ஹீரோக்களையே விஞ்சும் வகையில் சொகுசு கார் வாங்கிய பாடகி... ஷோரூம் விலையை கேட்டதுக்கே மயக்கம் வருது!
பிரபல பாடகி ஒருவர், மிகவும் விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ காரை சொந்தமாக வாங்கியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய பிரபலங்களின் கார் கலெக்ஸன் தொடர்பான பல்வேறு செய்திகளை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் வாசகர்களுக்கு வழங்கியுள்ளது. அத்துடன் பிரபலங்கள் விலை உயர்ந்த புதிய கார்களை வாங்கும் செய்திகளையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் வாசகர்களுக்கு தொடர்ச்சியாக வழங்கி வருகிறது. இந்திய பிரபலங்கள் மத்தியில் சொகுசு எஸ்யூவி கார்கள்தான் மிகவும் பிரபலமாக இருக்கின்றன.

இதை நிரூபிக்கும் வகையில் பிரபல பாடகியான (Singer) ஆஸ்தா கில் (Aastha Gill) தற்போது சொகுசு எஸ்யூவி கார் (Luxury SUV) ஒன்றை வாங்கியுள்ளார். அவர் வாங்கியிருப்பது புத்தம் புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்7 (BMW X7) சொகுசு எஸ்யூவி கார் ஆகும். ஆஸ்தா கில் பாடிய பல்வேறு பாடல்கள் ஏற்கனவே வைரலாகியுள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

அவர் வாங்கியுள்ள எக்ஸ்7 சொகுசு எஸ்யூவி கார், பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் முதன்மையான தயாரிப்புகளில் ஒன்றாகும். மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் (Mercedes Benz GLS) போன்ற கார்களுடன், பிஎம்டபிள்யூ எக்ஸ்7 போட்டியிட்டு வருகிறது. முன் பகுதியில் பிஎம்டபிள்யூ கார்களுக்கே உரித்தான பெரிய கிட்னி க்ரில் அமைப்பை எக்ஸ்7 கார் பெற்றுள்ளது.

இந்த க்ரில் அமைப்பின் இரு பக்கமும் நேர்த்தியான ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரின் பக்கவாட்டு பகுதியை பொறுத்தவரையில், பெரிய அலாய் வீல்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும். இந்த காரின் உருவத்துடன் இந்த அலாய் வீல்கள் நன்றாக பொருந்தி போகின்றன. பின் பகுதியை பொறுத்தவரையில், ஸ்பிளிட் எல்இடி டெயில் லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன் இந்த காரில் ஏராளமான வசதிகளும் இடம்பெற்றுள்ளன. இதில், லேசர் ஹெட்லேம்ப்கள், ஆம்பியண்ட் லைட்டிங், பனரோமிக் சன்ரூஃப், டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், மல்டி-ஃபங்ஷன் ஸ்டியரிங் வீல், வாய்ஸ் அஸிஸ்டன்ட் மற்றும் 5 ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல் போன்ற வசதிகள் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு வகையான இன்ஜின் தேர்வுகளுடனும் பிஎம்டபிள்யூ எக்ஸ்7 கார் கிடைக்கிறது. அத்துடன் பிஎம்டபிள்யூ எக்ஸ்7 கார் மொத்தம் 3 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவை எக்ஸ்டிரைவ்30டி டிபிஇ சிக்னேச்சர் (xDrive30d DPE Signature), எக்ஸ்டிரைவ் 40ஐ (xDrive 40i) மற்றும் எம்50டி (M50d) ஆகும்.

இதில், எக்ஸ்டிரைவ்30டி டிபிஇ சிக்னேச்சர் வேரியண்ட்டில் 3.0 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 261 பிஹெச்பி பவரையும், 620 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. அத்துடன் எம்50டி வேரியண்ட்டிலும் இதே 3.0 லிட்டர் டீசல் இன்ஜின்தான் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வேரியண்ட்டில் இந்த இன்ஜின் 394 பிஹெச்பி பவரையும், 760 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும்.

மறுபக்கம் எக்ஸ்டிரைவ் 40ஐ வேரியண்ட்டில், 3.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 335 பிஹெச்பி பவரையும், 450 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் பிஎம்டபிள்யூ எக்ஸ்7 சொகுசு எஸ்யூவி காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 1.15 கோடி ரூபாய் ஆகும். இது எக்ஸ் ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 1.73 கோடி ரூபாய் ஆகும். இதுவும் எக்ஸ் ஷோரூம் விலை மட்டுமே. ஆன் ரோடு விலை இன்னும் கூடுதலாக வரும். இவ்வளவு விலை உயர்ந்த ஒரு காரைதான், பாடகி ஆஸ்தா கில் தற்போது சொந்தமாக்கியுள்ளார். இந்தியர்கள் தற்போது எஸ்யூவி ரக கார்களை அதிகம் விரும்பி வாங்குகின்றனர்.

இதன் காரணமாக எஸ்யூவி கார்களின் விற்பனை இந்தியாவில் அமோகமாக உள்ளது. அதே சமயம் திரை துறையினரை பொறுத்தவரை, சொகுசு எஸ்யூவி கார்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது. இதற்கு ஆஸ்தா கில் வாங்கியுள்ள பிஎம்டபிள்யூ எக்ஸ்7 கார் ஒரு உதாரணம் மட்டுமே. திரை துறையினர் மத்தியில் சொகுசு செடான் கார்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது என்பதை மறுத்து விட முடியாது.


Click it and Unblock the Notifications








