யாரும் எதிர்பார்க்கல! சாலையை கிழித்துக் கொண்டு சென்றது இவரது மெர்சிடிஸ் காரா!! போட்டோ எடுக்க கூடிய கூட்டம்!

இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ் ஐய்யரின் ப்ராபஸ் மெர்சிடிஸ் பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி கார் மும்பை சாலையில் அடையாளம் காணப்பட்டு உள்ளது. இதுகுறித்து இணையத்தில் வெளியாகியுள்ள வீடியோவையும், ஷ்ரேயாஸ் ஐய்யரின் இந்த கஸ்டமைஸ்ட் மெர்சிடிஸ் காரை பற்றியும் இனி பார்க்கலாம்.

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ் ஐய்யரை பற்றி உங்களில் பலர் கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்டுள்ள 2023 உலக கோப்பைக்கான இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியில் கூட இடம்பிடித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர்கள் பொதுவாகவே ஆட்டோமொபைல் வாகனங்களின் மீது ஆர்வம் கொண்டவர்களாக இருப்பர்.

shreyas iyers brabus mercedes spotted

அந்த வகையில், ஷ்ரேயாஸ் ஐய்யர் புதியதாக ப்ராபஸ் மெர்சிடிஸ் பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி காரை கடந்த 2022ஆம் ஆண்டில் வாங்கினார். இதனை பற்றி அப்போதே நமது செய்தித்தளத்தில் பார்த்திருந்தோம். ப்ராபஸ் மெர்சிடிஸ் பென்ஸ் ஜி63 கார் என்பது ப்ராபஸ் ஆக்ஸஸரீ தொகுப்புகளை கொண்ட மெர்சிடிஸ் பென்ஸ் ஜி63 கார் ஆகும். டெலிவிரி எடுக்கும் போது தான் கடைசியாக ஷ்ரேயாஸ் ஐய்யரின் இந்த வாகனத்தை பார்த்திருந்தோம்.

இந்த நிலையில், மும்பையின் பிரபலமான சாலை ஒன்றில் ஷ்ரேயாஸ் ஐய்யரின் ப்ராபஸ் மெர்சிடிஸ் பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி கார் காட்சி தந்துள்ளது. இதுகுறித்து இணையத்தில் வெளியாகியுள்ள வீடியோவை கீழே செய்தியின் இறுதியில் காணலாம். மும்பையின் மெரைன் டிரைவ் சாலை மிக பிரபலமானது. ஏனெனில் அந்த சாலையை சுற்றி அமைந்துள்ள பகுதிகளில் விஐபிகள் அதிக பேர் வசிக்கின்றனர்.

shreyas iyers brabus mercedes spotted

ஆதலால் அவர்களது விலையுயர்ந்த கார்களை மெரைன் டிரைவ் சாலையில் அடிக்கடி பார்க்க முடியும். பிரபலங்கள் மற்றும் அவர்களது கார்களை ஒரே நேரத்தில் பார்த்துவிடலாம்/ மொபைலில் காட்சிப்படுத்தி விடலாம் என்பதற்காக இந்த சாலையின் ஓரங்களில் எப்போதுமே ஒரு கூட்டம் இருக்கும். அவ்வாறு இந்த சாலை வழியாக சமீபத்தில் ஷ்ரேயாஸ் ஐய்யரின் ப்ராபஸ் மெர்சிடிஸ் பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி கார் சென்றுள்ளது.

இந்த காருக்குள் யார் யார் உள்ளனர் என்பதை பார்க்க முடியவில்லை. ஏனெனில் கண்ணாடிகள் அனைத்தும் கருப்பு நிறத்தில் டிண்ட் செய்யப்பட்டு உள்ளன. நிச்சயமாக, ஷ்ரேயாஸ் ஐய்யர் இருப்பதற்கு வாய்ப்பில்லை. ஏனெனில் அவர் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பங்கேற்பதற்காக தற்சமயம் இலங்கையில் உள்ளார். கடந்த ஆண்டில் ஷ்ரேயாஸ் ஐய்யர் டெலிவிரி எடுத்த போது இருந்த காருக்கும், வீடியோவில் காட்சித்தரும் காருக்கும் இடையே ஒரு வித்தியாசத்தை நம்மால் கவனிக்க முடிகிறது.

shreyas iyers brabus mercedes spotted

அதாவது, டெலிவிரி எடுத்த சமயத்தில் இந்த கார் செலேனைட் கிரே மெட்டாலிக் நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டு இருந்தது. ஆனால், கீழே பதிவிடப்பட்டுள்ள வீடியோவில் புதிய மேட் கருப்பு நிறத்தில் கார் காட்சியளிக்கிறது. அதுமட்டுமின்றி, டெலிவிரி எடுத்த சமயத்தில் காரில் பொனெட் மட்டுமே கார்பன் ஃபைபரால் ஃபினிஷ் செய்யப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது, ப்ராபஸ் ஆக்ஸஸரீ தொகுப்புகள் முழுவதுமாக பெற்ற நிலையில் கார் காட்சியளிக்கிறது.

குறிப்பாக, மேற்கூரையில் பொருத்தப்பட்டு இருக்கும் எல்இடி டிஆர்எல்-கள் எல்லாம் ஷ்ரேயாஸ் ஐய்யர் டெலிவிரி எடுத்த போது காரில் இல்லை. இவற்றுடன், கார் பின்பக்கத்தில் கார்பன் ஃபைபர் ஸ்பாய்லரை கொண்டுள்ளது. இது ப்ராபஸ் தொகுப்பில் இருந்து பெறப்பட்டு, பொருத்தப்பட்டதா என்பது தெரியவில்லை. ஏனெனில் ப்ராபஸ் தொகுப்பில் வரும் ரியர் ஸ்பாய்லர் சற்று வித்தியாசமான டிசைனில் இருக்கும்.

shreyas iyers brabus mercedes spotted

டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலகளவில் பிரபலமான ஆஃப்-ரோடு எஸ்யூவி கார்களுள் ஒன்று மெர்சிடிஸ் பென்ஸ் ஜி63 ஆகும். ஷ்ரேயாஸ் ஐய்யர் வாங்கியிருக்கும் ஏஎம்ஜி வெர்சனில் இந்த காரின் விலை மிகவும் அதிகம். எந்த அளவிற்கு என்றால், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்வதிலேயே விலையுயர்ந்த தயாரிப்புகளுள் ஒன்று ஜி63 ஏஎம்ஜி ஆகும். இதன் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.2.91 கோடியாக உள்ளது.

Article Published On: Wednesday, September 6, 2023, 11:19 [IST]
English summary
Shreyas iyers brabus mercedes benz g63 amg car spotted
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X