கல்யாணமாகி கொழந்த பொறந்த பிறகும் அழகுல எல்லாரயும் கெறங்கடிக்கறாங்க! ஒன்னே முக்கா கோடி ரூபா கார்ல போனது அவங்களா

இந்தியாவை பொறுத்தவரையில் திருமணம் நடந்து விட்டால், நடிகைகள் நடிப்பிற்கு முழுக்கு போட்டு விடுவது என்பது வழக்கமான ஒரு விஷயமாக உள்ளது. கிட்டத்தட்ட அனைத்து நடிகைகளும் திருமணம் முடிந்த கையோடு குழந்தை, குடும்பம் என 'செட்டில்' ஆகி விடுகின்றனர். ஒரு சில நடிகைகள் திருமணம் முடிந்து நீண்ட வருடங்களுக்கு பிறகு சினிமா துறையில் மீண்டும் 'கம்பேக்' கொடுக்கின்றனர் என்பது தனிக்கதை. ஆனால் ஒரு சில நடிகைகள் மட்டும் விதிவிலக்காக திருமணம் முடிந்தாலும், திரைப்படங்களில் தொடர்ந்து நடிக்கின்றனர். குழந்தை பிறந்தாலும் கூட, தங்களது கரியருக்கு அவர்கள் பிரேக் விடுவதில்லை.

இதற்கு காஜல் அகர்வால் (Kajal Aggarwal) ஒரு உதாரணம். இவருக்கும், கௌதம் கிச்சுலு (Gautam Kitchlu) என்பவருக்கும், கடந்த 2020ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. தற்போது இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. ஆனால் திருமணம், குழந்தை ஆகிய காரணங்களுக்காக காஜல் அகர்வால் நடிப்பை நிறுத்தவில்லை.

Kajal Aggarwal Spotted In Range Rover Sport

தமிழில் விஜய் (Vijay), அஜீத் (Ajith), சூர்யா (Suriya), கார்த்தி (Karthi) மற்றும் தனுஷ் (Dhanush) என முன்னணி நடிகர்களுடன் காஜல் அகர்வால் நடித்துள்ளார். இவரது திருமணம் கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற நிலையில், அந்த ஆண்டில் மட்டுமே அவரது படங்கள் எதுவும் வெளிவரவில்லை.

ஆனால் 2021, 2022, 2023 மற்றும் 2024 என அதற்கு பிறகு அத்தனை வருடங்களிலும், காஜல் அகர்வாலின் திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. நாங்கள் இங்கே காஜல் அகர்வாலின் அனைத்து மொழி திரைப்படங்களையும் பற்றி பேசி கொண்டுள்ளோம் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

Kajal Aggarwal

இந்த வரிசையில் நடப்பு 2025ம் ஆண்டிலும் அவரது நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளியாகவுள்ளன. இதில், சிக்கந்தர் (Sikandar) மிகவும் முக்கியமானது. ஏ.ஆர். முருகதாஸ் (A.R. Murugadoss) இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில், சல்மான் கான் (Salman Khan) மற்றும் ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna) ஆகியோருடன், காஜல் அகர்வாலும் நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தின் வெளியீட்டு தேதி (Release Date), வரும் மார்ச் 30ம் தேதி என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படத்தின் நிகழ்ச்சி ஒன்றுக்கு காஜல் அகர்வால் வந்து விட்டு சென்ற வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோவில், சொகுசு கார் ஒன்றில் ஏறி, காஜல் அகர்வால் புறப்படுவதை நம்மால் காண முடிகிறது. அது ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் (Range Rover Sport) ஆகும். உண்மையில் காஜர் அகர்வாலின் கார் கலெக்ஸன் (Car Collection) பெரியது.

ரேஞ்ச் ரோவர் வோக் (Range Rover Vogue), ஆடி க்யூ7 (Audi Q7), ஆடி ஏ4 (Audi A4) மற்றும் ஸ்கோடா ஆக்டேவியா (Skoda Octavia) ஆகிய கார்களை எல்லாம் காஜல் அகர்வால் வைத்துள்ளார். இந்த வரிசையில் சுமார் 6 மாதங்களுக்கு முன்புதான் அவர் புத்தம் புதிய ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரை வாங்கினார்.

அப்போதில் இருந்து பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் அவர் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரில்தான் வந்து சென்று கொண்டுள்ளார். இந்த வரிசையில் சிக்கந்தர் திரைப்படத்தின் நிகழ்ச்சிக்கு காஜல் அகர்வால் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரில் வந்தபோதுதான், தற்போது வைரலாக பரவி வரும் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.

ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் கார் தற்போதைய நிலையில் மொத்தம் 2 வேரியண்ட்களில் (Variants) விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த 2 வேரியண்ட்களின் எக்ஸ்-ஷோரூம் விலையும் (Ex-Showroom Price) 1.40 கோடி ரூபாய்தான். ஆன்-ரோடு விலை (On-Road Price) சுமார் 1.75 கோடி ரூபாய் என்ற அளவில் வரும்.

ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரின் பெட்ரோல் மற்றும் டீசல் என 2 வேரியண்ட்களிலும், 3.0 லிட்டர் இன்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் காஜல் அகர்வால் வாங்கியிருப்பது ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரின் பெட்ரோல் வேரியண்ட்டா? அல்லது டீசல் வேரியண்ட்டா? என்பது உறுதியாக தெரியவில்லை.

ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் மிகவும் விலை உயர்ந்த காராக இருந்தாலும் கூட, பாலிவுட் திரையுலக நட்சத்திரங்கள் மத்தியில், மிகவும் பிரபலமாக திகழ்கிறது. பாலிவுட் நடிகர் சித்தாந்த் சதுர்வேதி (Siddhant Chaturvedi), பாலிவுட் பாடகர் கைலாஷ் கெர் (Kailash Kher) ஆகிய நட்சத்திரங்களிடமும், ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் கார் உள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நடிகை காஜல் அகர்வால் பயன்படுத்திய ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரானது, சொகுசு எஸ்யூவி (Luxury SUV) ரகத்தை சேர்ந்தது. செயல்திறன், ஆஃப்-ரோடு திறன்கள், ஸ்டைல் மற்றும் சொகுசு வசதிகள் ஆகிய அம்சங்களை எல்லாம் ஒருங்கிணைத்து, ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரை உருவாக்கியுள்ளனர். இதன் காரணமாகவே செல்வந்தர்கள் மத்தியில் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் பிரபலமாக திகழ்கிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 26, 2025, 17:42 [IST]
English summary
Sikandar star kajal aggarwal spotted in range rover sport worth rs 1 75 crore viral video
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+