இவரு வாங்கீட்டாரா! அம்பானியே இந்த காரை வாங்கறதுனா ஒரு தடவைக்கு 2 தடவை யோசிப்பாரு! ஏன்னா அவ்ளோ காஸ்ட்லி!
இந்தியாவில் பாலிவுட் (Bollywood) பிரபலங்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் (Land Rover Range Rover Sport). இது சொகுசு எஸ்யூவி (Luxury SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும்.
அனிமல் திரைப்படத்தில் கலக்கிய பாபி தியோல் (Bobby Deol), பாடகர் கைலாஷ் கெர் (Kailash Kher) உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரை சொந்தமாக வைத்துள்ளார். டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கூட, இவர்களது லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் கார்கள் குறித்த செய்திகளை வாசகர்களுக்கு வழங்கியுள்ளது.

இந்த வரிசையில் மற்றொரு பிரபலம் ஒருவர் லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரின் உரிமையாளர்கள் கிளப்பில் இணைந்துள்ளார். பாலிவுட் நடிகர் சித்தாந்த் சதுர்வேதிதான் (Siddhant Chaturvedi) அவர். மும்பையில் (Mumbai) உள்ள ஷோரூமிற்கு அவர் குடும்பத்துடன் சென்று, லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரை டெலிவரி எடுத்துள்ளார்.
அந்த வைரல் புகைப்படங்கள் (Viral Pics) சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகின்றன. சித்தாந்த் சதுர்வேதி தேர்வு செய்திருப்பது, லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரின், 3.0 லிட்டர் வி6 டீசல் இன்ஜின் (Diesel Engine) பொருத்தப்பட்ட ஆட்டோபயோகிராபி (Autobiography) வேரியண்ட் ஆகும்.

அதிகபட்சமாக 350 பிஎஸ் பவர் மற்றும் 700 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலையே (Ex-Showroom Price) 1.87 கோடி ரூபாய் ஆகும். ஆன்-ரோடு விலை (On-Road Price) தோராயமாக 2.20 கோடி ரூபாய் வரும்.
விலை உயர்ந்த காராக இருந்தாலும் கூட, மெரிடியன் (Meridian) நிறுவனத்தின் 35 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் போன்ற பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர இன்ஜின் சத்தம், டயர் சத்தம் மற்றும் சாலையில் ஏற்படக்கூடிய சத்தம் ஆகியவற்றை நீக்க கூடிய தொழில்நுட்பமும் இந்த காரின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாகும்.
அத்துடன் ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, மல்டி-ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், 4 ஸ்போக் ஸ்டியரிங் வீல் மற்றும் பின் இருக்கைகளில் என்டர்டெயின்மெண்ட் சிஸ்டம் போன்ற வசதிகளையும் நாங்கள் இங்கே கண்டிப்பாக குறிப்பிட்டாக வேண்டும். இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து, இந்த காரில் பயணிக்க கூடிய பயணிகளுக்கு சொகுசான அனுபவத்தை வழங்குகின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சொகுசான பயணத்தை வழங்குவதால்தான், பாலிவுட் பிரபலங்கள் பலரும், லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரை தேர்வு செய்கின்றனர். இந்த வரிசையில்தான் சித்தாந்த் சதுர்வேதியும் தற்போது லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரை வாங்கியுள்ளார். அவரது பயணம் பாதுகாப்பாக அமைய வாழ்த்துக்கள்.


Click it and Unblock the Notifications








