அப்பா அதிகாரத்துக்கு வந்தவுடன் மறுபடியும் தமிழ் சினிமால தலை காட்றாங்க! ரெண்டரை கோடி ரூபா கார்ல போனது அவங்களா!

இந்தியாவில் கடந்த சில வருடங்களாக செடான் ரக கார்களின் (Sedan Cars) விற்பனை மிகவும் மந்தமாக இருந்து வருகிறது. ஆனால் இந்தியாவின் பிரபலமான மனிதர்கள், குறிப்பாக திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் தொழில் அதிபர்கள் போன்றோர், செடான் ரக கார்களில் பயணம் செய்வதைதான் அதிகம் விரும்புகின்றனர்.

அப்படி இந்தியாவின் பிரபலமான மனிதர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் செடான் ரக கார்களில் ஒன்றுதான் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் (BMW 7 Series). கடந்த காலங்களில் பிரதமர் நரேந்திர மோடி (Prime Minister Narendra Modi) கூட, பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரில் பயணம் செய்ததை நீங்கள் பார்த்திருக்கலாம்.

Shruti Haasan Spotted In BMW 7 Series

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார், 2 வேரியண்ட்களில் (Variants) விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில், 740i M Sport வேரியண்ட்டின் விலை 1.84 கோடி ரூபாய் ஆகவும், 740d M Sport வேரியண்ட்டின் விலை 1.87 கோடி ரூபாய் ஆகவும் உள்ளது.

இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். இந்த 2 வேரியண்ட்களின் ஆன்-ரோடு விலையும் (On-Road price) கிட்டத்தட்ட 2.40 கோடி ரூபாய் என்ற அளவில் வரும். இவ்வளவு விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரை, நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி, இந்தியாவின் பிரபலமான மனிதர்கள் பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.

Shruti Haasan

இதில், ஸ்ருதி ஹாசன் (Shruti Haasan) முக்கியமானவர். இவர் மூத்த நடிகரும், வெகு சமீபத்தில் ராஜ்யசபா எம்பி-யாக (Rajya Sabha MP) தேர்வு செய்யப்பட்டவருமான கமல் ஹாசனின் (Kamal Haasan) மகள் ஆவார். கடந்த சில ஆண்டுகளாக ஸ்ருதி ஹாசன் தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை. ஆனால் ஒரு சமயத்தில் விஜய் (Vijay), அஜீத் (Ajith), சூர்யா (Suriya) போன்ற முன்னணி தமிழ் நடிகர்கள் உடன், ஸ்ருதி ஹாசன் நடித்து கொண்டிருந்தார்.

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில், கடைசியாக கடந்த 2021ம் ஆண்டு வெளியான லாபம் திரைப்படத்தில் ஸ்ருதி ஹாசன் நடித்திருந்தார். ஆனால் அதன் பின் தமிழ் திரைப்படங்களில் அவர் நடிக்கவில்லை. எனினும் தமிழ் சினிமாவில் 'கம்பேக்' கொடுக்க ஸ்ருதி ஹாசன் தற்போது தயாராகி விட்டார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Super Star Rajinikanth) உடன் கூலி (Coolie) மற்றும் தமிழக வெற்றிக் கழக (Tamilaga Vettri Kazhagam) தலைவர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் (Jana Nayagan) போன்ற திரைப்படங்களில் ஸ்ருதி ஹாசன் நடித்துள்ளார். இந்த திரைப்படங்கள் முறையே வரும் ஆகஸ்ட் மற்றும் ஜனவரி மாதங்களில் வெளியாகவுள்ளன.

இதன் மூலம் தமிழ் திரை உலகில் ஸ்ருதி ஹாசன் தனது 2வது இன்னிங்ஸை விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக ஸ்ருதி ஹாசனின் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று, சமூக வலை தளங்களில் தற்போது மிகவும் வேகமாக பரவி வருகிறது.

இந்த வைரல் வீடியோவில், ஸ்ருதி ஹாசன் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரில் இருந்து இறங்கி, விமான நிலையத்திற்குள் செல்வதை நம்மால் பார்க்க முடிகிறது. ஸ்ருதி ஹாசனிடம் இருப்பது பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரின் 740d M Sport வேரியண்ட் ஆகும். இதுதான் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரின் டாப் வேரியண்ட் ஆக உள்ளது.

இந்த வேரியண்ட்டில், 3.0 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 286 பிஎஸ் பவர் மற்றும் 650 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன், 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: வீரேந்திர சேவாக் (Virender Sehwag), ஷாருக்கான் (Shah Rukh Khan) மற்றும் அலியா பட் (Alia Bhatt) போன்ற பிரபலமான மனிதர்களிடமும், பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார் உள்ளது. இது சொகுசான பயண அனுபவத்தை வழங்குவதால்தான், பிரபலங்கள் பலரும் இந்த காரில் பயணம் செய்வதை விரும்புகின்றனர்.

More from DriveSpark

Article Published On: Thursday, July 3, 2025, 14:30 [IST]
English summary
Shruti haasan spotted in bmw 7 series 740d m sport worth rs 2 40 crore viral video
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+