பட வாய்ப்பு கைய விட்டு நழுவிய நடிகைக்கு கார் பரிசு! கணவர் ஏன் இப்படி செஞ்சாரு தெரிஞ்சா எல்லாரும் பாராட்டுவீங்க
பிரபல பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா. இவரின் மனைவி கியாரா அத்வானி. இவரும் ஓர் மிகப் பெரிய பிரபலம் ஆவார். இவர்கள் இருவருக்கும் சீக்கிரமே குழந்தை பிறக்க இருக்கின்றது. ஆமாங்க, கியாரா அத்வானி தற்போது கருவுற்றிருக்கின்றார். இந்த நிலையிலேயே அவர் அலுங்காமல் குலுங்காமல் பயணிக்க வேண்டும் என்பதற்காக கணவர் சித்தார்த் மல்ஹோத்ரா புதிய ஆடம்பர காரை வாங்கி கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆடம்பர அம்சங்களுக்கு பெயர்போன கார் மாடலான டொயோட்டா வெல்ஃபையர் (Toyota Vellfire)-ரையே அவர் பரிசாக தந்திருக்கின்றார்.
இது ஓர் சொகுசு கப்பல் மாதிரியான எம்பிவி (MPV) ரக கார் மாடல் ஆகும். இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் மற்றும் முன்னணி நட்சத்திர நடிகர்கள் மத்தியிலும் இந்த காருக்கு மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இத்தகைய காரையே தன்னுடைய தன்னுடைய வாரிசை சுமந்துக் கொண்டிருக்கும் கியாரா அத்வானிக்காக தற்போது பரிசாக வாங்கிக் கொடுத்திருக்கின்றார்.

உருவத்தில் எப்படி பிரம்மிப்பை ஏற்படுத்தும் வகையில் இந்த கார் மாடல் இருக்கின்றதோ, அதைப்போலவே, சிறப்பம்சங்களைத் தங்கியிருப்பதிலும் நம்ம ஆச்சரியத்தின் உச்சிக்கே கொண்டு செல்லும் வகையில் இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. அந்த அளவிற்கு மிகவும் கம்போர்ட்டாக அமர்ந்து பயணிக்க ஏதுவான காரே இதுவாகும்.
4,995 மிமீ நீளம், 1,850 மிமீ அகலம் மற்றும் 1,950 மிமீ உயரம் என பிரமாண்ட அளவிலேயே இந்த எம்பிவி காரை டொயோட்டா தயார் செய்திருக்கின்றது. இதுவே ஓர் பெரிய குடும்பத்திற்குகூட ஏற்ற வாகனமாக அதனை காண்பிக்கின்றது. வீல்பேஸையும் இது 3,000 மிமீட்டராகக் கொண்டிருக்கின்றது.
ஆகையால், கரடு-முரடான சாலையாக இருந்தாலும் இந்த வாகனம் சமாளித்துவிடும். குறிப்பாக, மிக மோசமான சாலையில் பயணிக்கும்போதும் சௌகரியமான டிராவல் அனுபவத்தை வழங்கும் விதமாக அட்வான்ஸ்டு சஸ்பென்ஷன் செட்-அப்பை இந்த காரில் வழங்கி இருக்கின்றனர். இது பயணிகளுக்கு சாலையில் செல்லும்போது கப்பலில் மிதக்கின்ற மாதிரியான டிராவல் அனுபவத்தை வழங்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.
இதனாலேயே பணக்காரர்கள் பலரின் மனம் கவர்ந்த வாகனமாக டொயோட்டா வெல்ஃபையர் தற்போது மாறியிருக்கின்றது. இதுமட்டுமல்ல, இந்த காரில் ஏகப்பட்ட ஆடம்பர மற்றும் அட்வான்ஸ்டு பிரீமியம் அம்சங்களையும் மிக தாராளமாக டொயோட்டா வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், அடாஸ் (ADAS) அம்சம் கூட இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.

இதுமட்டுமல்ல, முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, வெண்டிலேட் மற்றும் சூடாகும் வசதிக் கொண்ட இருக்கைகள், எலெக்ட்ரிக்கல்லி அட்ஜெஸ்ட் செய்யும் வசதிக் கொண்ட ஸ்டியரிங் வீல் உள்ளிட்ட அம்சங்களும் வெல்ஃபையர் எம்பிவி காரில் இடம் பெற்றிருக்கின்றன.
இதுபோன்று இன்னும் பல ஆடம்பர அம்சங்கள் இந்த காரில் இடம் பெற்றிருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இதனால்தான் இந்த காரின் விலையும் கொஞ்சம் காஸ்ட்லியாக உள்ளது. இதன் ஆரம்ப விலையே ரூ. 1.22 கோடி ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
இரண்டு விதமான வேரியண்டுகளில் இந்த ஆடம்பர வாகனம் நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. எஞ்சினைப் பொருத்த வரை இந்த காரில் 2.5 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் மோட்டாரே, ஸ்ட்ராங் ஹைபிரிட் அம்சத்துடன் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது அதிக மைலேஜை வழங்கும் எஞ்சின் ஆகும். லிட்டர் ஒன்றிற்கே 19 கிமீ வரையில் அது மைலேஜை தரும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய நடிகர்களின் பிரியமான கார் மாடலாக டொயோட்டா வெல்ஃபையர் உள்ளது. இந்த காரை பயன்படுத்தாத உச்ச நட்சத்திரங்களே இருக்க முடியாது என கூறலாம். அந்த அளவிற்கே பல உச்ச நட்சத்திர நடிகர்கள் வெல்ஃபையர் எம்பிவி ஆடம்பர காரை பயன்படுத்தி வருகின்றனர். இவர்களின் வரிசையிலேயே தற்போது கியாரா அத்வானி இணைந்திருக்கின்றார்.
இவர் டான் 3 படத்தில் ரன்வீர் சிங் உடன் இணைந்து நடிக்கவிருந்தது. இந்த நிலையிலேயே அவர் கருவுற்றிருக்கின்றார். இதனால் தற்போது அவர் அந்த படத்தில் இருந்து விலகி இருக்கின்றார். மேலும், இவருக்கு பதிலாக அந்த இடத்தில் கிரித்தி சனோன் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையிலேயே அவருக்கு கார் பரிசளிப்பு செய்யப்பட்டு இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








