விஜய் வந்தா கூட இவ்ளோ கூட்டம் கூடாது! ரசிகர்கள் காருக்கு உள்ளயே ஏறீட்டாங்க! மொத்த ஊரையும் மிரள விட்டது அவரா!

திரையுலக நடிகர், நடிகைகள் பொது இடங்களுக்கு வரும்போது, அவர்களை காண பெரிய கூட்டம் கூடி விடுகிறது. இதற்கு உதாரணமாக கடந்த காலங்களில் ஏராளமான சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. இந்த வரிசையில் பிரபலமான நடிகர் ஒருவர் தற்போது பொது இடத்திற்கு வந்தபோது, அவரது காரை ரசிகர்கள் பலர் விடாமல் துரத்தியுள்ளனர்.

அதில் ஒரு ரசிகர், நடிகருடன் பேசுவதற்காக, காருக்கு உள்ளேயே ஏறி விட்டார். இந்த வைரல் வீடியோ (Viral Video), சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. இன்ஸ்டன்ட் பாலிவுட் (Instant Bollywood) தளத்தில் இந்த வைரல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

Siddhant Chaturvedi Spotted In Toyota Innova Crysta

இந்த வைரல் வீடியோவில் நாம் பார்ப்பது, சித்தாந்த் சதுர்வேதி (Siddhant Chaturvedi) ஆவார். இவர் பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் நடிகர்களில் ஒருவர். இவர் சமீபத்தில் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி (Varanasi) நகருக்கு சென்றிருந்தார். அப்போது காரில் பயணம் செய்தபோதுதான், ரசிகர்கள் அவருடன் போட்டோ எடுக்கும் ஆர்வத்தில், காரை விரட்டியுள்ளனர்.

அதில் ஒரு ரசிகர் மட்டும், எப்படியோ காருக்கு உள்ளே ஏறி விட்டார். சித்தாந்த் சதுர்வேதி அனுமதியுடனே அவர் காருக்கு உள்ளே ஏறியதை போல் தெரிகிறது. பின்னர் அவருடன், சித்தாந்த் சதுர்வேதி பேசி கொண்டு வருவதை நம்மால் இந்த வைரல் வீடியோவில் பார்க்க முடிகிறது.

Toyota Innova Crysta

இந்த வைரல் வீடியோவில் நாம் பார்ப்பது டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta) போல் தெரிகிறது. இந்த வைரல் வீடியோவில், காரின் வெளிப்புறத்தை நம்மால் பார்க்க முடியவில்லை. இருப்பினும் உட்புறத்தை வைத்து பார்க்கும்போது, இது டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காராக இருக்கலாம்.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில், டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 18,65,700 ரூபாயாக இருக்கிறது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 25,36,200 ரூபாயாக உள்ளது. இவை டொயோட்டா இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரானது, சற்று விலை உயர்ந்த ஒன்றாக இருந்தாலும் கூட, வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக கருதப்படுகிறது. தற்போதைய நிலையில் 7 சீட்டர் மற்றும் 8 சீட்டர் ஆப்ஷன்களில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார், எம்பிவி (MPV) ரகத்தை சேர்ந்தது. இது சௌகரியமான பயணங்களுக்கு புகழ் பெற்றது ஆகும். சௌகரியமாக பயணம் செய்ய முடியும் என்பதால், மிகவும் பிரபலமான திரையுலக நட்சத்திரங்கள் கூட, டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரை பயன்படுத்தி வருகின்றனர்.

இதற்கு அமிதாப் பச்சன் (Amitabh Bachchan) ஒரு உதாரணம். அமிதாப் பச்சன் தவிர, பாலிவுட் நடிகை, டான்சர் மற்றும் மாடல் என பல முகங்களை கொண்டுள்ள மலாய்கா அரோராவிடமும் (Malaika Arora) கூட, டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் உள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

செயல்திறனை பொறுத்தவரையில், டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரில், 2.4 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரில் தற்போது பெட்ரோல் இன்ஜின் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் இல்லை.

இருப்பினும் வெய்கில் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அஸிஸ்ட் கண்ட்ரோல், இபிடி உடன் ஏபிஎஸ், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், டிரைவர் இருக்கையின் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும் வசதி, புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் வயர்லெஸ் செல்போன் சார்ஜர் என ஏராளமான வசதிகளை டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் கொண்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 30, 2025, 14:52 [IST]
English summary
Siddhant chaturvedi spotted in toyota innova crysta viral video check all details here
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+