தமிழ் சினிமால பழம் தின்னு கொட்டை போட்டவரின் பொண்ணா இது! கார் கதவை திறந்து விடலாம் ஆள் வெச்சிருக்காங்க!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் சொகுசு கார்களில் ஒன்று பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் (BMW 7 Series). குறிப்பாக திரையுலக நட்சத்திரங்கள் பலரும் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரை வைத்துள்ளனர். இதன்படி ஷாருக்கான் (Shah Rukh Khan), சஞ்சய் தத் (Sanjay Dutt), சயீஃப் அலி கான் (Saif Ali Khan) மற்றும் ஆலியா பட் (Alia Bhatt) போன்ற திரையுலக நட்சத்திரங்கள் பலரிடமும், பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் சொகுசு கார் இருந்து வருகிறது.

அத்துடன் சச்சின் டெண்டுல்கர் (Sachin Tendulkar) மற்றும் வீரேந்திர சேவாக் (Virender Sehwag) போன்ற கிரிக்கெட் வீரர்களும் கூட பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரை வைத்துள்ளனர். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மொத்தம் 2 வேரியண்ட்களில் (Variants) இந்த கார் விற்பனை செய்யப்படுகிறது.

Shruti Haasan Spotted In BMW 7 Series

அவை 7 Series 740i M Sport மற்றும் 7 Series 740d M Sport ஆகியவை ஆகும். இதில், 7 Series 740d M Sport வேரியண்ட்டை ஸ்ருதி ஹாசன் (Shruti Haasan) வைத்துள்ளார். பிரபல நடிகையான இவர், நடிகர் கமல்ஹாசனின் (Kamal Haasan) மகள் ஆவார். ஸ்ருதி ஹாசன் தமிழ் மட்டுமல்லாது, ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

எனவே மும்பை (Mumbai) மற்றும் ஹைதராபாத் (Hyderabad) போன்ற இடங்களில் ஸ்ருதி ஹாசனை அடிக்கடி காண முடியும். இந்த வரிசையில் மும்பையின் அந்தேரி பகுதியில் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரின் 7 Series 740d M Sport வேரியண்ட்டில் ஏறி சென்றபோது எடுக்கப்பட்ட ஸ்ருதி ஹாசனின் வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

Shruti Haasan

யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோவில், ஒரு கட்டிடத்தின் உள்ளே இருந்து வெளியே வரும் ஸ்ருதி ஹாசன், பாதுகாவலர் கார் கதவை திறந்து விட, அதில் ஏறுவதை நாம் காணலாம். ஸ்ருதி ஹாசன் வைத்துள்ள இந்த காரின் தற்போதைய எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) 1.84 கோடி ரூபாய் ஆகும்.

ஆன்-ரோடு விலை (On-Road Price) சுமார் 2.33 கோடி ரூபாய் வரும். மிகவும் விலை உயர்ந்த இந்த காரில், 3.0 லிட்டர் 6 சிலிண்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 286 பிஎஸ் பவர் மற்றும் 650 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் உடன் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் 200 என்எம் டார்க் திறன் கூடுதலாக கிடைக்கும். மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் (Mercedes Benz S-Class) மற்றும் ஆடி ஏ8எல் (Audi A8L) ஆகிய கார்களுடன், பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் போட்டியிட்டு வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார், சொகுசு செடான் (Luxury Sedan) ரகத்தை சேர்ந்தது. மிகவும் சொகுசான பயண அனுபவத்தை எதிர்பார்க்க கூடிய கோடீஸ்வரர்களுக்கு பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார் ஏற்றது என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

More from DriveSpark

Article Published On: Friday, February 7, 2025, 12:21 [IST]
English summary
Shruti haasan spotted in bmw 7 series luxury sedan viral video all details here
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+