சும்மா நின்ன கார் மேல ஏறி குறும்பு செஞ்சது இவ்ளோ பெரிய ஆளா! சுத்தி இருந்த எல்லாரும் ஆன்னு வாயை பொளந்துட்டாங்க!

இந்திய கிரிக்கெட் உலகில் தற்போது அதிகம் பேசப்படும் நபர்களில் ஒருவராக சுப்மான் கில் (Shubman Gill) மாறியுள்ளார். தற்போது ஐபிஎல் (IPL) தொடரில், குஜராத் டைட்டன்ஸ் (Gujarat Titans) அணிக்காக சுப்மான் கில் விளையாடி கொண்டுள்ளார். 23 வயதே நிரம்பிய சுப்மான் கில், கிரிக்கெட் களத்தில் எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ கூடியவர்.

கிரிக்கெட் களத்தை விட்டு வெளியே வந்து விட்டால், பல சேட்டைகளை செய்ய கூடியவராக சுப்மான் கில் அறியப்படுகிறார். இதை நிரூபிக்கும் வகையில், சமீபத்தில் கார் ஒன்றின் மீது நின்று கொண்டு, ஸ்பைடர்மேன் போல சுப்மான் கில் போஸ் கொடுத்துள்ளார். அதை பற்றிய தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.

Shubman Gill Poses Like Spiderman On Toyota Camry

'ஸ்பைடர்மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர்-வெர்ஸ்' (Spider-Man: Across the Spider-Verse) என்ற திரைப்படம் வரும் ஜூன் 2ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இதன் ட்ரெய்லர் (Trailer) ரிலீஸ் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுப்மான் கில் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சிக்கு, பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் (BMW 5 Series) காரில் சுப்மான் கில் வந்தார். இது செடான் (Sedan) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். அந்த காரை விட்டு கீழே இறங்கியதும், அங்கு ஏற்கனவே நிறுத்தப்பட்டிருந்த டொயோட்டா கேம்ரி (Toyota Camry) காரின் மேற்கூரை மீது சுப்மான் கில் ஏறினார்.

இதை யாருமே எதிர்பார்க்கவில்லை. எனவே சுப்மான் கில்லின் செய்கையை பார்த்து, அங்கிருந்த பலரும் வாயை பிளந்து விட்டனர். இதற்கு நடுவே, சூப்பர் ஹீரோ ஸ்பைடர்மேன் போல சுப்மான் கில் போஸ் கொடுக்க தொடங்கினார். அங்கிருந்த பலரும் இதனை வீடியோ (Video) எடுத்தனர்.

அந்த வைரல் வீடியோவை (Viral Video) இந்த செய்தியின் கடைசியில் நீங்கள் காணலாம். சுப்மான் கில் இவ்வளவு சேட்டைகளை செய்ய கூடிய நபரா? என்ற ஆச்சரியத்தை இந்த வீடியோ நமக்கு ஏற்படுத்துகிறது. இதற்கிடையே சற்று நேரத்தில் காரின் மேற்கூரையில் இருந்து கீழே இறங்கிய சுப்மான் கில் ட்ரெய்லர் ரீஸில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்று விட்டார்.

இதை சாரா டெண்டுல்கர் (Sara Tendulkar) பார்த்தால் என்ன ஆகும்? என நெட்டிசன்கள் கிண்டலாக கேள்வி எழுப்பி வருகின்றனர். சச்சின் டெண்டுல்கர் (Sachin Tendulkar) மகள் சாரா டெண்டுல்கரும், சுப்மான் கில்லும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் இதை யாரும் இன்னும் உறுதி செய்யவில்லை.

எனவேதான் நெட்டிசன்கள் பலர் இப்படி கிண்டலாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். சரி, அது எதற்கு நமக்கு? இந்தியாவின் மற்ற கிரிக்கெட் வீரர்களை போலவே, சுப்மான் கில்லும் கார்களை அதிகம் நேசிக்க கூடியவர். அவரிடம் மஹிந்திரா தார் (Mahindra Thar) மற்றும் ரேஞ்ச் ரோவர் வெலார் (Range Rover Velar) உள்ளிட்ட கார்கள் இருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இதுபோன்ற சேட்டைகளை உங்கள் காரில் நீங்கள் செய்ய வேண்டாம். ஏனெனில் மேற்கூரை டெண்ட் (Dent) ஆகலாம். இளைஞர் ஒருவர் ஏறி உட்கார்ந்த காரணத்தால், டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta) காரின் மேற்கூரை டெண்ட் ஆன வீடியோ ஒன்று கடந்த சில மாதங்களுக்கு வெளியானதை உங்களுக்கு நினைவு கூற நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

More from DriveSpark

Article Published On: Friday, May 19, 2023, 18:20 [IST]
English summary
Shubman gill poses like spiderman on toyota camry viral video know all details here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+