தினமும் ஒரு காஸ்ட்லி காரை வாங்கற அளவுக்கு இவர் பெரிய ஆளா! இப்பதான் இன்னொரு முகத்தை வெளிய காட்டியிருக்காரு!

இந்தியாவில் மக்கள் ஒரு புதிய காரை வாங்குவதற்கே திணறி கொண்டுள்ளனர். ஆனால் அதே இந்தியாவில் ஒருவர் 3 நாட்களில் 3 கார்களை வாங்கியுள்ளார். 3 நாட்களில் 3 கார்கள் என்பதால், அவற்றை மிகவும் எளிமையான கார்கள் என நீங்கள் நினைக்கலாம். ஆனால் அவை அனைத்துமே மிகவும் விலை உயர்ந்த கார்கள் ஆகும். நாம் தற்போது இங்கே பேசி கொண்டுள்ள நபரின் இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கம், கடந்த 3 நாட்களாக புதிய கார்களை வாங்கியிருப்பது தொடர்பான பதிவுகளால் நிரம்பி வழிகிறது.

கடந்த ஜனவரி 4ம் தேதி அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், ஆடி க்யூ8 (Audi Q8) காரை வாங்கியிருப்பதாக கூறியுள்ளார். அதற்கு மறுநாள், அதாவது கடந்த ஜனவரி 5ம் தேதி வெளியிட்ட பதிவில், போர்ஷே 718 பாக்ஸ்டர் (Porsche 718 Boxster) காரை வாங்கியிருப்பதாக தெரிவித்துள்ளார். சரி, இத்துடன் நிறுத்தி கொள்வார் என பார்த்தால், அதுதான் இல்லை.

Singer B Murali Krishna Buys Audi Q8 Porsche 718 Boxster Mini Cooper Countryman In 3 Days

அதற்கு மறுநாளே, அதாவது கடந்த ஜனவரி 6ம் தேதியே, மற்றொரு காரை வாங்கியது தொடர்பான பதிவை அவர் வெளியிட்டுள்ளார். இந்த முறை அவர் வாங்கியதாக தெரிவித்தது, மினி கூப்பர் கன்ட்ரிமேன் (Mini Cooper Countryman) கார் ஆகும். ஆக மொத்தத்தில் 3 நாட்களில் 3 விலை உயர்ந்த கார்களை அவர் வாங்கியுள்ளார்.

கார்களின் பெயர்களை கேட்டதுமே, இவை அனைத்தும் மிகவும் விலை உயர்ந்தவை என்பது உங்களுக்கு புரிந்திருக்கும். இதில், ஆடி க்யூ8 கார் தற்போதைய நிலையில் 1.17 கோடி ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபக்கம் அவர் வாங்கியுள்ள போர்ஷே 718 பாக்ஸ்டர் கார் தற்போது இந்தியாவில் விற்பனையிலேயே இல்லை.

Singer B Murali Krishna

எனவே இறக்குமதி உள்பட வேறு ஏதேனும் ஒரு வழியில் அவர் இந்த காரை வாங்கியிருக்கலாம். ஆனால் கடைசியாக இந்தியாவில் விற்பனையில் இருந்தபோது, 1.41 கோடி ரூபாய் என்ற விலையில் இந்த கார் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இறுதியாக அவர் வாங்கிய மினி கூப்பர் கன்ட்ரிமேன் கார் தற்போதைய நிலையில் 48.10-49 லட்ச ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இவை அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இவ்வளவு விலை உயர்ந்த கார்களை எல்லாம் அடுத்தடுத்து வாங்கியிருப்பது, பி. முரளி கிருஷ்ணா (B. Murali Krishna) ஆவார். இவர் மலையாள மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள பாடகர்களில் ஒருவர் ஆவார். இவருக்கு தமிழகத்திலும் கூட ரசிகர்கள் உள்ளனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: 3 நாட்களில் 3 புதிய கார்களை வாங்குவது என்பதெல்லாம் சாதாரணமான விஷயம் கிடையாது. அதுவும் இவை அனைத்துமே மிகவும் விலை உயர்ந்த கார்கள் என்பது கூடுதல் சிறப்பம்சம். இதன் மூலம் பாடகர் பி. முரளி கிருஷ்ணா மிகவும் தீவிரமான ஒரு கார் காதலர் என்பது நமக்கு தெளிவாக புரிகிறது.

அவர் வாங்கியுள்ள இந்த 3 கார்களுமே, தொழில் அதிபர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் திரையுலக நட்சத்திரங்கள் உள்ளிட்ட இந்திய பிரபலங்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்கள் ஆகும். இதுவரை பாடகராக மட்டுமே அறியப்பட்ட பி. முரளி கிருஷ்ணா, கார் காதலர் என்ற தன்னுடைய இன்னொரு முகத்தை தற்போதுதான் வெளிக்காட்டியிருப்பதாக சமூக வலை தளங்களில் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from DriveSpark

Article Published On: Tuesday, January 7, 2025, 18:36 [IST]
English summary
Singer b murali krishna buys audi q8 porsche 718 boxster mini cooper countryman in 3 days
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+