பாடிய பாடல்கள் 10 கூட இருக்காது... ரேஞ்ச் ரோவரை வாங்கிய பாடகர்! விலையை கேட்டால் இன்னைக்கு தூக்கம் வராது
ரேஞ்ச் ரோவர் (Range Rover) கார்களுக்கு உலகம் முழுவதிலும் வரவேற்பு உள்ளதை பற்றி நான் கூற வேண்டியது இருக்காது என நினைக்கிறேன். ஏனெனில், அந்த அளவிற்கு சினிமா பிரபலங்கள் போட்டிக் போட்டுக் கொண்டு ரேஞ்ச் ரோவர் கார்களை வாங்குவதை தொடர்ச்சியாக நமது செய்தி தளத்தில் பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் தற்போது இளம் பாடகர் ஒருவர் ரேஞ்ச் ரோவர் காரை வாங்கியுள்ளார். யார் அந்த பாடகர் என்பதையும், அவர் வாங்கியுள்ள ரேஞ்ச் ரோவர் காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
உலகளவில் பிரபலமான எஸ்யூவி கார் நிறுவனமான லேண்ட் ரோவர் (Land Rover) உற்பத்தி செய்யும் தரமான கார்களுள் ரேஞ்ச் ரோவர் கார்களும் அடங்குகின்றன. அத்தகைய தரமான ரேஞ்ச் ரோவர் கார்களுள் ஒன்று, ரேஞ்ச் ரோவர் வோக் (Vogue) ஆகும். இந்தியாவில் இதன் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.1.66 கோடியாக உள்ளது.

வோக் காரில் 4.4 லிட்டர் ட்வின் டர்போ வி8 பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. 0-இல் இருந்து 100kmph வேகத்தை இந்த காரில் வெறும் 4.6 வினாடிகளில் எட்டிவிடலாம். இத்தகைய விலையுயர்ந்த காரை தற்போது வாங்கியிருக்கும் இளம் பாடகர், பி முரளி கிருஷ்ணா (B Murali Krishna) ஆவார்.
தெலுங்கு சினிமா துறையில் பணிபுரிந்தவரான பி முரளி கிருஷ்ணா பாடகர் மட்டுமில்லை, அதற்கு முன் இவர் திரைப்பட ஒளிப்பதிவாளர் ஆவார். ஒளிப்பதிவாளர், பாடகர் இரண்டும் முற்றிலும் வெவ்வேறான தனித்திறமைகளை கொண்ட தொழில்கள் ஆகும். இருப்பினும், பி முரளி கிருஷ்ணா இரண்டிலும் திறமை வாய்ந்தவராக விளங்குகிறது.

2022இல் இவரது ஒளிப்பதிவில் 'இந்துவதானா' என்கிற தெலுங்கு படம் திரைக்கு வந்தது. அதன்பின், 2023இல் ஒரு மலையாள திரைப்படத்திற்கு பாடல்களை பாடி கொடுத்தார். இவ்வாறு ஒரே நேரத்தில் சினிமா துறையில் தனது பல்வேறு திறமைகளை வெளிகாட்டிவரும் பி முரளி கிருஷ்ணா சில மலையாள ஆல்பம் பாடல்களையும் பாடியுள்ளார்.
அவற்றுள் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், 2022ஆம் ஆண்டில் ஃபிபா கால்பந்து போட்டிக்காக இவர் பாடிய 'நெஞ்சில் மரடோனா' பாடல் கேரளாவில் பிரபலமாகியது. இதற்கிடையில், அவ்வப்போது நேரலை நிகழ்ச்சிகளிலும் தான் பாடல்களை பாடிவரும் பி முரளி கிருஷ்ணா, புதியதாக ரேஞ்ச் ரோவர் வோக் காரை வாங்கியிருப்பதை தனது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் படங்கள் உடன் வெளியிட்டுள்ளார்.

மார்க்கெட்டில் ஸ்டாண்டர்ட் மற்றும் லாங் வீல்பேஸ் என 2 விதமான வேரியண்ட்களில் ரேஞ்ச் ரோவர் வோக் கார் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ரேஞ்ச் ரோவர் காரில் காற்று சுத்திகரிப்பான், எலக்ட்ரானிக் பிரேக்ஃபோர்ஸ், ஜிபிஎஸ் நேவிகேஷன், ப்ளூடூத் சப்போர்ட், யுஎஸ்பி சப்போர்ட், 4-நிலைகளில் க்ளைமேட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்ட அதிநவீன வசதிகள் வழங்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஸ்டாண்டர்ட், லாங் வீல்-பேஸ் இந்த இரண்டில் எந்த வேரியண்ட்டை பாடகர் பி முரளி கிருஷ்ணா வாங்கியுள்ளார் என்பது தெரியவில்லை. மேலும், இந்த தொகுப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ரூ.1.66 கோடி என்பது காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். ஆன்-ரோடு விலை இன்னும் பல இலட்சங்கள் அதிகமாக வரும்.


Click it and Unblock the Notifications









