கப்பல்னே சொல்லலாம்.. 3.05 கோடி ரூபா கார வாங்கி ஒட்டுமொத்த பாலிவுட் திரை உலகையும் திரும்பி பார்க்க செஞ்சுட்டாரு
'யப்பா, யாருய்யா இந்த நடிகர்.. இவ்ளோ விலை உயர்ந்த காரை வாங்கியிருக்காரு' என கேட்கும் அளவிற்கு மிக மிக விலை உயர்ந்த காரை பாலிவுட் திரை உலகைச் சேர்ந்த நடிகர் ஒருவர் வாங்கி இருக்கின்றார். இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மிக மிக விலை உயர்ந்த கார் மாடல்களில் லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராஃபி (Land Rover Range Rover Autobiography)-யும் ஒன்றாகும். இந்த காரையே பாலிவுட்டின் உச்ச நடிகர் ஒருவர் வாங்கி இருக்கின்றார். சித்தார்த் மல்ஹோத்ரா, இவரே அந்த காரை வாங்கியவர் ஆவார்.
இந்த கார் மாடலின் ஒரே ஒரு யூனிட்டின் விலை மட்டுமே ரூ. 3.05 கோடிக்கும் அதிகம் ஆகும். இத்தகைய அதிகபட்ச விலையைக் கொண்ட காரை அவர் வாங்கியுள்ளார். இதனாலேயே பலரும் அவரை தற்போது வியந்து பார்க்கத் தொடங்கி இருக்கின்றனர். இதுபோன்ற ஆடம்பர கார்களை வைத்திருப்பதை பலரும் தங்களுக்கு சமூகத்தில் மிகப் பெரிய அந்தஸ்தை ஏற்படுத்திக் கொடுக்கும் என நம்புகின்றனர்.

இதுமாதிரியான காரணங்களாலேயே செல்வம் படைத்தவர்கள் விலையை பொருட்படுத்தாமல் ஆடம்பர கார்களை வாங்கிக் கொண்டிருக்கின்றனர். அதேவேளையில், ஒரு சிலர் சொகுசான ரைடு அனுபவத்திற்காக ஆடம்பர கார்களை வாங்கிக் கொண்டு உள்ளனர். இதில் எந்த காரணத்திற்காக மல்ஹோத்ரா இந்த காரை வாங்கினார் என்பது தெரியவில்லை.
இருப்பினும், இந்த காரை அவர் சொகுசான ரைடு அனுபவத்திற்காகவே வாங்கியிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கேற்ப, சொகுசு மற்றும் ஆடம்பர அம்சங்களுக்கு பெயர்போனதாக லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராஃபி காட்சியளிக்கின்றது. சொகுசு அம்சங்களை தாங்கியிருப்பதில் மட்டுமில்லைங்க, நவீன கால தொழில்நுட்ப வசதிகளையும் மிக தாராளமாக இந்த கார் தன்னுள் தாங்கியிருக்கும்.

அந்தவகையில், 13.2 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பிவி ப்ரோ ஓஎஸ் வசதியுடன் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது ஓர் அட்வான்ஸ்டு வசதிகளைத் தாங்கிய திரை ஆகும். இதுதவிர, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், வாய்ஸ் கமேண்ட்ஸ், ஹெட்-அப் திரை, 4 ஜோன் ஆட்டோமேட்டிக் எச்பிஏசி, டிஜிட்டல் ஆடியோ பிராட்காஸ்ட், வயர்லெஸ் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ சிஸ்டமும் இந்த காரில் இடம் பெற்றிருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.
இதுமட்டுமில்லைங்க, இந்த காரில் பிரீமியம் சவுண்டு சிஸ்டமான மெரிடியன் சவுண்டு சிஸ்டம், 24 வழிகளில் ஹீட் மற்றும் கூல் ஆக்கிக் கொள்ளும் வசதிக் கொண்ட இருக்கைகள் (முன் பக்கத்தில்) வழங்கப்பட்டு இருக்கும். இந்த இருக்கை மசாஜ் செய்யும் வசதிக் கொண்டதும் கூட.
இதுபோன்று இன்னும் பல ஸ்பெஷல் அம்சங்களை தாங்கியிருக்கின்ற காரணத்தினாலேயே லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராஃபிக்கு இந்தியர்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, திரையுலகைச் சேர்ந்தவர்கள் பலர் இந்த கார் மாடலின் மிகப் பெரிய ஃபேனாக இருக்கின்றனர்.
எஞ்சின் விஷயத்திலும் இந்த கார் மாடல் மிக சிறந்ததாகக் காட்சியளிக்கின்றது. அந்தவகையில், இந்த கார் மாடலில் இரண்டு விதமான எஞ்சின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. அவை, 4.4 லிட்டர் பெட்ரோல் மோட்டார் மற்றும் 3.0 லிட்டர் டீசல் ஆகும். இதில், 4.4லிட்டர் பெட்ரோல் மோட்டார் 523 பிஎஸ் மற்றும் 750 என்எம் டார்க்கையும், 3.0லிட்டர் டீசல் மோட்டார் 346 பிஎஸ் பவரையும், 700 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் என்பது கவனிக்கத்தகுந்தது.
இதில் மல்ஹோத்ரா வாங்கியிருப்பது 3.0 லிட்டர் பி400 இன்ஜெனியம் டர்போசார்ஜட் எஞ்சின் ஆகும். இது மைல்டு ஹைபிரிட் அம்சம் கொண்ட மோட்டார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இது வெறும் 5.9 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டிவிடும் என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் எனும் படத்தின் வாயிலாக இந்தி திரையுலகிற்கு அறிமுகமாகியவர் சித்தார்த் மல்ஹோத்ரா. 2012 ஆம் ஆண்டிலேயே இவர் தன்னுடைய திரைப் பயணத்தைத் தொடங்கினார். 12 ஆண்டுகள் ஆகிவிட்டன, அவர் தற்போது மிகப் பெரிய உச்சத்தை இந்த துறையில் எட்டியிருக்கின்றார். இந்த சூழலிலேயே அவர் தன்னுடைய பயணத்தை சொகுசானதாக மாற்றும் பொருட்டு ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராஃபி காரை வாங்கியிருக்கின்றார்.


Click it and Unblock the Notifications








