அப்பா வயசு நடிகரை அழகில் மயக்கிய மேக்-அப் ஆர்டிஸ்ட்! சின்ன வயசுலயே 1 கோடி ரூபா சொகுசு கார்ல போறாங்க!

இந்தியாவில் செல்வந்தர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மெர்சிடிஸ் பென்ஸ் இ-க்ளாஸ் (Mercedes-Benz E-Class). இது சொகுசு செடான் (Luxury Sedan) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். சொகுசு மற்றும் செயல்திறன் என இரண்டும் கலந்த கலவையாக இருப்பதால், விலை உயர்ந்தது என்ற போதிலும் கூட, செல்வந்தர்கள் மெர்சிடிஸ் பென்ஸ் இ-க்ளாஸ் காரை அதிகளவில் வாங்கி வருகின்றனர். குறிப்பாக இது பாலிவுட் திரையுலக நட்சத்திரங்கள் விரும்பி பயணம் செய்யும் கார்களில் ஒன்றாக இருக்கிறது.

அமிதாப் பச்சன் (Amitabh Bachchan), சல்மான் கான் (Salman Khan), சயீஃப் அலி கான் (Saif Ali Khan), பிரியங்கா சோப்ரா (Priyanka Chopra) மற்றும் ராணி முகர்ஜி (Rani Mukerjee) போன்ற உச்ச நட்சத்திரங்கள் பலரிடமும் மெர்சிடிஸ் பென்ஸ் இ-க்ளாஸ் சொகுசு கார் உள்ளது.

Shura Khan Spotted In Mercedes Benz E-Class

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் 78.50 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில் மெர்சிடிஸ் பென்ஸ் இ-க்ளாஸ் கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் இந்த காருடைய டாப் வேரியண்ட்டின் விலையோ 92.50 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

இவ்வளவு விலை உயர்ந்த காரை நாங்கள் மேலே குறிப்பிட்ட பிரபலங்களுடன் சேர்த்து, சுரா கானும் (Shura Khan) வைத்துள்ளார். இவர் பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமாக உள்ள நடிகர் மற்றும் தயாரிப்பாளரான அர்பாஸ் கானின் (Arbaaz Khan) 2வது மனைவி ஆவார்.

Mercedes Benz E-Class

பிரபல பாலிவுட் நடிகையான மலாய்கா அரோராதான் (Malaika Arora), அர்பாஸ் கானின் முதல் மனைவி ஆவார். இவர்கள் இருவருக்கும் கடந்த 1998ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இதன் பின் கடந்த 2017ம் ஆண்டு அவர்கள் இருவரும் விவாகரத்து பெற்றனர். இதை தொடர்ந்து கடந்த 2023ம் ஆண்டில் சுரா கானை, அர்பாஸ் கான் 2வது திருமணம் செய்து கொண்டார்.

சுரா கான் உடன் 2வது திருமணம் நடைபெற்றபோது, அர்பாஸ் கானின் வயது 55 ஆகும். தற்போது 57 வயதாகும் அர்பாஸ் கான், பாலிவுட் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான சல்மான் கானின் (Salman Khan) சகோதரர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

அர்பாஸ் கானின் மனைவி மெர்சிடிஸ் பென்ஸ் இ-க்ளாஸ் காரில் பொது இடங்களுக்கு அடிக்கடி வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த வரிசையில் மும்பையில் (Mumbai) பொது இடம் ஒன்றுக்கு மெர்சிடிஸ் பென்ஸ் இ-க்ளாஸ் காரில் சுரா கான் வந்தபோது எடுக்கப்பட்ட வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

இந்த வீடியோ மும்பையின் பாந்த்ரா பகுதியில் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த நிகழ்ச்சிக்காக அவர் வந்தார்? என்பது சரியாக தெரியவில்லை. இந்த வீடியோவில் கார் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு அருகே ஒரு பெட்டி கடையை மட்டும் நம்மால் காண முடிகிறது. அனேகமாக தனது சொந்த வேலைக்காக அவர் வந்து சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது.

சுரா கான் முதலில் வேலை முடிந்ததும், காரில் ஏறி புறப்பட தயாராகி விட்டார். எனினும் அங்கு இருந்தவர்கள் கேட்டு கொண்டதால், காரை விட்டு இறங்கி வந்து, புகைப்படம் மற்றும் வீடியோக்களுக்கு போஸ் கொடுத்து விட்டு சென்றார். மெர்சிடிஸ் பென்ஸ் இ-க்ளாஸ் காரில் சுரா கான் பொது இடங்களுக்கு வருவது இது முதல் முறை கிடையாது.

கடந்த காலங்களிலும் அவர் பலமுறை பொது இடங்களுக்கு இதே காரில் வந்து சென்றுள்ளார். இது சொகுசு வசதிகள் நிரம்பிய கார்களில் ஒன்றாகும். இந்த காரின் முன் பக்க டேஷ்போர்டில் மொத்தம் 3 திரைகள் வழங்கப்பட்டுள்ளன. அவை 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் 14.4 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகியவை ஆகும்.

இதுதவிர முன் பக்கத்தில் அமரும் பயணிக்காகவும் 12.3 இன்ச் அளவில் ஒரு திரை வழங்கப்பட்டுள்ளது. ஆக மொத்தத்தில் முன் பகுதியில் மட்டும் மொத்தம் 3 திரைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவை எல்லாம் தவிர முன் பக்க இருக்கைகளுக்கு மெமரி வசதி, பனரோமிக் சன்ரூஃப் மற்றும் 64 கலர் ஆம்பியண்ட் லைட்டிங் போன்ற வசதிகளும் கூட இந்த காரில் உள்ளன.

அத்துடன் அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) பாதுகாப்பு தொகுப்பு, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், 8 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, முன் மற்றும் பின் பகுதியில் பார்க்கிங் சென்சார்கள் போன்ற வசதிகளும் மெர்சிடிஸ் பென்ஸ் இ-க்ளாஸ் காரில் வழங்கப்பட்டுள்ளன.

செயல்திறனை பொறுத்தவரையில், 2.0 லிட்டர் மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின், 2.0 லிட்டர் மைல்டு ஹைப்ரிட் டீசல் இன்ஜின் மற்றும் 3.0 லிட்டர் மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் என மெர்சிடிஸ் பென்ஸ் இ-க்ளாஸ் சொகுசு காரில், மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: அதிநவீன சொகுசு மற்றும் பாதுகாப்பு வசதிகள் நிரம்பிய, அதே நேரத்தில் சௌகரியமான பயணத்தை வழங்க கூடிய மற்றும் நல்ல பிராண்ட் இமேஜ் உடன் கூடிய ஒரு சொகுசு செடான் காரை வாங்க வேண்டும் என நினைத்து கொண்டுள்ள செல்வந்தர்களுக்கு, சுரா கான் பயன்படுத்திய மெர்சிடிஸ் பென்ஸ் இ-க்ளாஸ் நல்ல ஆப்ஷன் ஆகும்.

சுரா கான் பயன்படுத்தி வருவது மெர்சிடிஸ் பென்ஸ் இ-க்ளாஸ் காரின் எந்த வேரியண்ட்? என்பது சரியாக தெரியவில்லை. ஒரு வேளை அது இந்த காரின் டாப் வேரியண்ட்டாக இருக்கும்பட்சத்தில், அதன் ஆன்-ரோடு விலை (On-Road Price) சுமார் 1.07 கோடி ரூபாய் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

சுரா கானுக்கு தற்போது 35 வயது மட்டுமே ஆகிறது. ஆனால் அவரது கணவர் அர்பாஸ் கானுக்கு 57 வயதாகிறது. இருவருக்கும் இடையேயான வயது வித்தியாசம் 22 வருடங்கள் ஆகும். அவர்களின் திருமணத்தின்போது, இந்த வயது வித்தியாசம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இருப்பினும் வயது என்பது வெறும் எண்கள் மட்டுமே எனக்கூறி, சுரா கான் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

அர்பாஸ் கானின் மனைவி சுரா கான் அடிப்படையில் ஒரு மேக்-அப் ஆர்டிஸ்ட் (Make-up Artist) ஆவார். தனது மனைவி சுரா கானின் அழகு தன்னை தொடர்ந்து ஆச்சரியப்படுத்துவதாக கடந்த காலங்களில் அர்பாஸ் கான் கூறியுள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Monday, February 3, 2025, 12:56 [IST]
English summary
Shura khan spotted in mercedes benz e class luxury sedan viral video all details here
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+