை ஷ்ரத்தா கபூரை போலவே, இந்த லெக்ஸஸ் காரை நிறைய பேர் 4-சீட்டர் ஆப்ஷனில் வாங்கவே விரும்புகின்றனர். ஏனெனில், ரூ.3 கோடி செலவு செய்து காரை வாங்கும் நிலையில் இருப்போர் இந்த காரை குடும்பத்துக்காக வாங்குவது இல்லை. தனது சொந்த பயன்பாட்டிற்காகவும், அலுங்கல் குலுங்கல் இல்லா பயணத்திற்காகவும் தான் வாங்குகின்றனர்.

More from DriveSpark

Article Published On: Saturday, March 29, 2025, 19:53 [IST]
English summary
Shraddha kapoor spotted with her brand new lexus lm350h luxury car
மேலும்... #celebrity car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X