சுப்மன் கில் இவ்ளோ காஸ்ட்லியான காருல வருவாருனு யாருமே எதிர்பாக்கல! விருதை வாங்கின கையோடு போயி வாங்கி இருப்பாரோ

பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரர் விருதை சுப்மன் கில்-க்கு ஐசிசி சமீபத்தில் வழங்கியது. 2025 சாம்பியன்ஸ் டிராஃபி தொடரை முன்னிட்டு, அனைத்து அணியைச் சேர்ந்த ஆட்ட வீரர்களும் ஒரு நாள் தொடரில் ஈடுபட்டனர். இதில் சிறப்பாக சுப்மன் கில் செயல்பட்டதை அடுத்தே இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை அவர் மூன்றாவது முறையாக பெருகின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், மாதாந்திர ஒரு நாள் போட்டி விருதை அதிகம் வென்றவர்களில் ஒருவராக சுப்மன் கில் தற்போது மாறி இருக்கின்றார்.

இந்த நிலையிலேயே அவர் சார்ந்த ஓர் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. மிகவும் காஸ்ட்லியான காரில் சுப்மன் கில் மும்பையில் வலம் வரும் வீடியோவே அது ஆகும். கிரிக்கெட் விளையாட்டு வீரர் பயணித்தது மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz) நிறுவனத்தின் ஜி 350 டி (G 350d) சொகுசு கார் மாடல் ஆகும்.

Shubman gill spotted in mercedes g350d

இந்த காரின் இந்திய மதிப்பு ரூ. 2.07 கோடி ஆகும். இத்தகைய மிகவும் காஸ்ட்லியான காரிலேயே மும்பையில் காட்சி தந்திருக்கின்றார் சுப்மன் கில். மிகவும் அதிக ஆற்றல் மற்றும் அதிக லக்சூரி அம்சங்களைத் தங்கிய ஓர் எஸ்யூவி ரக கார் மாடலே இதுவாகும்.

இதுமட்டும் அல்ல அதிக கவர்ச்சியான தோற்றத்தைக் கொண்ட கார் மாடலாகவும் இது உள்ளது. இதன் வெளிப்புறத்தை மிகவும் அழகாக காண்பிப்பதற்காக அதிக கவர்ச்சியான ஹெட்லைட், கிரில், கட்டுமஸ்தான பாடி பேனல்கள் உள்ளிட்டவற்றை பென்ஸ் நிறுவனம் பயன்படுத்தி இருக்கின்றது. இதை போலவே அதன் உட்பக்கமும் அதிக ஆடம்பரம் மற்றும் பிரீமியம் லுக்கைக் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது.

இதனால்தான் பணக்காரர்களின் பிரியமான கார் மாடலாக இது இருக்கின்றது. இந்த கார் மாடலில் 3.0 லிட்டர் இன்லைன்-6 வகை டீசல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கும். இது அதிகபட்சமாக 286 எச்பி மற்றும் 600 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்டது என்பது கவனிக்கத்தகுந்தது.

9 ஸ்பீடு டார்க் கன்வெர்டரே இந்த மோட்டாருடன் பொருத்தப்பட்டு இருக்கின்றது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 200 கிமீட்டருக்கும் அதிகம் ஆகும். அதேவேளையில், இதற்கு பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்ட வெறும் 7.4 செகண்டுகளே போதுமானது.

ஆனால், மைலேஜ் விஷயத்தில் இந்த கார் மிகவும் குறைவாகவே வழங்கும். லிட்டர் ஒன்றிற்கே 10 கிலோ மீட்டர் வரை மட்டுமே அது மைலேஜை தரும் என்பது கவனிக்கத்தகுந்தது. அதேவேளையில், லக்சூரி டிராவல் அனுபவத்தை வழங்குவதில் இந்த கார் சிறந்த ஒன்றாகக் காட்சியளிக்கின்றது.

குறிப்பாக, இந்த காருக்குள் அமர்ந்திருக்கும்போது வெளிப்புறத்தில் இருக்கும் இரைச்சல்கள் கொஞ்சம்கூட இருக்காது. இத்துடன், ஆஃப்-ரோடு டிராவலை ரம்மியமானதாக மாற்றக் கூடிய அம்சங்களையும் இந்த காரில் மிக தாராளமாக மெர்சிடிஸ் பென்ஸ் வழங்கி இருக்கின்றது. வைப்ரேஷன் மற்றும் பெரிய அளவில் குலுங்கல் உள்ளிட்டவை இருக்காத வண்ணமே இதனை தயார் செய்திருக்கின்றனர்.

Take a Poll

ஆகையால், இந்தியாவின் கரடு - முரடான பாதைகளுக்கு ஏற்ற வாகனமாக இது உள்ளது. இத்தகைய அம்சங்களைத் தாங்கி இருக்கின்ற காரணத்தினாலேயே சுப்மன் கில் போன்ற பிரபலங்கள் மற்றும் பெரும் இந்திய பணக்காரர்கள் மெர்சிடிஸ் பென்ஸ் ஜி350 டி காரை பயன்படுத்திக் கொண்டு இருக்கின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கிரிக்கெட் விளையாட்டு வீரர் சுப்மன் கில் இடத்தில் இருக்கும் ஆடம்பர வகை கார் மாடல்களில் இந்த பென்ஸ் காரும் ஒன்றாகும். இந்த கார் மாடல் விருது பெற்றதை முன்னிட்டு வாங்கப்பட்ட புத்தம் புதிய கார் மாடல் அல்ல. அவரிடத்தில் சமீப சில காலமாகவே பயன்பாட்டில் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆமாங்க, அவர் இந்த காரை எப்போதோ வாங்கிவிட்டார்.

FAQs
இந்த காருக்கு இந்தியாவில் ஃபேன்கள் அதிகமாமே

ஆமாம் நிறைய ஃபேன்கள் இந்த காருக்கு இந்தியாவில் இருக்கின்றனர். அதேநேரத்தில் அம்பானியோ இந்த காரை தன்னுடைய கான்வாய் வாகனமாக பயன்படுத்தி வருகின்றார். அதிக எண்ணிக்கையில் இது செக்யூரிட்டி வாகனமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்த கார் ஆஃப்-ரோடை சமாளிக்குமா?

இதில் எந்த சந்தேகமும் வேண்டாம். பாலை வனமாகவே இருந்தாலும் இந்த கார் மாடல் திறம்பட சமாளிக்கும். குறிப்பாக, காடு, மலை மேடு உள்ளிட்டவற்றையும் இது சமாளிக்கும்.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜி 350 டி சொகுசு காருக்கு போட்டியாளரே இல்லையா?

ஆம், இந்த காருக்கு நேரடி போட்டியாளர் என்று யாரும் இல்லை. இருப்பினும், லேண்ட் ரோவர் டிஃபெண்டர் மற்றும் டொயோட்டா லேண்ட் க்ரூஸர் உள்ளிட்டவை போட்டியாளர்களாக இருக்கின்றனர்.

DriveSpark Automotive

More from DriveSpark

Article Published On: Friday, March 14, 2025, 11:40 [IST]
English summary
Shubman gill spotted in mercedes g350d luxury suv car in mumbai
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+