அடையாளமே தெரியல! 3 கோடி ரூபா கார்ல ஜோடியா வந்தது அவங்களா! எத்தன பேர் கண்ணு பட்டுச்சோ தெரியல!

இந்தியாவில் ரேஞ்ச் ரோவர் (Range Rover) கார்களுக்கு, மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. குறிப்பாக பாலிவுட் பிரபலங்கள் பலரும் ரேஞ்ச் ரோவர் கார்களை சொந்தமாக வைத்துள்ளனர். இந்த வரிசையில் மிகவும் பிரபலமான பாலிவுட் தம்பதி ஒன்று தற்போது ரேஞ்ச் ரோவர் காரை வாங்கியுள்ளனர். சித்தார்த் மல்ஹோத்ரா (Siddharth Malhotra) - கியாரா அத்வானி (Kiara Advani) தம்பதியை பற்றிதான் நாங்கள் இங்கே பேசி கொண்டுள்ளோம். நீண்ட வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் இருவரும், கடந்த 2023ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

அவர்களிடம் ஏற்கனவே பல்வேறு விலை உயர்ந்த கார்கள் இருக்கும் நிலையில் தற்போது புதிதாக ரேஞ்ச் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி எல்டபிள்யூபி (Range Rover Autobiography LWB) காரை வாங்கியுள்ளனர். இந்த காரில் அவர்கள் இருவரும் வந்த வைரல் வீடியோ (Viral Video) ஒன்று தற்போது வேகமாக பரவி வருகிறது.

Siddharth Malhotra - Kiara Advani Spotted In Range Rover

இந்த வைரல் வீடியோவில், சித்தார்த் மல்ஹோத்ராவும், அவரது மனைவி கியாரா அத்வானியும் புதிதாக வாங்கிய ரேஞ்ச் ரோவர் காரில், அவர்களுடைய வீட்டிற்கு வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. சித்தார்த் மல்ஹோத்ரா காரை ஓட்ட, அவரது மனைவி கியாரா அத்வானி அருகே அமர்ந்துள்ளார்.

சித்தார்த் மல்ஹோத்ரா - கியாரா அத்வானி வாங்கியுள்ள புதிய ரேஞ்ச் ரோவர் காரில், 3.0 லிட்டர் 6 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 392 பிஹெச்பி பவர் மற்றும் 550 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

Range Rover

இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலையே (Ex-showroom Price) 2.60 கோடி ரூபாய் வருகிறது. ஆன்-ரோடு விலை (On-road Price) தோராயமாக 3.25 கோடி ரூபாய் வரும். விலை உயர்ந்தது என்றாலும் கூட, அதற்கு ஏற்ப பல்வேறு அதிநவீன வசதிகள் எல்லாம் இந்த ரேஞ்ச் ரோவர் காரில் கொடுக்கப்பட்டுள்ளன.

இதில், 13.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 13.7 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 1600W மெரிடியன் சவுண்ட் சிஸ்டம், PM 2.5 ஏர் ஃபில்டர் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும். நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி சித்தார்த் மல்ஹோத்ரா - கியாரா அத்வானி தம்பதியிடம் ஏற்கனவே நிறைய விலை உயர்ந்த கார்கள் இருக்கின்றன.

இதில், ரேஞ்ச் ரோவர் வோக் (Range Rover Vogue), மெர்சிடிஸ் மேபெக் எஸ்580 (Mercedes Maybach S580), மெர்சிடிஸ் பென்ஸ் இ-க்ளாஸ் (Mercedes Benz E-Class) மற்றும் ஆடி ஏ8 (Audi A8) போன்றவை எல்லாம் மிகவும் முக்கியமானவை. அத்துடன் ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாப் (Harley Davidson Fat Bob) பைக் ஒன்றும் கூட அவர்களிடம் உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: லெக்ஸஸ் எல்எக்ஸ் (Lexus LX) மற்றும் மெர்சிடிஸ் மேபெக் ஜிஎல்எஸ் 600 (Mercedes Maybach GLS 600) ஆகிய கார்களுக்கு எல்லாம், மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக ரேஞ்ச் ரோவர் திகழ்கிறது என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

More from DriveSpark

Article Published On: Thursday, September 5, 2024, 17:59 [IST]
English summary
Siddharth malhotra kiara advani spotted in range rover viral video
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+