ஒரே காரை மீண்டும் மீண்டும் வாங்கும் பாடகர்... ஒன்னோட விலையே இத்தனை கோடியா? அப்படி அந்த காரில் என்ன இருக்கு?

பாடகர் ஒருவர் மிகவும் விலை உயர்ந்த ஒரு காரை மீண்டும் மீண்டும் வாங்கி வருகிறார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஒரே காரை மீண்டும் மீண்டும் வாங்கும் பாடகர்... ஒன்னோட விலையே இத்தனை கோடியா? அப்படி அந்த காரில் என்ன இருக்கு?

இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ள லம்போர்கினி நிறுவனத்தின் கார்களில் ஒன்று உருஸ் (Lamborghini Urus). இது எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்திய வாடிக்கையாளர்கள் லம்போர்கினி உருஸ் காரின் மீது மிகவும் ஆர்வமாக இருப்பதற்கு இது மிக முக்கியமான காரணங்களில் ஒன்று. பொதுவாக லம்போர்கினி நிறுவனத்தின் கார்களை இந்திய சாலைகளில் ஓட்டுவது சிரமமான காரியம்.

ஒரே காரை மீண்டும் மீண்டும் வாங்கும் பாடகர்... ஒன்னோட விலையே இத்தனை கோடியா? அப்படி அந்த காரில் என்ன இருக்கு?

இந்திய சாலைகள் மிகவும் மோசமாக இருப்பதால், 'க்ரவுண்ட் க்ளியரன்ஸ்' (Ground Clearance) போன்ற விஷயங்களில் பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும். ஆனால் லம்போர்கினி உருஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது என்பதால், இந்த காரை இந்திய சாலைகளில் மிகவும் எளிதாக ஓட்ட முடியும். நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்றதாக இருப்பதால், செல்வந்தர்களின் செல்லக்குட்டியாக இந்த கார் உள்ளது.

ஒரே காரை மீண்டும் மீண்டும் வாங்கும் பாடகர்... ஒன்னோட விலையே இத்தனை கோடியா? அப்படி அந்த காரில் என்ன இருக்கு?

லம்போர்கினி நிறுவனம் இந்திய சந்தையில் தற்போது வரை 200க்கும் மேற்பட்ட உருஸ் கார்களை விற்பனை செய்துள்ளது. இது உண்மையிலேயே மிகப்பெரிய விஷயம் என்பதில் சந்தேகமில்லை. லம்போர்கினி உருஸ் மிகவும் விலை உயர்ந்த காராக இருக்கும் நிலையில், அதனை இத்தனை பேர் வாங்கியிருப்பது ஆச்சரியம் அளிக்க கூடிய விஷயம்தான்.

ஒரே காரை மீண்டும் மீண்டும் வாங்கும் பாடகர்... ஒன்னோட விலையே இத்தனை கோடியா? அப்படி அந்த காரில் என்ன இருக்கு?

லம்போர்கினி உருஸ் காரில், 4.0 லிட்டர், ட்வின்-டர்போசார்ஜ்டு, வி8 பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 650 பிஎஸ் பவரையும், 850 என்எம் டார்க் திறனையும் வாரி வழங்க கூடியது. இந்த இன்ஜினுடன் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை இந்த கார் வெறும் 3.6 வினாடிகளில் எட்டி விடும்.

ஒரே காரை மீண்டும் மீண்டும் வாங்கும் பாடகர்... ஒன்னோட விலையே இத்தனை கோடியா? அப்படி அந்த காரில் என்ன இருக்கு?

அதே நேரத்தில் லம்போர்கினி உருஸ் எஸ்யூவி காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 305 கிலோ மீட்டர்கள் ஆகும். அதிக எடை கொண்ட எஸ்யூவி காராக இருந்தாலும், செயல்திறனில் லம்போர்கினி உருஸ் அமர்க்களப்படுத்தும் என்பதற்கு, இந்த எண்களே சாட்சி. இந்தியாவில் லம்போர்கினி உருஸ் காரின் விலை 3.55 கோடி ரூபாயில் இருந்து தொடங்குகிறது.

ஒரே காரை மீண்டும் மீண்டும் வாங்கும் பாடகர்... ஒன்னோட விலையே இத்தனை கோடியா? அப்படி அந்த காரில் என்ன இருக்கு?

இவ்வளவு விலை உயர்ந்த லம்போர்கினி உருஸ் காரை பாடகர் ஒருவர் தற்போது வாங்கியுள்ளார். அவர் வேறு யாருமல்ல. இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக உள்ள பாட்ஷாதான் (Badshah) அந்த பாடகர். ஹிந்தி மற்றும் பஞ்சாபி இசைகளில், பாட்ஷா மிகவும் பிரபலமான பாடகராக இருந்து வருகிறார். பாடகர் மட்டுமல்லாது, பட தயாரிப்பாளர் மற்றும் தொழிலதிபர் என இவருக்கு பல முகங்கள் உள்ளன.

ஒரே காரை மீண்டும் மீண்டும் வாங்கும் பாடகர்... ஒன்னோட விலையே இத்தனை கோடியா? அப்படி அந்த காரில் என்ன இருக்கு?

இங்கே மிகவும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், பாட்ஷா தற்போது வாங்கியிருப்பது அவரது 2வது லம்போர்கினி உருஸ் கார் ஆகும். பாடகர் பாட்ஷா புதிய உருஸ் காரை டெலிவரி எடுத்த புகைப்படங்களை லம்போர்கினி டெல்லி சமூக வலை தளங்களில் பகிர்ந்துள்ளது. பாட்ஷா முதலில் வாங்கிய லம்போர்கினி உருஸ், யூஸ்டு-கார் ஆகும்.

ஒரே காரை மீண்டும் மீண்டும் வாங்கும் பாடகர்... ஒன்னோட விலையே இத்தனை கோடியா? அப்படி அந்த காரில் என்ன இருக்கு?

பாட்ஷா ஏன் முதலில் யூஸ்டு லம்போர்கினி உருஸ் காரை வாங்கி விட்டு, தற்போது புதிதாகவும் மேலும் ஒரு லம்போர்கினி உருஸ் காரை வாங்கியுள்ளார்? என்பது சரியாக தெரியவில்லை. ஒருவேளை காத்திருப்பு காலத்தை குறைப்பதற்காக அவர் இப்படி செய்திருக்கலாம். லம்போர்கினி உருஸ் காருக்கு ஏற்கனவே காத்திருப்பு காலம் மிகவும் அதிகமாக உள்ளது.

ஒரே காரை மீண்டும் மீண்டும் வாங்கும் பாடகர்... ஒன்னோட விலையே இத்தனை கோடியா? அப்படி அந்த காரில் என்ன இருக்கு?

நிலைமை இப்படி இருக்கும்போது, கஸ்டமைசேஷன் செய்தால், காத்திருப்பு காலம் இன்னும் அதிகரிக்கும். எனவே காத்திருப்பு காலத்தை தவிர்ப்பதற்காக பாடகர் பாட்ஷா முதலில் ஒரு லம்போர்கினி உருஸ் காரை செகண்ட்-ஹேண்ட் மார்க்கெட்டில் வாங்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. இரண்டாவதாக மேலும் ஒரு லம்போர்கினி உருஸ் காரை வாங்கியுள்ள பாடகர் பாட்ஷாவிற்கு தற்போது ரசிகர்கள் சமூக வலை தளங்களின் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஒரே காரை மீண்டும் மீண்டும் வாங்கும் பாடகர்... ஒன்னோட விலையே இத்தனை கோடியா? அப்படி அந்த காரில் என்ன இருக்கு?

லம்போர்கினி உருஸ் தவிர பாடகர் பாட்ஷாவிடம் இன்னும் ஏராளமான விலை உயர்ந்த கார்கள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். மிகவும் அதிகமாக சம்பாதிக்க கூடிய பிரபலமான மனிதர்கள் யூஸ்டு கார் மார்க்கெட்டில், கார்களை வாங்குவார்களா? என்ற சந்தேகம் உங்களுக்கு இங்கே வரலாம். சாதாரண மனிதர்களை போலவே, பிரபலங்களும் தற்போது யூஸ்டு கார் மார்க்கெட்டில் கார்களை வாங்குகின்றனர்.

ஒரே காரை மீண்டும் மீண்டும் வாங்கும் பாடகர்... ஒன்னோட விலையே இத்தனை கோடியா? அப்படி அந்த காரில் என்ன இருக்கு?

ஆனால் அவர்கள் வாங்குவது சொகுசு மற்றும் ஸ்போர்ட்ஸ் கார்களாக இருக்கும். அவ்வளவுதான். காத்திருப்பு காலத்தை தவிர்ப்பதற்காகவும், பணத்தை சேமிப்பதற்காகவும் பிரபலங்கள் பலர் தற்போது யூஸ்டு கார் மார்க்கெட்டில் கார்களை வாங்க தொடங்கியுள்ளனர். சினிமா நட்சத்திரங்கள் மட்டுமல்லாது கிரிக்கெட் வீரர்களும் கூட செகண்ட்-ஹேண்ட் கார்களை வாங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Friday, July 29, 2022, 14:59 [IST]
English summary
Singer badshah buys his second lamborghini urus details here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+